தடங்கள்

க‌ன‌வு ஜூன் 15, 2011

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:58 பிப

இர‌க‌சிய‌ங்கள‌ற்ற‌ இர‌வில்
இரை தேடும் பூனையென‌
க‌ன‌வில் நுழைகிறாய் ‍‍பின்
ந‌ம‌தான பொய்க‌ள் உதிர்கின்ற‌ன
க‌டைசி பொய் உதிரும் த‌ருண‌த்தோடே
க‌ன‌வு க‌லைகிற‌து
எஞ்சிய‌ இர‌வின் வ‌ழி
இற‌ங்கி புள்ளியாய் ம‌றைகிறாய்
பின் உதிரும் க‌ன‌வை
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ந‌னைக்கின்ற‌ன‌
நிலா துடைக்கிற‌து

Advertisements