தடங்கள்

க‌விதை ஏப்ரல் 20, 2011

Filed under: Uncategorized — bashakavithaigal @ 9:12 பிப

ஆண்டுக‌ள் ஐந்து ஆகிவிட்ட‌து
ஆனாலும் என்ன‌ ‍ உன்னை
விட்டு செல்லும் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலும்
முத‌ல் ச‌ந்திப்பின்,
முத‌ல் பார்வையின்,
முத‌ல் நொடியின்
முத‌ல் முத்த‌த்தின்
விளிம்பில் வ‌ழிந்தோடுகிற‌து
இந்த‌ காத‌ல்
/***********************************************************************/
நான்
அம்மா
அப்பா
ந‌ண்ப‌ர்க‌ள்
உற‌வின‌ர்க‌ள்

நான்
ம‌னைவி
ம‌க‌ன்
உற‌வின‌ர்க‌ள்

நான்
ம‌னைவி

நான்

நான்
எவ‌ருமில்லை
எல்லாரும்
எல்லாமும்
/***********************************************************************/

Advertisements
 

Bleed Blue – 2011 world cup ஏப்ரல் 3, 2011

Filed under: Uncategorized — bashakavithaigal @ 12:33 முப

மீண்டுமொரு முறை நாம் உல‌க‌ சாம்பிய‌னாயிருக்கிறோம்.

ஆட்ட‌ம் டாஸ் போடுவ‌திலேயே குழ‌ப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌து. முத‌லில் டோனி டாஸ் வென்றார் ஆனால் இல‌ங்கை காப்ட‌ன் ச‌த்த‌த்தில் ச‌ரியாக‌ கேட்க‌வில்லை என்று அழுகுணி ஆட்ட‌ம் ஆடி மீண்டுமொரு முறை டாஸ் போட‌ப்ப‌ட்டு இல‌ங்கை வென்று முத‌லில் பேட்டிங் என தீர்மானித்தது,முத‌லில் ஆடி 300க்கு மேல் எடுப்ப‌து என்ற‌ இந்திய‌ க‌ன‌வில் முத‌ல் க‌ல் விழுந்த‌து.
ஃபீல்டிங் முத‌லில் கிடைத்த‌து ம‌கிழ்ச்சிதான் என்று சொன்னாலும் டோனியின் முக‌த்தில் இலேசாக‌ ஏமாற்ற‌ம்.ஃபீல்டிங்கில் என்றும் இல்லாத‌ ருத்ர‌ தாண்ட‌வ‌மாடிய‌து இந்தியா. பாகிஸ்தானுடான‌ போட்டியில் க‌ல‌க்கிய‌ நெஹ்ரா காய‌த்தால் ஆடாத‌ நிலையில் கிடைத்த‌ கேப்பில் சிரிசாந்த் வ‌ந்த‌து, டோனியின் முடிவில் அனைவ‌ருக்கும் அதிருப்தியையும் அதிர்ச்சிய‌யையும் கொடுத்த‌து.அத‌ற்கேற்றார் போல் அவ‌ரும் சாட் பிட்ச் ப‌ந்துக‌ளாக‌ போட்டு அதிக‌ ர‌ன் விட்டு கொடுத்தார். இருந்தாலும் யுவ‌ராஜின் அருமையான‌ ஃபீல்டிங் இல‌ங்கை வீர‌ர்க‌ளை ஓட்ட‌மெடுக்க‌ விடாம‌ல் க‌ட்டுப‌டுத்திய‌து. க‌டுமையான‌ ஃபீல்டிங்கால் இல‌ங்கை 220/230 ஓட்ட‌ங்க‌ள் ம‌ட்டும் எடுக்கும் என‌ எதிர்பார்த்த‌ நிலையில் ஜெய‌வ‌ர்த்த‌னேயின் ச‌த‌மும் பின்னால் வ‌ந்த‌ குல‌சேக‌ர‌ ,பெரைரா போன்ற‌வ‌ர்க‌ளின் ஆட்ட‌த்தால் ஓட்ட‌ம் 274 ய் தொட்ட‌து.

275 என்ற‌ க‌டின‌(ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு)/சுல‌ப‌(இந்தியாவுக்கு) இல‌க்குட‌ன் க‌ள‌மிற‌ங்கிய‌ இந்தியா அணிக்கு தொட‌க்க‌த்திலேயே ஆப‌த்து க‌ல‌ர் ம‌ண்டைய‌ன் ம‌லிங்காவின் ரூப‌த்தில் வ‌ந்த‌து. அவ‌ர் எறிந்த‌(ஆமாங்க‌ எறிந்த‌ ப‌ந்துதான்!!) ப‌ந்தில் ஷேவாக்,டெண்டுல்க‌ர் ஜாம்பாவான்க‌ள் ஆட்ட‌மிழ‌க்க‌ க‌தி க‌லங்கிய‌ இந்திய‌ அணியை க‌ம்பீர‌மாக‌ க‌ரையேற்றிய‌தில் பெரும் ப‌ங்கு காம்பீரை சேரும்.அவ‌ருட‌ன் கை கோர்த்த‌ விராட் கோலியும் ஆட்ட‌மிழ‌க்க‌ யுவ‌ராஜ்க்கு முன்ன‌தாக‌ க‌ள‌மிற‌ங்க வ‌ந்தார் டோனி. த‌லைவனாய் பொறுப்பாய் ப‌ந்தை கீந்தி கீந்தி ஒவ்வொரு ஓட்ட‌மாக‌ சேர்த்து அணியை பெரும் ச‌ரிவில் இருந்து காப்பாற்றினார்.வ‌ழ‌க்கமாய் விளாசும் காம்பீரும் அவ‌ருட‌ன் கீந்த‌லுக்கு ஈடுகொடுக்க‌ அணி மாபெரும் ச‌ரிவில் இருந்து மீண்டு 45 வ‌து ஓவ‌ரில் ருத்ர‌ தாண்ட‌வ‌த்துக்கு த‌யாரான‌து. க‌ம்பீருக்கு பிற‌கு க‌ள‌மிற‌ங்கிய‌ யுவ‌ராஜ் சிங்கின் ஒவ்வொரு அசைவிலும் ஆட்ட‌த்தை வென்றெடுக்க‌ வேண்டுமென்ற‌ வெறி.இறுதியாக‌ கேப்ட‌ன் டோனியின் ஸ்டைலான‌,உறுதியான சிக்ச‌ருட‌ன் ஆட்ட‌த்தை இந்தியா வென்றெடுத்த‌து. உல‌க‌ கோப்பையை ச‌ச்சினுக்கு ச‌ம‌ர்பிப்ப‌தாக‌ யுவ‌ராஜ்,காம்பீர் போன்ற‌வ‌ர்க‌ள் சொல்ல‌ ப‌ரிச‌ளிக்கும் விழா பெரும் நெகிழ்வாக‌ நிறைவ‌டைந்த‌து.

ஆட்ட‌த்தின் பிற‌ சுவார‌ஸ்ய‌ங்க‌ள்

**** ந‌ம்ம‌ ஊர் சூப்ப‌ர் ஸ்டார், இந்தி ப‌ட‌ சூப்ப‌ர் ஸடார் அமீர்கானுட‌ன் அம‌ர்ந்து மிக‌ மிக‌ சீரிய‌ஸாய் மாட்ச் பார்த்துகொண்டிருந்தார். இங்கும் அவ‌ர் யாருக்கும் வாய்ஸ் கொடுத்ததாக‌ தெரிய‌வில்லை

**** திரிசா ஆட்ட‌ம் முடிந்து சாரூக்கானின் காரில் பின்னால் அம‌ர்ந்து ர‌சிக‌ர்க‌ளை நோக்கி கியூட்டாக‌ க‌ண்ண‌டித்தார்

***பூன‌ம் என்ற‌ மாட‌ல்/ ந‌டிகை இந்தியா வென்றால் நிர்வாண‌மாய் ஓடுவ‌தாக‌ ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌டுத்தினார். சொன்ன‌தை செய்த‌ மாதிரி தெரிய‌வில்லை!!!!

**** ஆடிய‌ன்ஸில் அடிக்க‌டி ஒரு முக‌த்தை காட்டி கொண்டிருந்தார்க‌ள்.அட‌ ராகுல் காந்தி…..ஒரு சராச‌ரி இந்திய‌னாக‌ எந்த‌ ப‌ந்தாவுமின்றி ஆட்ட‌த்தை ர‌சித்துகொண்டிருந்தது அவ்வ‌ள‌வு அழ‌கு.

****எந்த‌ த‌லைவ‌ரும் அழைக்காம‌லேயே,ஊர்,மொழி,இன‌ம் எல்லாம் க‌ட‌ந்து ஒட்டு மொத்த‌ இந்தியாவும் கோல‌க‌ல‌மாய் இந்திய‌ வெற்றியை விடிய‌ விடிய‌ கொண்டாடி தீர்த்த‌து.