தடங்கள்

நீயில்லை மார்ச் 29, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 5:29 பிப

நிஜங்கள் என்னை
நேர்காணல் நடத்தும்போது
நேற்றைய நிழலாய்
நீ திசைகாட்டி செல்கிறாய்!

நீயா இது….
என் முன் நிற்கும் நீயா இது?
குளக்கரை பாசிகளாய் என்னுள்
படர்ந்து பரந்திருக்கும்
நீயில்லை நீ…….!

கருணை வழிந்த கண்களில்
கொடூரம் சிந்தும்
நீயில்லை நீ…….!

அளவிலா அன்புடையவனெயென நானும்
அதிகரிக்கும் அன்புகொண்டவளெயென நீயும்
நம்மால் சித்தரிக்கப்பட்ட
ஒரு மழைகாலத்தில் என்னுடனிருந்த
நீயில்லை நீ………..!

உன்னுடல் இயக்கும்
உன் இதயத்துடிப்போடு
இயங்கிகொண்டிருந்த நாட்களில்
உன் ஒற்றை புன்னகையால் என்
உயிருக்குள் ஒளிந்த நீ
நீயில்லை……….!

அன்று நான் வேறு,
நீ வேறு என்ற நீ
நீயில்லை…….
நிச்சயமாக ‘நான்’ பிரசவித்த
நீயில்லை.

Advertisements
 

Wipro recruiting freshers மார்ச் 24, 2007

Filed under: Freshers heaven — bashakavithaigal @ 4:21 பிப

Wipro rectruiting bsc(any major with maths),bca,bcm graduates
for their WASE program.
can see details in http://careers.wipro.com/wase

 

நீ வேண்டும்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 4:16 பிப

நிசப்தமான நள்ளிரவுகளில்
மௌனத்தின் தனிமையில்
உன்னைத்தேடி கதறும் குரல்
உனக்கு கேட்கின்றதா….

உன் தோள்பிடித்து
எழ வைக்கிறாய் பின்
தூர சென்று
அழ வைக்கிறாய்

எனக்கென எழும்பும்
முதல் கரவொலி
உனக்கே உரிமையானது
என்னுள் எழும்வலி
உனக்கு மட்டுமே
சாத்தியமானது!

ஒரு குழந்தையென
அள்ளியெடுத்து என்னை
உச்சிமுகரும் வேளையில்
என் கர்வத்தை
உன் காலடியிலிட்டு
சிதைத்துவிடுகிறாய்!

தனிமை சுடுகிறது
என் சகியே
உன் உள்ளங்கைக்குள் எனக்கொரு
உலகம் செய்துவிடு!

உன்
கருவறையில் மீண்டும்
உருத்தரிப்பேனென்றே கர்த்தன்
வாக்களித்தால் இப்பொழுதே
இந்த உயிர்
விட்டுவிடுவேன்!

 

பிரிய தோழி மார்ச் 11, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:00 பிப

உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்……………………………

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மௌனத்தால் சொல்கிறேன்
“போய் வா என்
பிரிய தோழி!”

 

Companies Recruiting Freshers மார்ச் 9, 2007

Filed under: Freshers heaven — bashakavithaigal @ 7:39 முப

1)Infosys

2)Wipro

3)TCS

4)CTS

5)Robert Bosch

6)USTechnology

7)Adventnet chennai

8)Syntel chennai