தடங்கள்

மருத்துவமனையில் ஒரு நாள் மார்ச் 12, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 11:05 பிப

மென்பொருள் துறையில் பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் பணியில் சேருவதற்கு முன்னால் அல்லது சேர்ந்த சில தினங்களிலோ மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.அதற்கான செலவை அந்த நிறுவனமே ஏற்றுகொள்ளும். நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் ஒரு மாதிரி புரிந்துணர்வு(!!!!!!!!!!!!!!) இருக்கும். அப்படி ஒரு மருத்துவமனையில் என்னை சோதனைக்கு உட்படுத்த(Master checkup) சென்ற வாரம் பெங்களுரு சென்றிருந்தபோது ஒரு மிகப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய நிறுவனத்தின் ஊழியர்கள் யா……….ஹு…….என்று சத்தமிட்டபடி மருத்துவமனையில் நுழைந்தார்கள். வந்தவர்களில் முண்டா பனியன் முக்கா பேண்ட் அணிந்த பெண்களும் கிழிந்த கழுவாத ஜீனும் இருக்கி பிடிக்கும் பனியனும் அணிந்த ஆண்களும். மருத்துவ வரலாறு சீட்டை(medical history!!!!!!!!) எழுதும்போது தண்ணி தம்மு அடிப்பீர்களா  என்ற கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் ஆம் என்று எழுதியதை ஆண் நண்பர்கள் கிண்டலடித்துகொண்டிருந்தார்கள்.Beer liquor-தானா என்று அப்பாவித்தனமாக ஒரு பெண் கேட்டுகொண்டிருந்தார். அப்படியே கேமராவை இன்னொரு பக்கம் திருப்பியபோது “தண்ணி அடிக்கவே மாட்டேனு சொன்னீங்க…..ஈரல் தண்ணி அடிச்சனால பாதிக்கப்பட்டிருக்குனு டாக்டர் எப்படி சொல்றாங்க” என்று ஒரு மனைவி உலுக்கிகொண்டிருக்க கணவர் விழித்துகொண்டிருந்தார்.

இதில் விசித்திரமான ஒரு விஷயம் என்னவென்றால் மருத்துவமனைக்கு அனுப்பி வேலை செய்வோரின் நலனில் அக்கறை செலுத்தும் பெரும்பாலான நிறுவனங்களே கட்டிங் போட கல்லா திறந்திருக்கின்றன. அது தவிர அடிக்கடி நடக்கும் அலுவலக பார்ட்டிகளில் உற்சாக பானத்தை ஊற்றிகொடுக்கும் வேலையையும் இந்த நிறுவனங்கள் செய்கின்றன.பெரும்பாலான  நல்ல பிள்ளைகள் கள்(ள)ளு பிள்ளைகள் ஆவது இங்குதான்.

சில மருத்துவமனைகளில் மென்பொருள் வல்லுனர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் விசித்திரமானாது.

1) கண்ணு தெரியுதா?  …..ஆமா
2) காது கேக்குதா?……….ம்ம்ம்ம்ம்ம்ம்…………காதா?,,,,,,கேக்குது
3)  சக்கரை இருக்கா……….எங்க?…….இல்லங்க
4) அலர்ஜி இருக்கா………இல்லீங்க(சொரிந்துகொண்டே)
 இந்த ரீதியில் நீளும் கேள்விகளுக்கு ஒரு சோதனையும் செய்யப்படமாட்டாது. அது எந்த மாதிரியான புரிந்துணர்வு என்பது புரியாத புதிர்.

அன்று நான் சென்ற மருத்துவமனை ஒரு 5 நட்சத்திர மருத்துவமனை. அங்கு ஒரு சோதனையில் இருந்தும் ஒருவராலும் தப்ப முடியவில்லை.காலை பத்துமணிக்கு ஒரு குப்பியை குடுத்து போயி STOOL எடுத்துட்டு வாங்க என்றபோது “Shitttttttttttttttttttttttt” என்று கோபப்பட்டார்கள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………..வாயில எவ்வளவு சுலபமா வருது ஆனா……………………!!!!!!

கடைசியில் அன்று மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ரிப்போர்ட் வந்தபோது உன் ரிப்போர்ட் என் ரிப்போர்ட் என்ற சத்தமான பரிமாற்றங்களில் காதில் விழுந்தது

1) பெரும்பாலானவருக்கு கெட்ட கொழுப்பின் அளவு அளவை தாண்டி இருக்கிறது.

2) சிலபேருக்கு சர்க்கரை அளவு சிறிதே சராசரி அளவை தாண்டி இருப்பதற்கு அன்று காலை சாப்பிட்ட கேசரிபாத் காரணமெனன தீர்மானம் கொண்டுவரப்பட்டது

3) பெரும்பாலோர் உயரத்திருக்கும் எடைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தனர்

4) பக்கார்டி,ஒல்ட்மாங் போன்றவர்கள் பெரும்பாலோரின் ஈரலில் கையெழுத்திட்டிருந்தனர்

5) வந்த ரிப்போர்ட்களை அவர்கள் யாரும் அவ்வளவு சீரியசாக எடுத்துகொண்டதாக தெரியவில்லை

 

எண்டே ஸ்டேட் கேரளம் மார்ச் 4, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:20 பிப

 dscn0643.jpg                 img_0294.jpg            atgaaabba-2mhkx5fokqvbmyh2ou5nr3cyl7ot3mjzhoqgqhy9ddgo2wkzlw7sf3qonth2jiljcqmdei7ljsvc_qjybsajtu9vbuypig-u23g0eyo_pu9vdslednaq.jpg              

கடவுளின் பூமி(Gods Own Country) என்றழைக்கப்படும் கேரளா காண கண்கோடி வேண்டும் என்று பரவசப்படுத்தும் இயற்கை காதலர்களின் பூமி. இன்னும் அதன் புவியியல் அமைப்பு எனக்கு புரியாத புதிர்தான். முதன்முதலில் கண்ணூர் மாவட்டத்துக்கு சென்றபோது பேருந்து மலைமேல் ஏற்க்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது.சிறிது நேரத்தில் பார்த்தால் கடல். மலையில் ஏதடா கடல்….. நேற்று இரவு குடித்த கோலாவில் குவார்ட்டர் சேர்த்துட்டாங்களோனு  ஒரு சம்சயம் தோன்றியது. அது தவிர பல வீடுகள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட சாய்ந்து மரங்களின் இடைவெளியில் இருப்பது இங்கு எங்கும் காண கிடைக்கும், ஒன்று இருந்தால் மேல இல்லன பள்ளத்(தாக்குள)துக்குள்ள என்றுதான் பெரும்பாலான வீடுகள் அமைந்திருக்கும். மழை இங்கு இன்னொரு அதிசயம்.போன புதிதில் இந்த ஊருக்காரங்கே எப்ப பாத்தாலும் கொடயோட திரியிறாங்கே என்று அதிசயப்பட்டதுண்டு ஒரு ஆர்ப்பாட்டமான மழையில் மாட்டும்வரை. மழை விட்ட சிறிது நேரத்தில் இங்க மழை பெய்ஞ்சதா என்று சந்தேகப்படும்படியாய் அதன் சுவடுகள் அழிந்துபோயிருக்கும்.

கடவுளின் மக்கள்-மிகவும் தெய்வ பக்தியுள்ள மக்கள். யாரும் சொல்லி தராமலேயே இடதுசாரி சிந்தனையில் ஊறியவர்கள்.பணிக்கு சேர்ந்த முதல் நாளிலே இங்கு ஹர்த்தால்.காரணம் ஏதோ சாதரணமாக தோன்றியதால் அசட்டையாக இருந்து அன்று முழுவதும் பட்டினி. நம் ஊரில் மாதிரி பாதி கதவை திறந்து வியாபாரமெல்லாம் இருக்காது. ஏழை மீன் வியாபாரியானாலும் வியாபார நேரத்தில் மட்டும்தான் வியாபாரம். பெரும்பாலும் இவர்கள் கெல்ப்(Gulf) சென்று பொருள் ஈட்டுவதை இலட்சியமாய்கொண்டிருப்பார்கள்.வீட்டுக்கு ஒருவராவது பெரும்பாலும் அரபு நாடுகளில் இருப்பார்.

பெண்கள்-காந்த கண்ணழகி உனக்கு மினிஸ்ரில இடம் பாக்கிறேன் என்று கவுண்டமணி சொல்வதுபோல் அழகிய கண்களுடையவர்.கேரள பெண்கள் என்றதும் முண்டு கட்டி வருவார்கள் என்று ஜொல்லு வடிய வந்தீர்களானால் சாரி ஜெண்டிமென் ஆ ஆல்காரெல்லாம் மரிச்சு போயி. இவங்களும் ஜீன்ஸ்க்கு மாறிட்டாங்க!!!!!.

படைப்பாளிகள்- படிப்பாளிகளின் பூமி மட்டுமல்ல(100% படித்தவர்கள்) படைப்பாளிகளின் சொர்க்க பூமியும் இது.
வைக்கம் முகம்மது பஷிர்(பாத்துமாவோட ஆடு,சிங்கிடிமுங்கன்…..)
தகழி சிவசங்கரம்பிள்ளை(செம்மீன்,தோட்டியின் மகன்)
வாசுதேவன் நாயர்( நாலு கட்டு,வாரணாசி……)
பத்மராஜன்
போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகள் படைத்ததும் படைத்த படைப்பாளிகள் போற்றப்படுவதும் வேறு எங்கும் காண கிடைக்காதது. நம் ஊரில் அதிகம் அறியப்படாத சுந்தர ராமசாமி,ஜெயமோகன் போன்றோரெல்லாம் இங்கு போற்றத்தக்கவர்களாய் இருப்பவர்கள்.

பிறமொழிகாரர்கள் மலையாளம் அறியாமல் இங்கு பிழைப்பது கடினம் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் உள்பட. ஆங்கிலம்,ஹிந்தி ஏதும் மனசிலாகாது….கொறச்சு தமிழ் அறியும் அத்தரயுள்ளு. அரசாங்க இயந்திரம்(அதிகாரிகள் மட்டத்தில்) இங்கு நியாயமாகவே இருக்கும் மற்ற  மாநிலங்களை விட.

47b7d802b3127cce8595320ede4300000036100camwzlm1bmd.jpg

சினிமா- நல்ல சினிமா இங்குதான் எடுக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தும் வெறித்தனமான இரசிகர்கள் இங்கு குறைவு.

img_0293.jpg

             வரு இவிட………………

 

கல்வியை வியாபாரமாக்குவதற்கு பதிலா………… மார்ச் 1, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:18 பிப

a.jpg 

சமீபத்தில் மதுரை,சென்னை,பெங்களுர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளை காணும் வாய்ப்பும் கிட்டியது. பெரும்பாலோர் இந்த கல்வியாண்டில் முதல்முதலாக புகழ்பெற்ற பள்ளியில் சேருவதற்காக ஆயத்தமாகிகொண்டிருந்தார்கள். அவர்கள் LKG-யில் சேருவதற்காக செய்யும் வேலைகளை பார்க்கும்போது மயக்கம் வராத குறைதான். அதை விட தாங்க முடியாத விஷயம் பள்ளி கட்டணம்.
தோரயமாக மார்க்கெட் நிலவரம் இப்படி நீள்கிறது

மதுரை – 15000 முதல் 50000 வரை

சென்னை – 30000 முதல் 100000 வரை

பெங்களூர் – 50000 முதல் 150000 வரை

கட்டணத்தை நீட்டி முழக்கிய அத்தனை பெற்றோரிடமும் “இவ்வளவு காசுக்கு LKG-ல என்ன சொல்லி தருவாங்க” என்று அப்பாவியாய் கேட்டேன். சொல்லி வைத்தாற்போல் அனைவரும் தெளிவற்ற நிலையிலேயே “அதுதான் நிலவரம் இதெல்லாம் நாங்க கேட்க முடியுமா? அப்ளிக்கேஷன் வாங்குறதே பெரிய விஷயமா இருக்கு, அதுல இப்படியெல்லாம் கேட்டா எங்கள விரட்டி விட்டுடுவாங்க” என்றார்கள்.
தளபதி படத்துக்கு முதல் காட்சிக்கு அவ்வளவு கூட்டத்தில் டிக்கெட் வாங்கி அந்த பெருமையை ஒரு வருடத்துக்கு ஊர் முழுவதும் சொல்லி திரிந்த நண்பன் தன் முதல் குழந்தைக்கு விண்ணப்ப படிவம் வாங்க முடியாமல் மனைவியிடம் அர்ச்சனையை வாங்கிய அவலத்தை சோகமாக சொன்னான்.
விண்ணப்ப படிவம் குடுப்பதற்கு முதல் நாள் இரவே பள்ளியின் வாசலில் வரிசையில் காத்திருக்க வேண்டுமாம். ஏன் என்றால் குறைவான விண்ணப்பங்களே கொடுப்பார்களாம்.வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் அவர்களின் வயதான அப்பாக்களை வரிசையில் நிற்க வைத்த அவலுமும் நிகழ்ந்திருக்கிறது.

பெரும்பாலான குழந்தைகள் LKG-யில் சேருவதற்கு முன்னரே ஆங்கில எழுத்துக்களை முழுவதுமாக கற்றுகொண்டு விடுகின்றன.அது தவிர ஆங்கில பாடல்களையும். சில சின்ன ஆங்கில வாக்கியங்களும் பேசிகின்றன.அ-னா ஆ-வனா சொல்லு என்றால் “சின்ன குழந்தைக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?”,  “அவளுக்கு தமிழே தெரியாது தெரியுமா only english”,  “தமிழ் நாங்க வீட்ல பேசுறோம்ல போறும்….. French எடுக்கலாம்னு இருக்கேன்”
இப்படிதான் பெரும்பாலான பதில்கள் வருகின்றது பெற்றோரிடமிருந்து

அதுதவிர Interview card வந்து  நேர்முக தேர்வுக்கு குழந்தைகள் தயார் செய்யப்படுகிறார்கள்.

 நேர்முக தேர்வில் கேள்வி குழந்தையிடம் : what is your name?
                மதுரை குழந்தை      : ……………………………………(மலங்க மலங்க பார்த்தபடி உதட்டை பிதுக்கி அழ தொடங்குகிறது
              சென்னை குழந்தை      :  பேயி……………………….
              பெங்களூர் குழந்தை     : போ……போ
மேற்சொன்னபடி நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதுவும் சில பள்ளிகள் பெற்றோர்கள் அவசியம் படித்திருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.அது இல்லாத பட்சத்தில் இடம் கிடைப்பது கடினம்.

எப்பா………………………டியோ………………………………………

எனக்கு சில கேள்விகளுண்டு

1) ஒரு இலட்ச ரூபாய்க்கு LKG-யில் என்ன சொல்லி குடுப்பார்கள். நான் எல்லா வருடத்துக்கும் சேர்த்து 5000 செலவழித்து படித்த கணிப்பொறி முதுநிலை பட்ட படிப்பு LKG-யை விட குறைவானதா?

2) கல்வியை ஒரு கொடையாக அளித்த வள்ளல் அழகப்பா செட்டியார் போன்ற மாமனிதர்களாய் மாற ஏன் எந்த தனியார் கல்வி நிறுவனமும் முயற்சிக்கவில்லை?

3)  அரசாங்க பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு? அப்படி பெரிய வேறுபாடு உண்டெனில் அரசாங்கம் நடத்தும் IIT-களில் சேர ஆறாம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்துகொள்ள பெற்றோர்கள் ஏன் மெனக்கிட வேண்டும்?

4)IIT IIM IISC போன்று தரமான கல்வி நிறுவனங்களை நடத்தும் அரசாங்கத்தால் அந்த தரத்தை எல்லா அரசு பள்ளிகளிலும் கொண்டு வர இயலாதா?

5) அப்படி நடத்த நிறைய பணம் செலவாகுமெனில் வருடம் வருடம் நாம் வருமான வரியோடு கட்டும் Education cess மூலமாக திரட்டப்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் போதவில்லையா?

6) தாய்மொழி தெரியாததை பெருமையாக சொல்லும் அம்மா, குழந்தை அடுத்த வீட்டு Aunty வீட்டில்தான் இருப்பேன் என்று அடம் பிடித்தால் விட்டு விடுவாளா?

7) கணிப்பொறி,கர்னாடக சங்கீதம்,குச்சிபிடி டான்ஸ் என்று குறைவான கால இடைவெளிகளில் கற்றுகொள்ளும் குழந்தை ஆங்கில மொழியை கணிதம்போல், கணிப்பொறி போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கற்றுகொள்ள இயலாதா? அப்படிபட்ட பாடமுறை நம்மிடம் இல்லையா?

    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே