தடங்கள்

ஜூலை 3, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:55 முப

பெய‌ரில் என்ன‌ இருக்கிறது

பெய‌ரில் என்ன‌ இருக்கிறது
நான் ந‌ம்புவ‌தாக‌
நம்ப‌ப்ப‌டும் க‌ட‌வுளும்
அவ‌ர் பெய‌ரால்
புனைய‌ப்ப‌டும் சித்திர‌ங்க‌ளும்!

பெய‌ரில் என்ன‌ இருக்கிறது
க‌ட‌வு சீட்டுக்காய்
வர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ புன்ன‌கையும்
அத‌ன் அடியாழ‌ங்க‌ளில்
நிர‌ம்ப‌ தொட‌ங்கும் க‌ச‌ப்பும்!

பெய‌ரில் என்ன‌ இருக்கிறது
வாழ்வ‌த‌ற்கென அணுகும் வெளிக‌ளில்
உப‌ரிக் கேள்விக‌ளும்
உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ ஆதாரங்க‌ளும்!

பெய‌ரில் என்ன‌ இருக்கிற‌து
த‌ய‌ங்கும் க‌ர‌ங்க‌ளும்
உற்று நோக்கும்
ப‌ழ‌கிப்போன‌ பார்வைக‌ளும்

Advertisements