தடங்கள்

இது(க‌ல்யாண‌ம்) தேவையா….அட‌ போங்க‌யா ஜூலை 25, 2009

 pic

 

 

சீறும்வினைய‌து பெண்ணுரு வாகித் திர‌ண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமல‌மு முதிர‌முஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்க‌ரைக‌ண்டிலேன், இறைவா , க‌ச்சியேக‌ம்ப‌னே
                                                                                           -ப‌ட்டின‌த்தார்

 

அற்புத‌மான‌வ‌ர்க‌ள் திரும‌ண‌மும் அற்புத‌மாகிற‌து. மோச‌மான‌வ‌ர்க‌ள் சேர்ந்தாலோ அது மோச‌மாகிற‌து. ம‌ற்ற‌படி திரும‌ண‌ம் ந‌ல்ல‌தும் அல்ல‌ , கெட்ட‌தும் அல்ல‌
                                                                                           -‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவ்

 

Marriage means cutting down your freedom;Getting attached legally to a woman/man. But there is nothing higher than Freedom
                                                                                                                     – Osho

 

காத‌ல் க‌ல்யாண‌மா நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மா என்ப‌தையும் தாண்டி திரும‌ண‌ம் என்ப‌து தேவைதானா அதுவும் இன்றைய‌ நெருக்க‌டியில் அதை க‌டைசிவரை ஜீவிக்க‌ வைத்திருப்ப‌து சாத்திய‌ம்தானா என்ற‌ ஐய‌ப்பாடுக‌ள் ப‌ல இருந்தும் நாமெல்லாம் அதை விட்டு விலகாம‌ல் அல்ல‌து அதை தெரிந்துகொள்ள‌ முய‌ற்சிக்காம‌ல் த‌டால‌டியாக‌ அந்த‌ மாய‌ சுழ‌லில் சிக்குவதே ஒரு விசித்திர‌ம்.

ஆண்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் என்ப‌து அடிப்ப‌டையில் ஒரு உட‌ல் தேவை, அந்த‌ தேவையிலே ப‌ல‌ர் நின்று விடுவதால் அதை தாண்டிய‌ ப‌ல‌ உன்ன‌த‌ங்க‌ள் புரிப‌டுவ‌தில்லை. பெண்க‌ளுக்கு அது ஒரு பாதுகாப்பு அந்த‌ பாதுகாப்பு கிடைக்காத‌ ப‌ட்ச‌த்தில் அல்ல‌து தேவைப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் அதில் இருந்து வெளியேறும் வ‌ழி அன்றைய‌ கால‌ கட்ட‌த்தை போல‌ல்லாம‌ல் இன்று எல்லா திசைக‌ளிலும் திற‌ந்திருக்கிற‌து.

இந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளோடு கால‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் கலாச்சார‌ குழ‌ப்ப‌ங்க‌ளும் வேறு.இந்த‌ கால‌கட்ட‌த்தில் ஆண்க‌ளின் உல‌க‌மும் பெண்க‌ளின் உல‌க‌மும் இரு வேறு திசைக‌ளில் ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருப்ப‌தாய் தோன்றுகிற‌து. அதில் ப‌ய‌ணம் செய்யும் ஆணும் பெண்ணும் திரும‌ண‌ம் செய்து அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர‌ எத்த‌னிப்ப‌து பெரும் ஆச்ச‌ரிய‌மே.

வ‌யிற்றில் ப‌ட்டாம்பூச்சி ப‌ற‌ப‌ற‌க்க‌ காத‌லை சொல்லி அல்ல‌து ம‌ண‌ப்பெண்/ம‌ண‌ம‌க‌ன் பார்த்து க‌ல்யாண‌மெனும் அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ரும்

ஆண்:
1) வேலை/தொழில்
2) ந‌ண்ப‌ர்க‌ள்
3) வார‌ விடுமுறை கொண்டாட்ட‌ங்க‌ள்

பெண்:
1) வீடு வாங்குத‌ல்/க‌ட்டுத‌ல்
2) குடும்ப‌ ந‌ல‌ன்
3) பிள்ளைக‌ளின் அதீத‌ எதிர்கால‌ க‌ன‌வு
4) மேற்சொன்ன‌வைக‌ளை அடைய‌ க‌ண‌வ‌ணை ச‌ரிக‌ட்டும் உத்திக‌ள்

என‌ மாறிவிட்டார்க‌ள்.

மேற்சொன்ன‌வைக‌ளில் அட‌ங்காத‌ ஆண் தஞ்சாவூர் த‌லையாட்டி பொம்மைக‌ள் எனும் அடை மொழியோடும்,பெண் முர‌ட்டுதன‌மாக‌ அட‌க்கி வைக்க‌ப்ப‌ட்டும் ச‌மூக‌ பார்வையில் ச‌கிப்புத‌ன்மை என்று பெய‌ரிட்டு வாழ்கிறார்க‌ள். ஒரு குறிப்பிட்ட‌ கால‌ க‌ட்ட‌த்திற்கு பிற‌கு திரும்பி பார்க்கும்போது எதுவோ தொலைந்த‌தாய் திகைத்துப்போகிறார்க‌ள்

அப்புற‌ம் என்ன‌ அது ஆங்…..காத‌ல்…காத‌ல் அது எங்கோ ம‌ங்க‌லாக‌ தேய்ந்து அழிந்துகொண்டிருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து. இனி வ‌ருங் கால‌கட்ட‌ங்க‌ளில் கால‌ம் ம‌னித‌னை க‌ல்யாண‌த்தைவிட்டு ஒதுக்கி வைக்கும் என்றே தோன்றுகிற‌து

Advertisements
 

பிரிய தோழி ஜூலை 18, 2009

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:36 பிப

என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி
இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை அலைகள்
இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய்
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
அதோ நம்சுவடுகள்
நடுக்கடலில் இறந்துகொண்டிருக்கிறது….

வேறு வழியின்றி பிரிவதாய் நீயும்
உன் சொல்கேட்பதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்
நட்பு….கொலைசெய்யபட்டதா ?
நட்பு….விபத்துக்குள்ளானதா ?
இல்லை….இல்லை அது
மனசாட்சி துறந்த மனங்களிலும் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்….

முகங்கள் முன் புன்னகைபோர்த்தி
இயல்புற்றிருப்பதாய் சுயம்மறைத்து,
நம் உரையாடல் நேரங்களில்
தொலைபேசி மறைத்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த,ஆறுதல்சொல்ல,ஆனந்தபட
அருகில் நீயிருப்பதாய் அவ்வப்போது சூன்யத்தில்
நானுன்னை விளிக்கவும் கூடும்….

எதுவெனினும் இன்றே இறுதி நாளென்பதால்,
சொற்கள் தீர்ந்துபோய்
உன் அழுகைகலந்த சம்மதம்கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மெளனத்தில் சொல்கிறேன்
போய் வருவோம்….என்
பிரிய தோழி!

 

வேறு என்ன செய்வது

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:33 பிப

என்னிலிருந்து உன்னை
எடுத்தெறியத்தான் சொன்னாய்
எதை நான் எறிவேன் ?
உடலெல்லாம் உன் வர்ணம் பரப்பும்
உதிரத்தையா……
உன் குரல் கேட்டு
உரக்க ஒலிக்கும்
இதய துடிப்புகளையா……
உறக்கத்திலும் உன்பெயர்
உச்சரிக்கும் என் உதடுகளையா…
எதை நான் எறிவேன் ?

நெருப்பிலும் நிற்க துணிந்தமனம்
வெறுக்க உன்னை விடவில்லை
வடுக்களாய் என்னில் பதிந்துவிட்டாய்!

கண்களால் கைதுசெய்து
காதலிக்காத குற்றமும்செய்து உன்
நினைவுச் சிறையில்
நிரந்தரமாக என்னை
தள்ளிவிட்டாய்
இனி நான்
உன்பெயர் உச்சரித்து
சுவாசித்திருப்பதை தவிர
வேறு என்ன செய்வது ?

 

நேசிக்கிறேன்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:27 பிப

எறிந்த என் மெளனத்தை
எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது
இந்த அலைகள்!
மெளனத்தின் ஆழத்தில்
மெல்ல காதல் அழிந்ததாய்
கற்பிதம் கொண்டாலும் காற்றில்
முகம் உரசிப்போகும் உன்
முந்தானையில் மீண்டும்
உயிர்கொள்கிறது என் காதல்!

காதல் இல்லையென
அடுக்கடுக்காய் ஆயிரம் காரணங்கள்
அள்ளி தெளித்தாலும்
பிறந்த நாள் பாிசாய் எனக்களித்த
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
பதிந்து வைத்திருக்கிறாய்
உன் பெயரை மட்டுமல்ல
உன்னையும்!

உன்னவன் இவனென
உன் உதடுகள் உச்சாித்தபொழுது
நின்றுதான் போனது உன்னை
துரத்திகொண்டிருக்கும் என்
நிமிடங்கள்!
பின்
கரம் பற்றியவன்
காலடியில் கொட்டினேன்
தழும்பும் என் காதலை!
உன்னை மட்டுமல்ல
நீ நேசிக்குமெல்லாவற்றையும்
நானும் நேசிக்கிறேன்!

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 4:57 பிப

free counters

 

GAY AND LESBIAN SEX ஜூலை 4, 2009

நான் பார்த்த‌ புரியாத‌, விசித்திர‌மான‌, குழ‌ப்ப‌மான‌,வினோத‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளை இங்கு ப‌திவு செய்வ‌து இந்த‌ ப‌குதியின் நோக்க‌ம்.

விசித்திர‌ம் 1:
ச‌மீப‌த்தில் சமூக‌த்தில் நியாய‌ப்ப‌டுத்த‌ப்டும் ஓரின‌ச் சேர்க்கைதான் இப்போது என் ம‌ண்டையை குடைந்து கொண்டிருக்கும் விசித்திர‌ம்.இய‌ற்கைக்கு அப்பாற்ப‌ட்ட‌துதான் ஆனால் ந‌டைமுறை நிஜ‌ங்க‌ளை அங்கிக‌ரிக்க‌ வேண்டும் என்று சொல்ப‌வ‌ர்க‌ள்

bisexual

homosexual

masochisim

transvestism

incest

voyurism

animal sex

என்று காம‌த்தின் பிற‌ ம‌ன‌ பிற‌ழ்வுக‌ளை ந‌டைமுறை நிஜ‌ம் என்று ஏற்றுகொள்வார்க‌ளா??? ஏற்க‌ன‌வே நாட்டில் incest குற்ற‌ங்க‌ள் த‌லையெடுக்க‌ துவ‌ங்கி விட்ட‌ன‌. பிற்கால‌த்தில் அவையும் குற்ற‌மல்ல‌ என்று ஏற்றுகொள்ள‌ப்ப‌டுமா?

பெற்றோர்க‌ளால் பார்த்து வைக்கும் திரும‌ண‌ங்க‌ளே பெரும்பான்மையாய் இருக்கும் ந‌ம் ச‌மூக‌த்தில் ஓரின‌ சேர்க்கையில் விருப்ப‌முள்ள‌ ம‌க‌னுக்காக‌ என் பைய‌னுக்கு உங்க‌ பைய‌ன பைய‌ன்(!!!!!!) பார்க்க‌ வ‌ந்திருக்கோம் என்று சொல்லும‌ள‌வு ப‌க்குவ‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ளா???

இத‌ற்கும் மேல் வேறு ஏதேனும் வ‌ர‌ன் தேடும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் இவ‌ர்க‌ளையும் ஏற்றுகொள்ளுமோ?
ச‌மூக‌த்தில் சிறுபான்மையின‌ராய் இருக்கும் ஓரின‌செர்க்கையாள‌ர்க‌ள் ம‌ற்றுமொரு ஓரின‌ சேர்க்கையாள‌ரை எங்க‌ன‌ம் அடையாள‌ம் காண்பார்.

பெரும்பான்மையாய் இருக்கும் ம‌க்க‌ளை ஒரின சேர்க்கையாள‌ர் துன்புறுத்தினால் அதை காப்பாற்ற‌ பொருத்த‌மான‌ ச‌ட்ட‌ங்க‌ள் இருக்கின்ற‌னவா?. உதார‌ண‌த்துக்கு ஒரு பெண் இன்னொரு பெண்ணை க‌ற்ப‌ழித்து விட்டார் என்று உறுதி செய்ய‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக‌ள்தான் இருக்கிற‌தா?
இர‌யிலில் வாலிப‌ர்க‌ளை குறி வைத்து மிர‌ட்டி காசி பறிக்கும் திருந‌ங்கைக‌ளை ஒடுக்க‌ ச‌ட்ட‌ங்க‌ள் இதுவ‌ரை இருக்கிற‌தா என்ன‌?

இனி ந‌ண்ப‌னோடு சேர்ந்து சுற்ற‌ முடியாது த‌ழுவி அன்பை சொல்ல‌ முடியாது. ச‌மூக‌ பார்வை மாறி போயிருக்கும்