தடங்கள்

பெண் எழுத்தாளர்களும் ஆணாதிக்க வாசகனும்: ஜூன் 12, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:15 பிப

பெண் எழுத்தாளர்களும் ஆணாதிக்க வாசகனும்:

படைப்பில் பெண் படைப்பு ஆண் படைப்பு என்று பேதம் பார்க்க முடியுமா? அங்கனம் ஒரு படைப்பை நிராகரிக்கத்தான் முடியுமா? ஆனால் ஒரு காலத்தில் தமிழில் நாவல் எழுதிய லட்சுமி சிவசங்கரி இந்துமதி முதல் இன்று பெரும்பாலான டை ஹார்ட் வாசகிகளை வைத்திருக்கும் ரமணி சந்திரன் வரை குடும்பத்தையும் அது சார்ந்த அமைப்புகளையும் தாண்டி வெளியே பெரும்பாலும் எழுதுவதில்லை என்ற காரணத்தால் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் என்றால் ஒரு காலத்தில் ஒரு அவெர்ஷன் இருந்தது. மில்ஸ் அண்ட் பூன் கதைகளை படிப்பவர்களுக்கும் ஒரு கட்டத்தில் ஒரு அவெர்ஷன் வருவதை போல். அப்போ ஆண் எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதுவதில்லையா என்றால் குறைவுதான் என்பது என் சிறிய அபிப்ராயம். குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என்ற சலிப்பூட்டும் காவித்தை எழுதிய சு.ராதான் ஜெ.ஜெ சில குறிப்புகள் தோட்டியின் மகன்(மொழிபெயர்ப்பு என்றாலும்) எழுதினார்.
இன்றை படைப்பாளிகளில் சல்மாவின் கவிதைகளும், தமிழ்நதியின் தமிழ் ததும்பும் கவிதை கட்டுரைகளும் எவருக்கும் சலித்ததில்லை.இந்த தருணத்தில் நான் தற்கொலை செய்துகொண்ட ஈழ கவிஞர் சிவரமணியை நினைவு கூர்கிறேன். நாவல் என்ற அளவில் இந்த படைப்பாளிகள் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது இரண்டாம் ஜாமங்களின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றாலும். தமிழில் சர்மிளா எழுதிய உம்மத் நம்பிக்கை தருகிறது. பர்ஸா(மலையாளம் மூலம்) எனக்கு பிடித்திருந்தது கதை எழுதிய பெண் எழுத்தாளர் கதிஜாவின் முகம் அறிந்திராவிட்டாலும். Urvashi Butalia எழுதிய த அதர் சைட் ஆப் சைல்ன்சும் நன்றாக உள்ளது. தமிழ் சூழலில் தமிழ் நாட்டில் பெண் எழுத்தாளர்கள் இன்னும் பெரும் படைப்பை எழுதும் வாய்ப்பு இருந்தும் இன்னும் உபயோகப்படுத்தவில்லை என்றே இந்த ஆணாதிக்க வாசகன் சொல்லிகொள்கிறேன்.

Advertisements