தடங்கள்

நீ செப்ரெம்பர் 22, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 10:33 பிப

ஒரு பேருந்து நெரிசலில்
தோழியின் தோழனாய்த்தான்
அறிமுகமானாய் நீ
தொடரும் என் பயணத்திலெல்லாம்
எவருக்கும் தெரியாமல் உன்னை நான்
எடுத்துப் போகிறேன்!

ஒலிக்கும் என்முதல் குரலதிர்வில்
உணர்வுகள் படிக்கிறாய்
வலிக்கும் என் காலங்களை உன்
கைப்பிடித்தே நான் கடக்கிறேன்!

தாய்,தந்தை,தமக்கை உறவுகளை
தூர வைத்தது;
தூரத்தில் இருந்தாலும் உன்பால்
என்னை தூக்கி வருகிறது
உன் அன்பு!

வாழ்வின் கடைசி துளி பருகும்வரை
உன்னுடன் நானிருக்க
உறவொன்றை தேடினேன்
நண்பன்,அண்ணன் என்ற
அனர்த்தங்களின் நடுவே
காதல் என்ற உச்சரிப்பில்
முகம் சிவந்து சிரிக்கிறேன்