தடங்கள்

உன்னால் நான் ஜூன் 22, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:44 முப

உன்னோடு உலகத்தில் வாழ்வதால்
உன் சக மனிதனாகிறேன்
உள்ளத்தில் உன்னை இருத்தி
உன் கோவிலாகிறேன்
மண்மேல் உன் தடம்தேடி
உன்னை தொடர்ந்தவனாகிறேன்
மாலையில் உன் பாடல்கேட்டு
உன் இரசிகனாகிறேன்
கோபத்தில் நீ கொதிக்க
சாந்தமாகிறேன்
கொஞ்சும்போது நானுன்
குழந்தையாகிறேன்
அக்கரையாய் நீ பேச
அடிமையாகிறேன்
அடைக்கலம் தேடி நானுன்
அகதியாகிறேன்
நெஞ்சத்தால் நானுன்
உணர்வாகிறேன்
உன் நினைவுகளால்மட்டுமே
நான் கவியாகிறேன்!

 

நொடிகள் கழிவுப் பொருள்களாய்

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:41 முப

என்னுள் நீ
உடைந்து நொறுங்கிய தருணத்தில்
உனக்கான என் உணர்வுகள்
கற்பிழந்துவிட்டிருந்தது
என் தன்மானத்தில் தலையிலெறி
குத்தி கிழித்து குதறி
கோரதாண்டவமாடியிருந்தாய்
உனக்காய் செலவழிந்த நொடிகள்
கழிவுப் பொருள்களாய்
காற்றில் இரையப்பட்டிருந்தது
நீ விட்டுப்போன இதயத்தின்
வெறுமை பக்கங்களில்
வெறுப்பு வந்தடைத்திருக்க
இறந்துபோயிருந்தேன்!

 

அவன் ஜூன் 15, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 11:36 முப

உங்கள் வட்டத்தில்
அவன் இல்லை
உங்கள் காதுகளில் ஒலிக்கும் குரலிலும்
அவன் இல்லை!

சித்தாந்தங்களால் அவனை
செதுக்கிகொண்டிருந்தும்
சிறுபிள்ளையாய்
தேவதை கால்பிடித்து
தேம்பியழுவானவன்!

சந்தர்ப்பவாத நட்பை சகித்துகொண்டு
சாயந்தர தனிமையில்
சில கவிதைகள் சொல்லிதிரிந்தானன்றி
சீ..என்று
தள்ளிபோனவனில்லை!

காற்றில் குப்பைகளாய்
வரும் வார்த்தைகள் வடிகட்டி
உங்கள் உள்ளம் தேடினானன்றி
ஜீவனற்ற செத்துவிழும்
வார்த்தைகளென சொல்லிப்போனவனில்லை!

ஆளில்லா தீவில்
இருள் வெளியில்
கழிவு பொருள்களாய்
அலைகடல் ஒதுங்கிய
உங்கள் அன்பை
சேகரித்துகொண்டிருக்கிறான்
அவன்….

 

Thats the way ‘IT’ Works(Software company policies) ஜூன் 8, 2007

Filed under: IT — bashakavithaigal @ 5:10 பிப

Put eight monkeys in a room. In the middle of the room is a ladder, leading to a bunch of bananas hanging from a hook on the ceiling. Each time a monkey tries to climb the ladder, all the monkeys are sprayed with ice water, which makes them miserable. Soon enough, whenever a monkey attempts to climb the ladder, all of the other monkeys, not wanting to be sprayed, set upon him and beat him up. Soon, none of the eight monkeys ever attempts to climb the ladder.
One of the original monkeys is then removed, and a new monkey is put in the room. Seeing the bananas and the ladder, he wonders why none of the other monkeys are doing obvious. But undaunted, he immediately begins to climb the ladder. All the other monkeys fall upon him and beat him silly. He has no idea why. However, he no longer attempts to climb the ladder.
 A second original monkey is removed and replaced. The newcomer again attempts to climb the ladder, but all the other monkeys hammer the crap out of him. This includes the previous new monkey, who, grateful that he’s not on the receiving end this time, participates in the beating because all the other monkeys are doing it. However, he has no idea why he’s attacking the new monkey.
One by one, all the original monkeys are replaced.
Eight new monkeys are now in the room. None of them have ever been sprayed by ice water. None of them attempt to climb the ladder. All of them will enthusiastically beat up any new monkey who tries, without having any idea why.
This is how any company’s policies get Established

 

தேடுகிறேன் தோழி ஜூன் 7, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:21 முப

தொலைபேசியால் நான்
சிருஷ்டித்த என் தோழியே
நிஜமுகம் எடுத்து என்
நினைவுகளில் சிலையென
வடித்த உன்னை
உடைத்தெடுத்தாயேன் ?

குரலா கொலுசொலியா ?
வண்டு செல்கிறதா இல்லை உன்
தோடு சொல்கிறதா ?
தொலைபேசி எடுத்து
குழம்பிய தருணங்கள் மீண்டும்
நிகழப்போவதில்லை!

இனி
உன் ஊர்செல்லும் இரயிலில்
என்தேடல் தொடர்ந்துகொண்டிருக்கும்
தொடரும் தேடலில்
தென்படலாம் நீ
உன்னை உன் சம்பிரதாய
சிரிப்புக்குள் ஒளித்தபடி!
—-