தடங்கள்

kavithai ஜூலை 13, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:22 பிப

நான் யாருமில்லை
*******மழைக் காற்றில்
*******மெல்லிய‌ குளிர்
*******த‌கிக்கும் பாலையில்
*******தாங்க‌வொணா தாக‌ம்

நான் நானுமில்லை
******* புனித‌ நூலில்
******* விளித்திருக்கும் சொல்
******* பிர‌ப‌ஞ்ச‌த்தை ஏந்தியிருக்கும்
******* ஒற்றை விர‌ல்

நான் நீயாயிருக்க‌லாம்
*******துய‌ருற்ற‌ உன் தருண‌ங்க‌ளை
*******தாங்கியிருக்கும் உன் த‌னிமை
*******உன் முத‌ல் ப‌சிக்காய்
*******க‌சிந்துதிரும் முலை பால்

Advertisements
 

ithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:21 பிப

நாமில்லா வீட்டில்
அன‌ண‌த்து கிட‌க்கின்ற‌ன
ந‌ம் த‌லைய‌ணைக‌ள்!kav

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:21 பிப

மீண்டும் வ‌ந்த‌து
அந்த‌ இருள்
த‌வ‌ற‌விட்ட‌ ந‌ம்
முத்த‌ங்களுட‌ன்!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:20 பிப

எழுதும் வ‌ரிக‌ளிலெல்லாம்
அவ‌ள் செத்துகொண்டிருக்கிறாள்
தீராத‌ தாக‌த்தால்
நிர‌ம்பியிருக்கும் காகித‌த்தில்
க‌டைசி புள்ளியில்
அவ‌ள் உயிர்கொள்ள‌
கூடும்!

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:20 பிப

ப‌ங்கு ச‌ந்தையின்
ஏற்ற‌த்தில் லாப‌ம‌டைந்திருந்தோம்
தேர்த‌ல் முடிவுக‌ளின்
கொண்டாட்ட‌த்தில் அல்ல‌து துக்க‌த்தில்
ஆழ்ந்திருந்தோம்
பட்டு சேலையை ச‌ட்டையாக‌
அணிந்து வ‌ந்த‌ ந‌டிக‌னுக்கு
சூறை காசுக‌ள் வீசியிருந்தோம்
கொத்து குண்டுக‌ளால் ஒரு
குழ‌ந்தை உட‌ல் பிள‌க்க‌ப்ப‌டும்போது

 

kavithai

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:19 பிப

மேக‌ங்க‌ள் க‌ட‌லில் க‌விழ்ந்து
என்னை தூக்கி நிலா ம‌றைத்த‌போது
அவ‌ள் துக்கித்திருந்தாள்
பைத்திய‌த்தின் பித‌ற்ற‌லாய்
அவ‌ள் உத‌டுக‌ள்
என் பெய‌ர் அர‌ற்றிகொண்டிருந்த‌ன‌
அவ‌ள் க‌ண்க‌ள் இருளை
இடைவிடாது துடைத்த‌ழித்துகொண்டிருந்த‌து
முத‌ன்முறை ச‌ந்திப்பில்
என்பெய‌ர் விளித்து
நீயா என்ற‌ அவ‌ள் தேட‌லை
தேடியெடுத்து கொண்டிருந்தேன்
வான‌ம் விட்டிற‌ங்கி அவ‌ள்
தோள் தொட்ட‌போது
திரும்பிய‌ அவ‌ள் க‌ண்க‌ளில்
தீப்ப‌ந்த‌ம்
வான‌ம் அதிர்ந்த‌து
ம‌ழை பொழிந்தாள்
“எங்கே போன‌
குப்ப‌ குமிஞ்சு கிட‌க்கு
கொட்டிட்டு வா!”

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:18 பிப

இர‌க‌சிய‌ங்க‌ள் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌
இர‌வில் ஒளிந்திருக்கின்ற‌ன
உன் முத்த‌ங்க‌ள்
திருட‌ன் நானென‌
தீர்ப்பு ப‌டிக்கிறாய்
விடிய‌லில் என்
க‌ன்ன‌த்தின் த‌ட‌ம் காட்டி!