தடங்கள்

அழ‌குதான் வாழ்க்கை ஜூன் 13, 2009

Filed under: Uncategorized — bashakavithaigal @ 7:06 பிப

இன்று என் முழு
தாக‌ம் தீர்த்த‌து
உன் உத‌ட்டிலிருந்த‌
ஒரு துளி நீர்!
/********************************************************************/

பிற‌ந்த‌ நாள் உனக்கு
சிவ‌ப்பு நிற‌ சேலை சுற்றி
ப‌ரிசு த‌ந்தாய் என‌க்கு
உன்னை!

/********************************************************************/

போர்த்தும் ஒவ்வொரு முறையும்
அத‌ன் வாச‌த்தால் சொல்கிற‌து
எனக்கான‌ உன் பிரிய‌ங்களை
நீ துவைத்து கொடுத்த‌ என்
அழுக்கு போர்வை!

/********************************************************************/

க‌ட‌ல்ம‌ண‌ல் குவித்து
சிற்பிக‌ள் சுற்றி
‘என் காத‌ல் க‌ண‌வ‌னுக்கு’
என்றெழுதிய‌ த‌ட‌ம்
இன்றும் இருக்கிற‌து
என் இத‌ய‌ ஆழ‌த்தில்!

/********************************************************************/

அழ‌குதான் வாழ்க்கை நீ
அருகிலிருக்கும் நிமிட‌ங்க‌ளில்
அழ‌குதான் வாழ்க்கை நீ
தொலைந்த‌ க‌ண‌ங்க‌ளில்
உன்னைத் தேடும்
என் துடிப்பில்!

Advertisements