தடங்கள்

சே – ஒரு முழுமை அடைந்த மனித வாழ்க்கை திசெம்பர் 16, 2009

உன் சக மனிதனின் துன்பம் கண்டு கண்ணீர் சுரக்கிறாயா ஆயின் நீ என் நண்பன்
                                                                                                                                                          – சே

சே – வை பற்றி பல பதிவுகள் திரைப்படங்கள் புத்தகங்கள் வெளிவந்துள்ளது ஆயினும் தற்செயலாக அவரை பற்றி அறிய தொடங்கி பின் தொடர்ந்து தேடி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவரை பற்றி எழுத தூண்டும விடாத என் நினைவுகளின் அலைகளிப்பால் இந்த பதிவை எழுதுகிறேன் .

இந்த மனிதனின் படத்தை தற்செயலாக சில T-shirt-l பார்க்கும்போது எவனோ hollywood ஹீரோ என்றே நினைத்திருந்தேன்.பின் மோட்டார் சைக்கிள் டைரி படம் பார்த்த பிறகு அதை தொடர்ந்து சில புத்தகங்கள் படித்த பிறகு இப்படி ஒரு மனிதன் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறான் என்ற திகைப்பு மிஞ்சுகிறது.

சே அர்ஜென்டினாவில் ஒரு மத்திய தர குடும்பத்தில் மூத்த மகனாக, அடிக்கடி துன்புறுத்தும் ஆஸ்த்மாகிடையில் வேகம் காட்டும் விளையாட்டு வீரானாக,பணக்கார குடும்ப பெண்ணை காதலிக்கும் காதலனாக, இறுதியாண்டு மருத்துவ மாணவனாக, ஆல்பர்டோ கிரனடோவின் தோழனாக சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஒரு பயணத்துக்கு முன்பு வரை.

அந்த பயணம் அந்த ஆஸ்த்மா நோயாளியின் வாழ்க்கை பயணத்தை புரட்டி போடுகிறது. அர்ஜெண்டினாவின் Buenos Aires-ல் தொடங்கி venizula நாட்டில் முடியும் அந்த பயணத்தின் துணைவன் ஆல்பர்டோ கிரனடோ சே-வின் முப்பதை தொட்டிருக்கும் நண்பன்(சே-வின் வயது ௨3),வாகனம் ஒரு பழுதான பழைய மோட்டார் சைக்கிள். பயண வழியில் காதலியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்குவதாய் திட்டமிட்டு அதை 7 நாட்கள் வரை நீடித்து  Tango குத்தாட்டம் போட்டு விட்டு அவரின் திரும்ப வருவேன் உன்னிடத்தில் என்ற உறுதிப்பாட்டின் அடையாளமாய் come back  என்ற நாயை பரிசளித்து விட்டு கனத்த மனதுடன் தன் பயணத்தை தொடர்கிறார். ஆண்டிஸ் மலையின் ஊடாக அவர்களின் வாகனம் பயணிக்கிறது. உணவுக்காகவும் தங்குமிடத்துகாகவும் அவிழ்த்து விடும் பொய்களுடன் அவர்கள் பயணப்படுகிறார்கள். வழியில் சிலி நாட்டில் அவர்கள் வாகனம் பழுது பட கால் நடையாகவும், காசில்லாமல் ஓசியில் அனுமதிபவர்களின் லாரிகளிலும் அவர்கள் பயணப்படுகிறார்கள் . பயணத்தொடே அவர்கள் முதலாளித்துவத்தின் கரங்களில் ஒடுக்கப்பட்ட தம்பதியை ஒரு கடுங் குளிர் இரவில் காண்கிறார்கள். ஆஸ்துமா நோயாளியான சே தன்னிடம் இருக்கும் ஒரு போர்வையையும் அவர்களிடத்தில் கொடுத்துவிட்டு காதலிக்கு உடை வாங்க வைத்திருந்த பணம் அனைத்தையும் அவர்களிடத்தில் கொடுத்து விடுகிறார். அந்த தம்பதி போல் பல தரப்பட்ட மக்களையும் வழியில் காண்கிறார். இன்க்கா மக்கள் அமைத்த மச்சு பிச்சு சிகரத்தை அடைகிறார்கள். அங்கு சந்திக்கும் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் கதைகளையும் கேட்டறிகிறார்கள்.பின் தொடரும் அவர்களின் பயணம் சான் பாப்லோ என்ற தொழுநோயாளிகளின் காலனியில் மருத்துவ சேவைக்கென(சே – தொழு நோய்க்கு வைத்தியம் பார்க்கும் சிறப்பு படிப்பு படித்தவர்) சில நாட்கள் தடைபடுகிறது. அங்கு சே  ஒன்றுபட்ட லத்தின் அமெரிக்க கனவை வெளிப்படுத்துகிறார். பின் தன் பிறந்த நாளை நோயாளிகளுடன் கொண்டாடும் பொருட்டு நண்பர் தடுக்க தடுக்க கேட்காமல் நள்ளிரவில் ஆஷ்துமா கஷ்டத்தை பொருட்படுத்தாமல் அமேசான் ஆற்றை நீந்தியே கடக்கிறார். பிறகு தொடரும் அவர்களின் பயணம் venizulavil முடிகிறது. இந்த பயண முடிவில் ஆல்பர்டோ ஒரு நல்ல வேலை வாங்கி விட்டு சே-வையும் வரும்படி அழைக்கிறார். அப்பொழுது சே சொன்னது
“எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த பயணம் என்னை மாற்றி விட்டது இப்போது இருக்கும் நான் பயணத்துக்கு முந்திய நானல்ல “. பின்பு நண்பரிடம் விடைபெற்று அர்ஜென்டினா வரும் சே தனது விட்டுபோன மருத்துவபடிப்பை முடிக்கிறார். பின்பு தனியாக மீண்டும் ஒரு பயணத்தை தொடங்கும் சே மெக்ஸிகோ-வை அடைகிறார்.

இந்த இரண்டாவது பயணம் முதல் பயணத்தில் அவருக்கு எழுந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறது. ஆம் அமெரிக்க ஆதிக்கத்தில் வெறுப்புற்றிருந்த காஸ்ட்ரோ சகோதரர்களை அங்கு சந்திக்கிறார். பின் அவர்களுடன் இணைந்து கிராண்ட்மா என்ற படகில் க்யுபா வந்தடைந்து அங்கு ஆண்டுகொண்டிருந்த பாடிஸ்டாவின் ஆட்சியை புரட்சி மூலம் தூக்கி எறிகிறார். பின்பு காஸ்ட்ரோவால் க்யுபா பொருளாதார திட்ட குழு தலைவராக அமைச்சராக நியமிக்கபடுகிறார். ஒரு மருத்துவர் பொருளாதார நிபுணர் ஆனதெப்படி என்ற கேள்விக்கு சே தனது இறுதி நாளில் சிரித்துகொண்டே சொன்னதாவது
“நம்மிடையே Economist யாரவது உள்ளனரா என்று கேஸ்ட்ரோ கேட்டபோது Economist என்பது கம்யூனிஸ்ட் என்று என் காதில் விழுந்து என் கையை தூக்கி விட்டேன் இரண்டு நாட்களுக்கு பின்புதான் தெரிந்தது அது economist என்று “. இருந்தாலும் அந்த துறையுழும் அவர் முத்திரை பதிக்கிறார். அமெரிக்க கைப்பாவைகளாக இருந்த வங்கிகள் ,நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு அவர் மீதான அமெரிக்க வெறுப்பு அதிகரிக்கிறது. சில காலம் க்யுபாவில் காஸ்ட்ரோவுடன் இருந்து பாடுபட்டு தனது தேவை பிற ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் தேவை என்பதை கடிதம் மூலம் காஸ்ட்ரோவுக்கு தெரியபடுத்தி காங்கோ,பொலிவியா போன்ற நாடுகளுக்கு கொரில்லா புரட்சி நடத்தும் பொருட்டு நாடு,மனைவி,மகள் எல்லாவற்றையும் துறந்து இடம் பெயர்கிறார்.இறுதியாக பொலிவியாவில்   கொல்லபடுகிறார். அவரது உடல் பிற போராளிகளுடன் அடையாளுத்துகாக கைகள் வெட்டப்பட்டு புதைக்கப்படுகிறது. பின்பு 1997-ல் க்யுபா அரசின் முயற்சியுடன் தோண்டி எடுக்கப்பட்டு க்யுபா கொண்டு வரப்பட்டு சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தன் மததிற்காகவோ, தான் கொண்ட நம்பிக்கையை நிருபிக்கும் பொருட்டோ, தன் நாட்டுகாகவோ போராடி பல தியாகங்களை செய்த பெரியார்களை நாம் மதிக்கும்பொழுது அர்ஜென்டினாவில் பிறந்து சக மனிதனின் கண்ணீர் துடைக்க தேச எல்லைகளை கடந்து உலகெங்கும் தன் நேச கரங்களை நீட்டி பின் கரங்கள் துண்டிக்கபட்டு குப்பையாக புதைக்கப்பட்ட மனிதனை நான் உள்பட பலர் அறிந்திருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று வினோதம்  வெட்ககேடானதும் கூட.


Advertisements