தடங்கள்

இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுதே ஓகஸ்ட் 5, 2009

tab

இந்த‌ த‌ட‌வை குழ‌ப்ப‌ங்கள் அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ வ‌ந்து சேர்ந்த‌து. அறியாத‌ வ‌ய‌தில் த‌ந்தையின் இற‌ப்பு சான்றித‌ழ் வாங்க‌,ப‌த்திர‌ ப‌திவு செய்ய‌ அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌த்தில் மேஜை மேஜையாக‌ அலைந்த‌ அலைக்க‌ழிப்புக‌ளுக்கு பிற‌கு அர‌சாங்க‌ அலுவ‌ல் என்றால் ஒரு பெரிய‌ ஒவ்வாமை ஏற்ப‌ட்டு விட்ட‌து.

குழ‌ப்ப‌ம் 1: ச‌மீப‌த்தில் திரும‌ண‌ம் அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌த்தில் ப‌திவு செய்ய‌ வேண்டுமென அர‌சாணை வெளியிடப்ப‌ட்ட‌து. இது திரும‌ண‌ முறைகேடுக‌ளை த‌டுக்க‌ உத‌வும் த‌விர‌ பிற‌ ச‌லுகைக‌ளுக்கும் உத‌வும் என‌ அறிவறுத்த‌ப்ப‌ட்ட‌து. ந‌ல்ல‌ குடிம‌க‌னாய் ம‌க‌ன் ம‌னைவி ச‌கித‌ம் மீண்டுமொருமுறை முறைப்ப‌டி திரும‌ண‌ம் செய்ய‌(ப‌திவு செய்ய‌) அத‌ற்கான‌ அலுவ‌ல‌க‌ம் சென்றேன். சிறுபான்மை இன‌த்தை சேர்ந்த‌வ‌ன் என்ப‌தால் ப‌திவுக்கு பிற‌கு ஒரு மாத‌ம் க‌ழிந்துதான் திரும‌ண‌ சான்றித‌ழ் த‌ருவ‌தாக‌ கூறிவிட்டார்க‌ள்.என‌து அவ‌ச‌ர‌ம் அங்கு செல்லுப‌டியாக‌வில்லை. செல்லுப‌டியாக‌ கூடிய குறுக்கு வ‌ழிக‌ளில் என‌க்கு ந‌ம்பிக்கையுமில்லை. எந்த‌ இன‌மாக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ள் ப‌ள்ளிக‌ளிலோ,ச‌ர்ச்க‌ளிலோ பெற‌ப்ப‌டும் திரும‌ண‌ சான்றித‌ழ் ம‌ட்டும் ப‌த்தாது அர‌சாங்க‌ சான்றித‌ழ் வேண்டும் என்ற‌ ச‌மத்துவ‌ம் க‌டைபிடிக்கும் அர‌சு சில ச‌மூக‌த்தவ‌ர் ம‌ட்டும் ஒரு மாத‌ம் க‌ழிந்தே சான்றித‌ழ் பெற‌ முடியும் என்று கூறுவ‌து ஏன்?
சான்றித‌ழ் பெற‌ ‘க‌வ‌னிப்பு’ 500. அர‌சாங்க‌ ந‌ல்லெண்ண‌ம் 500 ரூபாயில் அதிகாரிக‌ளால் என‌க்கு அசிங்க‌மாக‌ தெரிந்த‌து.

ஒவ்வொரு த‌ட‌வை போகும்போதும் 500 எடுத்து வைக்க‌ வேண்டும் அது த‌விர‌ டைப் அடிக்கிற‌வ‌,த‌ண்ணீ பிடிக்கிற‌வ‌ எல்லாத்துக்கும் 100 த‌ர‌ வேண்டும். இது எல்லாம் முடிந்து சான்றித‌ழ் கையில் வ‌ரும்போது ஸ்வீட் வாங்கி வா என்று அன்பு அதிகார‌ம்(!!!!) வேறு. அர‌சாங்க‌ம் அறிவிக்கும்  திட்டங்க‌ள் அடித‌ட்டு ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ணாகிற‌தோ இல்லையோ அதிகாரிக‌ளின் பைகளை நிர‌ப்ப‌ பய‌ன்ப‌டுகிற‌து

இப்ப‌டி எல்லா ந‌டைமுறைக‌ளுக்கும் ‘க‌வ‌னிப்பு’ வேண்டுமென்றால் சாம‌ன்ய‌ன் எப்ப‌டி பிழைப்பான்?. இல்லை அவ‌னை ப‌ற்றி யாருக்கும் அக்க‌ரை இல்லையா? இல்லை அந்த‌ ப‌ண‌த்தை அவ‌ன் தேர்த‌ல்க‌ளின்போது ச‌ம்பாதித்துகொள்கின்றானா? அப்ப‌டியானால் சாம‌ன்யனின் நிலையை க‌ருத்தில்கொண்டு வ‌ருட‌த்திற்கு ஒரு தேர்த‌ல் வருமா?????

நோக்க‌த்தில் ந‌ல்லெண்ண‌ம் கொண்ட‌ அர‌சு ந‌டைமுறையிலும் அதை ந‌டைமுறைப‌டுத்தும் அதிகாரிக‌ளிட‌மும் சிறுது அக்க‌ரை செலுத்த‌லாம்.இல்லையென்றால் ப‌த்திரிகை அடித்து ஊர்,சாமி சாட்சியாய் நடைபெறும் திரும‌ண‌ ந‌டைமுறை சிக்க‌ல்க‌ளை விட‌ இது அதிக‌மாகும்.

குழ‌ப்ப‌ம் 2:

நாடோடி மென்பொருள் வாழ்க்கையில் இட‌மாற்ற‌ம் த‌விர்க்க‌ முடியாத‌தாகிற‌து. அப்ப‌டி ஒரு இட‌மாற்ற‌த்தில் கேஸ் இணைப்பை ஒரு இட‌த்திலிருந்து ம‌று இட‌த்திற்கு மாற்றும்போது உண்டான‌ சிக்க‌ல் இது. திருவ‌ன‌ந்த‌புர‌த்தில் பெங்க‌ளுருக்கு மாற்ற‌ல் என‌ எழுதி அத‌ற்கான‌ அத்தாட்சியையும் அவ‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌ முத்திரை முக‌வ‌ரியோடு குடுத்து விட்டார்க‌ள். பெங்க‌ளூரில் சென்று காட்டும்போது அவ‌ர்க‌ள் ம‌றுப‌டி ஒரு உறுதிப‌டுத்தும் சான்றித‌ழை எடுத்து திருவ‌ன‌ந்த‌புர‌ முக‌வ‌ரிக்கு எழுதி இது உங்க‌ளுடைய‌ இணைப்புதானா என‌ இச்சான்றித‌ழில் உறுதிப‌டுத்த‌வும் என‌ எழுதி என்னிட‌ம் கொடுத்து அங்கு சென்று மீண்டும் ஒரு கையெழுத்து முத்திரையுட‌ம் வாங்கி வ‌ர‌ சொன்னார்க‌ள். அட‌ க‌ட‌வுளே திருவ‌ன‌ந்த‌புர‌த்திலிருந்து வ‌ந்த‌ முத‌ல் சான்றித‌ழ் அதைதானே சொல்கிற‌து என்ற‌ என‌து வாத‌ம் எடுப‌ட‌வில்லை. இதுதான் ந‌டைமுறை நேர‌த்தை வீண‌டிக்காதே என்று அறிவுரை வேறு.
ஒரு மாத‌ம் இந்த‌ இணைப்பு மாற்ற‌லிலே என‌து உட‌ல் இணைப்புகள் மாறிப்போன‌து!!!.

பாவ‌ம் ம‌க்க‌ள் எப்ப‌டித்தான் ச‌மாளிக்கிறார்க‌ளோ என‌க்கு இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுதே!!!!!!!!

Advertisements