தடங்கள்

ம‌ழை ஏப்ரல் 24, 2010

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:14 பிப

ம‌ஞ்சள் சாலை விள‌க்கொளியை
ஊடுருவும் ம‌ழை!
கொஞ்ச‌மும் இடைவெளி விடாத‌
வாக‌ன‌ங்க‌ளின் போக்குவர‌த்து நெருக்க‌டி
சாலையை கட‌க்க‌ த‌டுமாறியிருக்கும்
பெண்ணின் கையில்
குடைக்கு ப‌திலாக‌ குழ‌ந்தை
ஒரு காரோட்டி வேக‌ம் குறைத்தாலும்
க‌ட‌ந்து செல்லும் சாத்திய‌ம்
வைப்ப‌ர்க‌ள் புற‌ந்த‌ள்ளும் ம‌ழை
பெண்ணின் த‌லைப்பை துளைக்கும் ம‌ழை
கை நீட்டி விளையாடும் குழ‌ந்தையின்
கையில் ப‌ட்டு தெறிக்கும் ம‌ழை
வாழ்க்கை வ‌ழிந்தோடிகொண்டிருகிற‌து
இந்த‌ பெருஞ் சாலையில்!

Advertisements
 

IT-யில் ஆள் அள்ளுராங்கோ

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 4:12 பிப

மீண்டும் ஒரு பொருளாதார‌ ம‌ந்த‌ நிலைக்கு பிறகு மென்பொருள் ச‌ந்தையில் ஆள் சேர்க்கும் ப‌ணி ஆர‌ம்பித்தே விட்ட‌து. இந்த‌ முறை ஆள் சேர்க்கும் ப‌ணியில் ஈடுப‌டும் HR,க‌ன்ச‌ல்ட‌ன்ட் இவ‌ர்க‌ளின் முக‌ம் மாறி இருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து.

கேம்ப‌சில் தேர்வு செய்ய‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளின் வேலை தேடும் முயற்சி மிக‌ க‌டின‌மாக‌ மாறி விட்ட‌தாக‌ தோன்றுகிற‌து. முன்பெல்லாம் மிக‌ மிக‌ நேர்மையான‌தாக‌ இருந்த‌ மென்பொருள் துறையில் இப்போது Back door entry போன்ற சொற்க‌ள் ம‌லிந்து விட்ட‌து. அத‌ன் கார‌ண‌க‌ர்த்தாக்க‌ளான HR துறையின‌ரை ப‌ற்றி வெளி நாட்டு முத‌லாளிக‌ளுக்கு பெரும்பாலும் தெரிவ‌தில்லை.அது ம‌ட்டும‌ல்ல‌ க‌ன்ச‌ல்ட‌ண்ட் என‌ப்ப‌டும் ஆள் பிடித்து கொடுக்கும் த‌ர‌க‌ர்க‌ளுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ஒரு ந‌ல்ல‌ புரிந்துண‌ர்வு இருப்ப‌தாக‌வே தெரிகிற‌து.இப்போது கொடுமை என்ன‌வென்றால் +2 படித்து க‌ன்ச‌ல்டண்டாக‌ ப‌ணி புரிப‌வ‌ரெல்லாம் MTech படித்து 10 வ‌ருட‌ அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் மிர‌ட்ட‌ல் தொனியில் தொழில் நுட்ப‌ கேள்வி கேட்ப‌து.

நிஜ‌ம் என்ன‌வென்றால் பெரும்பாலான நிறுவ‌ன‌ங்க‌ளில் 50%க்கும் மேல் ராஜின‌மா செய்து அடுத்த‌ வேலைக்கு தாவ‌ த‌யாராக இருக்கும் நிலைதான். மென்பொருள் துறையின் ப‌ல‌மே உட‌னே ப‌ணி துவ‌ங்கி விடும் இவ‌ர்க‌ளால் என்று த‌யார் நிலையில் காட்ட‌ப்பொடும் வ‌ல்லுன‌ர்க‌ள்தாம்.ஆனால் இன்று அவ‌ர்க‌ள் இல்லாத‌ நிலை. இதையெல்லாம் இந்த‌ HR துறை புரிந்துகொண்ட‌தா என்று தெரிய‌வில்லை. இன்னும் அவ‌ர்க‌ள் ம‌ந்த‌ நிலை நீடிப்ப‌தாக‌வும் ச‌ந்தையில் அவ‌ர்க‌ள்தான் வ‌ர‌ம் கொடுக்கும் தெய்வ‌மாக‌வும் நினைத்துகொண்டிருக்கிறார்க‌ள்.திற‌மையான‌ வ‌ல்லுன‌ர்க‌ளி இல்லாத‌ நிறுவ‌ன‌த்திடம் projects வராது.project இல்லாத‌ நிறுவ‌ன‌ம் தொலைந்து போகும்.பெரும்பாலான‌ ராஜினாமாக்க‌ளின் பின்ன‌ணியில் இருப்ப‌து பி.ம் க‌ளும் பார‌ப‌ட்ச‌மான‌ அலுவ‌லக‌ பிராச‌ஸ்க‌ளும்தான்.

இனி மென்பொருள் துறையில் வேலை தேடுவோர் க‌ன்ச‌ல்ட‌ண்ட் என‌ப்ப‌டும் இடை த‌ர‌கர்க‌ளை த‌விர்ப்ப‌து ந‌ல‌ம். ஏனென்றால் உங்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை நிர்ண‌யிப்ப‌தாய் அதாவ‌து குறைந்த‌ ச‌ம்பள‌த்தில் ஆள் பிடித்து த‌ருவ‌தாய் நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் ச‌த்திய‌ம் செய்திருப்பார்க‌ள். உங்க‌ளுக்கான விலையை நீங்க‌ளே நிர்ண‌ய‌ம் செய்துகொள்வ‌தே புத்திசாலித்த‌ன‌ம்.So நாட்டாமை to ப‌ங்காளி ப‌ங்காளி to நாட்டாமை டீலிங்தான் ச‌ரி.அது த‌விர‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ வேலை வாய்ப்புக‌ளை ஒரே நேர‌த்தில் அடுத்த‌டுத்து சேரும் இடைவெளியில் வாங்கிகொள்ளூங்க‌ள்.புதிதாக‌ சேரும் நிறுவ‌ன‌த்தில் ஏமாற்ற‌ப்ப‌டும் ப‌ட்ச‌த்தில் இது கை கொடுக்கும்

இனி தொழில் நுட்ப‌ க‌ல்வி ப‌யில்வோர் மென்பொருள் வேலை வாய்ப்பை இறுதியாக‌ தேர்வு செய்யும் நிலை வ‌ந்து விட்டது.க‌டும் வெயிலில் உட‌ல் நோக‌ க‌ல் உடைப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கண்ணாடி கூண்டில் உள்ள‌ம் நோக‌ கீ போர்டில் அடிப்ப‌வ‌ர்க‌ளுக்குமிடையே பெரிய‌ வேறுபாடில்லை.
த‌ங்க‌ கூண்டில் கிளி இருந்தாலும் அது கூண்டில்தானே இருக்கிற‌து.

 

IT Poem ஏப்ரல் 22, 2010

Filed under: Uncategorized — bashakavithaigal @ 1:53 பிப

கோடிங் என்ப‌து யாதென‌க்கேட்டேன்
அடித்துப் பார் என்றான் அவ‌ன்
பக் என்ப‌து யாதெனக்கேட்டேன்
முடித்துப் பார் என்றான் அவ‌ன்
பி.எம் ஆவ‌து எங்க‌ன‌ம் கேட்டேன்
க‌ம்மென இருந்து பார் என்றான் அவ‌ன்
ஹைக்குக்கு வ‌ழி கேட்டேன்
கைக்குள் வை உன் பி.ம்மை என்றான் அவ‌ன்
ஆன்சைட் பெறுவ‌து எங்க‌ன‌ம் கேட்டேன்
பி.ம் ஃபீட்டை தின‌ம் வ‌ருடு என்றான் அவ‌ன்
இதுதான் என் விதி என்றால்
இறைவா நீ எத‌ற்கு என்றேன்
அடுத்த‌டுத்து அப்பிர‌சைலில் ஆப்ப‌டிக்கும் உன்
அக்க‌வுண்ட் மேன‌ஜ‌ரும் நானே என்றான் அவ‌ன்!

இது கண்ண‌தாச‌ன் க‌விதை ப‌டித்த‌ தாக்க‌த்தில் எழுதிய‌து‍:)

க‌ண்ண‌தாச‌ன் க‌விதை
/***************************************************************************/