தடங்கள்

கற்றது கணிப்பொறியியல்(2) திசெம்பர் 30, 2007

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 6:39 பிப

இந்த பகுதியில் கணிப்பொறி கற்பதற்கான பலவித வாய்ப்புகளையும் அவை வழங்கும் வேலை வாய்ப்புகளையும் பார்ப்போம்.

பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திகொள்ளவும். கணிப்பொறி கற்பது என்பது நிஜாமகவே அதை கற்று தெளிவது அன்றி பட்டயம் மட்டும் வாங்கும் ஏட்டூ சுரைக்காய் அல்ல.BE,MCA,BTech என்று கணிப்பொறியியலில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் கூட தலை நகரங்களில் இன்றளவும் வேலை தேடும் வினோதத்தை நீங்கள் காணலாம். அதேபோல் BA,MA என்று இலக்கிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றவர்கள் கூட இத்துறையில் சாதித்துகொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக மென்பொருள் நிறுவனங்களில் சேர

1) BE,BTech,ME,MTech ,MCA,MS  etc என்ற பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பு என்றால் முன்னுரிமை உண்டு.

Wipro,Infosys,CTS,TCS போன்ற நிறுவனங்கள் Bcom,Bsc,BCA படித்தவர்களையும் பணியிலமர்த்திகொள்கிறது. விவரங்களுக்கு
http://careers.tcs.com,
http://www.wipro.com/careers/,
https://careers.infosys.com/infyrms/
http://www.cognizant.com/html/careers/landingPage.asp
போன்ற தளங்களை அவ்வப்போது நோக்கினால் மதி!

2) ஓரளவு ஆங்கிலத்தில் உளற தெரிந்திருந்தால் கூட போதும்.உதாரணத்துக்கு இந்த உளறலை பார்க்கவும்                   

(Me : I want to meet HR
Receptionist : Wait Please,she is in rest room
Me: No problem i’ll meet her there only)        

 rest room என்பதை தவறாக HR-ன் அறை என்று புரிந்துகொண்டதால் நிகழ்ந்த அபத்தம் இது. கிராமத்திலிருக்கும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் கூட மென்பொருள் நிறுவனங்களில் புழங்கும் அபத்த ஆங்கிலத்தை
காலப்போக்கில் கற்று “He Screwed me” என்று உங்கள் பெண் சக ஊழியர் உச்சரிக்கும்போது அதிர்ச்சி அடையாமல் “அவன் என்னை ஏமாற்றி விட்டான்” என்று அர்த்தம் தெ(ரி)ளிந்துகொள்ளலாம்.
பின்னால் உங்கள் கிராமத்துக்கு வரும்பொழுது உங்கள் ஆங்கில அறிவை காட்டி எல்லோரையும் பிரமிப்படைய செய்யலாம்.
“வெள்ளகார தொரையாட்டம் புள்ள என்னமா பேசுது”.

3) அடிப்படை கணித அறிவு அவசியம். புதிதாக ( Freshers)  வேலை தேடுபவர்கள்
Quantitativa Aptitude – Agarwal
GRE
Puzzles – shakunthala devi
brain teasers
Test Your skills in c
pointer in c
Let Us C போன்ற புத்தகங்களை கரைத்து குடித்திருந்தால் ஆரம்ப கட்ட நுழைவு தேர்வுகளை சுலபமாக கடந்துவிடலாம்.இதை தவிர ஒரு சில குறுக்கு வழிகளும் உண்டு!!!!!!!!!. நிறுவனங்களின் வினாத்தாள்களும் இணைய தளத்தில் கிடைக்கும்.அதை தேடி எடுத்து விடை தயாரித்தும் வெற்றி பெறலாம்
சில கம்பெனிகளில் எழுத்து தேர்வை முடித்தாலே வேலை நிச்சயம்.

இதை தவிர தற்பொழுது புழங்கி வரும் Back Door Entry, Fake Experience போன்ற குறுக்கு வழிகளும் உண்டு. அந்த வழிகளில் பயணப்பட்ட கூட்டங்களும் மிக அதிகம். அதற்கு அவர்கள் சொல்லும் நியாய தர்மங்களை மென்பொருள் நிறுவனங்கள்
எந்த காலத்திலும் காது குடுத்து கேட்காது. இந்த வழிகளில் நுழைந்து பின் மாட்டீனீர்களானால் மிக கேவலமாக துரத்தப்படுவீர்கள். அது உங்களின் அஸ்தமனமாக கூட இருக்கலாம்!
                                                                                                                                                                            
 

 

கற்றது கணிப்பொறியியல் திசெம்பர் 15, 2007

Filed under: கற்றது கணிப்பொறியிய,Uncategorized — bashakavithaigal @ 10:24 பிப

வெகு ந¡ட்களாக எழுதவேண்டும் என்ற ஆவலில் இன்று அவகாசம் கிடைக்க இப்போது தொடங்குகிறேன். பின் வாய்க்கும்போதெல்லாம் தொடர்வேன். இந்த தொடரின் §ந¡க்கம் மென்பொருள் துறையில்
ந¢ஜமாக என்ன நடக்கிறது என்று சொல்வதே. சொல்வதற்கு என்க்குள்ள தகுதி இந்த துறையில் ஒரு எட்டாண்டு அனுபவம் மட்டுமே. கற்றது தமிழ் என்ற படத்தை இந்த தலைப்பு நினைவூட்டுவதாலும் அந்த படத்தில்
மென்பொருள் துறையை பற்றி சில காட்சிகள் அந்த படத்தில் இடம் பெற்றிருப்பதாலும் அந்த படத்திலிருந்தே தொடங்குகிறேன்,
சில கேள்விகள் அப்படத்திலிருந்து
1) கற்றது தமிழ் – இந்த தலைப்பில் ஒளிந்திருக்கும் அடுத்த வரி?
   “கற்றது தமிழ்…..அதனால்தான் உருப்படவில்லை” என்பதா?அப்படியானால் தமிழ் கற்று மேன்மையடைந்தவர்கள் கண்டதில்லையா?
2) கற்றது இந்தி என்றால் இந்த தேசத்தில் லட்சங்களில் வருமானம் உண்டா?
3) தொழிற்கல்வி(மருத்துவ கல்வி உட்பட),இலக்கியம் என்ற பிரிவுகள் கணிப்பொறி வருவதற்கு முன் இல்லையா?
4) மென்பொருள் கல்வி வருவதற்கு முன் லட்சங்களை யாரும் பார்த்ததில்லையா?
5) IIT,IISC போன்ற கல்வி கூடங்களில் பயின்றவர்கள் IT Boom வருவதற்கு முன் doller சம்பாதிக்க சென்றதில்லையா?
6) மென்பொருள் துறை வருவதற்கு முன் அண்ணாசாலையில் ஒரு கிரவுண்ட் ஆயிரங்களில்தான் விற்பனையானதா?
7)   10 பேர் கொண்ட பந்தயத்தில் 5 பேர் பின் தங்கினால் முன்னே செல்லும் எல்லோரையும் நிற்க செய்தால் முன்னேற்றம் கிடைக்குமா?
8)   தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் கூட திறை துறையில் கோடிகளில் பணம் சம்பாதிக்கவில்லையா?

இப்படி பல கேள்விகளை இந்த படம் விட்டு சென்றாலும் சமீபத்தில் வந்த மிக சிறந்த படங்களில் கற்றது தமிழும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.சரி இந்த கேள்விகளுக்கு பதிலை
அவரவர் விருப்பங்களுக்கு கொடுத்துவிட்டு கணிப்பொறி மற்றும் அது சார்ந்த வாய்ப்புகளையும் இழப்புகளையும் பார்ப்போம்.
 
உள்ளே குதிப்பதற்கு முன் பரவலாக உலாவி வரும் சில செய்திகள்

1) சில நிறுவனங்களில் படித்து முடித்தவுடன்(Freshers) சேர்பவர்களின் மாத சம்பளம் நம் நாட்டு ஜனாதிபதி சம்பளத்தைவிட அதிகம்
2) மென்பொருள் துறையில் இருப்பவர்களிடம் விவாகரத்துகள் சாதாரணம்
3) குறைந்த வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த துறையில் அதிகரித்துள்ளது
4) செலவில்லாமல் உலக நாடுகள் செல்ல இந்த துறை ஒரு முகவரி
5) கலாச்சார சீரழிவின் காரணகர்த்தாக்கள்
6) இந்திய பொருளாதார உயர்வில் இவர்கள் பங்களிப்பு அதிகம்
7) சமீபத்திய நிலம்,வீட்டு வாடகை உயர்வுக்கு இவர்களே காரணம்
8)   மென்பொருள் துறை வேலை வாய்ப்பை அதிகரித்திருக்கிறது

இப்படி பரவி வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா மிகைப்படுத்தப்பட்டிருக்கிறதா???????
                                                                                                                                                  தொடர்ந்து பார்ப்போம்

 

எனக்கென்று ஒரு உலகம் திசெம்பர் 14, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 9:00 பிப

எனக்கென்று ஒரு உலகம்
அதில் நீயும்
உன்னைச் சார்ந்தவைகளும்…..
உலக பேரழிகியின் புன்னகையும்
உன்னத புகழின் ஒரு துளியும்
குழலிசையாய் பெருகிவந்து
என்னைத் தொடாத ஒரு
தூர வெளியில் உன்
ஞாபகங்களின் ஒவ்வொரு சொட்டிலும்
இடையறாது நனைந்துகொண்டிருப்பேன்!
ஒரு நாள்
மரணம் வந்து என் வாசல் தட்டும்
அழைத்து உபசரிப்பேன்
உன் நலன் விசாரிப்பேன் – பின்
நீ உறைந்த அதன் வாகனத்தில்
மழை தூரலில் ஜன்னல் விரும்பும் குழந்தையாய்
உன்னருகில் வருவேன்
அதுவரை
வாழ்ந்துவிட்டு போகிறேன்
நீ வாழ்ந்த இடத்தில்
நீ விரும்பிய பூக்களோடு
உன் பாடலை பாடிக்கொண்டு………