தடங்கள்

நாள் மார்ச் 19, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 7:00 பிப

ஊடுருவும் பார்வைக‌ளைனைத்தும்
அன்பு போர்த்தியிருந்த‌து
பெண்ணென்ற‌ அத‌ன் குளுமையில்
சுகித்திருந்தாள்.
ப‌ட்டாடைக‌ளும் அணிக‌ல‌ன்களும்
ப‌ரிசுப்பொருட்க‌ளும் குவிய‌
அத‌ன் வ‌ண்ண்ங்க‌ள் ஒளித்த‌
இர‌க‌சிய‌த்தில் ஆழ்ந்திருந்தாள்.
நொடிக‌ள் யாவும் அவ‌ளுக்காய்
ந‌ட‌க்க‌ துவ‌ங்கின‌
ஒரு
தேவ‌தை சிருஷ்டித்த‌ நாளில்.
இல்லை இல்லை
இது பெண்க‌ள் தின‌மில்லை
ஒரு
பூப்புனித‌ நீராட்டு நாள்

Advertisements
 

ப‌தேர் பாஞ்சாலி

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:57 பிப

இன்றைய‌ ப‌ட‌ம்: ப‌தேர் பாஞ்சாலி(Song of the Little Road)
மொழி: பெங்காலி
இய‌க்குன…‌ர்: ச‌த்ய‌ஜித்ரே

ச‌த்ய‌ஜித்ரேயின் முத‌ல் ப‌ட‌ம். ந‌டித்திருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் சாத‌ராண‌ர்க‌ள். 1.5 ல‌ட்ச‌ ரூபாய் ப‌ட்ஜெட் ப‌ட‌ம். க‌வித்துவ‌மாக‌ ஒரு ப‌ட‌த்தை எடுக்க‌ முடியுமா என்ப‌த‌ற்கு ப‌தேர் பாஞ்சாலி ஒரு சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.

வங்காள கிராம‌த்தில் ப‌ர‌ம்ப‌ரை வீட்டில் பெரிய‌ எழுத்தாள‌னாக‌ போகும் க‌ன‌வுக‌ளுட‌ன் வாழ்ந்திருக்கும் ஏழை த‌ந்தை ஹ‌ரிஹ‌ர் ,ச‌ராசாரி ஆசைக‌ள் நிர‌ம்பிய‌ அவ‌ர் ம‌னைவி ம‌ற்றும் பிள்ளைக‌ள் துர்கா,அ(ப்)பு இவ‌ர்க‌ளுட‌ன் ம‌ர‌ண‌த்திற்காய் காத்திருக்கும் ஒரு தூர‌த்து உற‌வு பாட்டி. அப்புவின் பார்வையில் ப‌ய‌ணிக்கிற‌து கேம‌ரா. அபுவின் வீட்டிலிருந்து புற‌ உல‌குக்கு போகும் சிறு சாலை உயிரில்லாத‌ ஒரு பாத்திர‌ம் ப‌ட‌த்தில். க‌ன‌வுக‌ளை துர‌த்தி ந‌க‌ரை விட்டு வெகு வில‌கி செல்லும் குடும்ப‌ த‌லைவ‌ன், அவ‌னில்லாது ஜீவ‌ன‌த்தை கிட்ட‌த்த‌ட்ட‌ பிச்சை எடுத்து கழிக்கும் தாய் வ‌றுமையிலும் பெரிய‌ குறைக‌ள் இல்லாது எளிய‌ விருப்ப‌ங்க‌ளோடு உல‌கை ஆழ‌ இர‌சிக்கும் துர்கா ,அப்பு, துர்கா ப‌றித்து த‌ரும் ப‌ழ‌த்தை பெரிய‌ விருப்புட‌ன் பொக்கை வாய் விரிய‌ இர‌சிக்கும் பாட்டி என்று சிறு சிறு ச‌ம்ப‌வ‌ங்க‌ளோடு ந‌க‌ர்கிற‌து க‌தை. ஒரு பெரு ம‌ழையில் சிதில‌ம‌டைந்த‌ வீட்டுக்குள் காய்ச்ச‌லில் துர்கா இற‌ந்து விடுகிறாள். த‌ந்தையோ எங்கோ தூர‌த்தில் த‌க‌வ‌ல் தொட‌ர்பு இல்லாத‌ கால‌ம். சில‌ கால‌த்திற்கு பிற‌கு அவ‌ன் ஒர‌ள‌வு ச‌ம்பாதித்து வ‌ருகிறான். துர்காவின் ம‌ர‌ண‌த்தை சொல்ல‌ முடியாமல் க‌த‌றி அழும் அப்புவின் தாய். பெரு விருப்புட‌ன் குழ‌ந்தைக‌ளை காண‌ வ‌ந்த‌ தந்தை த‌ன் ம‌க‌ளின் ம‌ர‌ண‌த்தை ஒரு செய்தியாய் ம‌ட்டுமே கேட்க‌ நேர்ந்த‌ அவ‌லம் இவை யாவ‌ற்றையும் பார்த்திருக்கிற‌து அந்த‌ சிதில‌ம‌டைந்த‌ ப‌ழைய‌ வீடும் அத‌ன் பாதையும்.
இறுதியில் ப‌ர‌ம்ப‌ரையாக‌ வாழ்ந்த‌ வீட்டை வீட்டு அந்த‌ சிறு குடும்ப‌ம் வெளியேறுவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிகிற‌து.

துர்கா என்ற‌ குட்டி பெண். வாழ்ந்திருக்கிறாள் அந்த‌ பாத்திர‌த்தில்

 

Aparajito

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:56 பிப

இன்றைய‌ ப‌ட‌ம்: Aparajito
மொழி: பெங்காலி
இய‌க்க‌ம்: ச‌த்ய‌ஜித் ரே

ப‌தேர் பாஞ்சாலியின்(http://www.facebook.com/photo.php?fbid=3466766186515&set=o.158997517498720&type=1&theater) பாக‌ம் இர‌ண்டு என்று கூட‌ சொல்ல‌லாம் அல்ல‌து சொல்லாம‌லும் இருக்க‌லாம். ப‌தேர் பாஞ்சாலியில் ம‌ரித்து போன‌ துர்க்காவின் நினைவு ஒரே ஒரு இட‌த்தில் APU தூர‌ போகும் இர‌யில் வ‌ண்டியை பார்க்கும்போது அவ‌ன் க‌ண்க‌ளில் சொல்ல‌ப்ப‌டு……கிற‌து.

ப‌னார‌ஸில் வாழ்க்கை அமைத்திருக்கும் APU வின் த‌ந்தை ஒரு தீபாவ‌ளி தின‌த்த‌ன்று இற‌ந்து போக‌ APU வை அவ‌ன் தாயார் உற‌வின‌ர் வீட்டில் வேலை செய்து காப்பாற்றுகிறாள். ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ன‌வோடு இருக்கும் APU வை ப‌டிக்க‌ வைக்கிறாள். மிக‌ புத்திசாலியான‌ APU ப‌டிக்க‌ க‌ல்க‌த்தா செல்லும்போது பில்லிய‌ன் டால‌ர்க‌ளாய் ச‌ம்பாதிக்கும் இளைஞ‌னாய் திரும்ப‌ போகிறான் என்ற‌ ஆவ‌லாதியை(த‌மிழ் ப‌ட‌ம் இதுதான் ரொம்ப‌ பார்க்க‌ கூடாது) த‌டுக்க‌ முடிய‌வில்லை. ஒரு வ‌கையில் அவ‌னுக்கு வாழ்வின் நியாயங்க‌ள் கிட்ட‌ வேண்டும் என்ப‌தில் நாம் APU வின் வீட்டில் க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு பாத்திர‌மாக‌ மாறி போகிறோம். க‌ல்க‌த்தா என்ற‌ பெரிய‌ ந‌க‌ரில் வேலை பார்த்துகொண்டே ப‌டிக்கும் ம‌க‌னின் வ‌ர‌வுக்காக‌ காத்திருக்கும் தாய் ஒரு ஏக்க‌ம் நிறைந்த‌ மாலையில் அவ‌ன் குர‌ல் ஒலி அமானுஷ்ய‌மாய் கேட்க‌ அவ‌ன் வராத‌ மின்மினிக‌ள் ததும்பிய‌ இருள் பாதையை வெறித்து ம‌ரித்துபோகிறாள். அவ‌ள் இற‌ந்து சில‌ தின‌ங்க‌ள் க‌ழித்து வ‌ரும் APU புரோகித‌ தொழிலை தொட‌ர‌ வ‌ற்புறுத்திய பாட்ட‌னாரின் கோரிக்கையை புற‌ம் த‌ள்ளி க‌ல்க‌த்தாவிற்கே மூட்டையை க‌ட்டுகிறான்.

வீட‌ற்ற‌ எளிய‌ ம‌னித‌ர்க‌ளின் குடும்ப‌ம் ஒவ்வொரு ம‌ர‌ண‌த்தின்போதும் பிழைப்பிற்காக‌ இடம் பெய‌ர்தலை,இட‌ம் பெய‌ர்த‌லுக்காக‌ சொல்ல‌ப்ப‌டும் நியாய‌ங்க‌ளை அத‌ன் இய‌ல்பில் க‌தை சொல்லி செல்கிற‌து. துர்காவின் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு த‌ன் பார‌ம்ப‌ரிய‌ கிராம‌த்தை விட்டு ப‌னார‌ஸ் வ‌ரும் apu வின் குடும்ப‌ம் apu த‌ந்தை ம‌ர‌ண‌த்திற்கு பின் தேவ‌ன‌பூர் செல்கிற‌து. அங்கு அப்புவின் தாயார் ம‌ர‌ண‌த்தோடு apu த‌ன் தாயின் ஈமச‌ட‌ங்குக‌ளை க‌ல்க‌த்தாவில் செய்து கொள்கிறேன் என்ற‌ வ‌ச‌ன‌த்தோடு க‌ல்க‌த்தாவிற்கு புல‌ம் பெயருகிறான்.

சினிமாவுக்கான‌ மசாலாக்க‌ள் ஏதும‌ற்ற‌ எளிய‌ ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கையை சொல்லும் உன்ன‌த‌மான‌ திரைப்ப‌ட‌ம்.