தடங்கள்

ஒக்ரோபர் 8, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:24 பிப

/THE INSIDE OF THE OUTSIDE OF THE INSIDE/
ஒரு பெரிய காடு இருந்துச்சாம் .அந்த காட்டுல சிங்கங்கள்,யானைகள்,புலிகள்,மான்கள் என பல மிருகங்கள் ஒத்துமையா வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள் ஒரு சிங்கத்துக்கும் யானைக்கும் நடந்த வாய்க்கா சண்டையில சிங்கங்கள் யானையை தவிர்த்து எல்லா மிருகங்களையும் மீட்டிங் கூப்பிட்டு இந்த யானை இந்த காட்ட சேர்ந்ததா இருக்காது நம்மள யாருக்காவது இப்படி தும்பிக்கை இருக்கா யானைக்கு மட்டும்தான் இருக்கு அதனால அத இந்த காட்ட விட்டு அனுப்பனும்னு சொல்லிச்சாம். இந்த இரகசிய தீர்மானம் தெரிஞ்ச யானைங்கள்ள பாதி அதுவா காட்ட விட்டு போச்சாம் மீதிய இந்த மிருகங்கள் கடிச்சு கொன்னு போட்டுச்சாம். யானை இல்லாத காட்ல வாழைபழம் நிறைய கெடைக்க குரங்குக்கும் மற்ற சில தாவர பட்சிணிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் .சிங்கம் சரியான முடிவு எடுத்துச்சுனு பாராட்டுச்சாம். அப்புறம் கொஞ்ச நாளைக்கு பிறகு இதே மாதிரி புலிகளையெல்லாம் சிங்கங்களோட ஆணைப்படி எல்லா மிருகங்களும் காட்ட விட்டு அனுப்பிருச்சாம். இப்படியே ஒவ்வொரு மிருகமா காட்ட விட்டு போக கடைசியில சிங்கங்கள் மட்டுமே காட்டுல இருந்துச்சாம் விரட்ட மிருகங்கள் இல்லாம அதுக்கு போரடிச்சுச்சாம். அப்பதான் சீன்ல வந்த ஆலோசகர் நரி எல்லா சிங்கமும் ஒன்னுலனு சொல்லி அந்த சிங்கத்துக்குள்ளயே தரம் பிரிச்சு சொல்லிச்சாம்.சிங்கங்கள்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு அடிச்சுக்கிட்டு செத்துபோச்சாம். சிங்கத்தோட வேட்டைய சார்ந்து வாழ்ந்த நரியும் பட்டினில செத்து போச்சாம்.

புனித நூல்கள் எழுதறதுல பிசியா இருந்த கடவுள் ஏதேச்சையா நிமிர்ந்து பார்த்தாராம். என்னடா காட்டுல இருந்து ஒரு சத்தமும் இல்லனு காட்டுக்கே வந்துட்டாராம். ஒரு மிருகமும் இல்லாதத பார்த்து அவரு குழம்பிட்டாராம். அப்புறம் சரி ஒன்னும் பிரச்சனையில்ல நல்லதுதானு அவரு காட்டின் இயல்பறியாமல் உலகத்தோட முதல் மனுஷனையும் மனுஷியையும் படைச்சுட்டி மறுபடி புக் எழுத போயிட்டாராம்.

காடு ஒரு சாத்தானை சூல் கொண்டது.

Advertisements