தடங்கள்

விஸ்வ‌ரூப‌ம் பிப்ரவரி 5, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 4:23 பிப

விஸ்வ‌ரூப‌ம் பார்த்த‌ வ‌ர‌லாற்று க‌ட‌மையை நிறைவேற்றிவிட்டேன்.

“ஆங்…..என்ன‌ கேட்டிங்க‌ க‌ருத்தா பின்ன‌ 160(டிக்கெட்)+30(ச‌ர்வீஸ் சார்ஜ்)+120(ஃபுட் அன்ட் பிவ‌ரேஜ்)க்கு செல‌வ‌ழிச்சுட்டு அத‌ சொல்ல‌ல‌னா…!!!”

ம‌ன்னாதி ம‌ன்ன‌ன் ,பாச‌ம‌ல‌ர்,ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் ம‌ட்டும் புரிப‌வ‌ர்க‌ளுக்கு ம‌னித‌ர் உண‌ர்ந்துகொள்ள‌ இது ம‌னித‌ப் ப‌ட‌ம் அல்ல‌ என்ற‌ மேதைமை உண‌ர்வில் பின் ந‌வீன‌த்துவ‌ம்(Post modernism), நான் லீனியாரிட்டி(non linearity),இருத‌லிய‌ல்(Existentialism),க‌ட்ட‌மைப்புவாத‌ம்(Structuralism) எல்லாம் க‌ல‌ந்துக‌ட்டி த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ம‌லஹாச‌ன் என்ற‌ ப‌டைப்பாளியின் ஒரு 100 கோடி ப‌டைப்பு. இதுக்கெல்லாம் 6க்கு மேற்ப‌ட்ட‌ ஒற்றுமைக‌ளும் 60க்கும் மேற்ப‌ட்ட‌ வேற்றுமைக‌ளும் இருக்க‌லாம். சுருக்க‌மாக‌ ஒருவ‌ன் வெவ்வேறு பாத்திர‌த்தில்(ரோல்) எதிர்கொள்ளும் வாழ்க்கையின் கூறுக‌ள் என்று சொல்லலாம்

இந்த‌ பின் ந‌வீன‌த்துவ‌ ப‌ட‌த்தில் க‌தா நாய‌க‌ன் இத‌ய சுத்தி உள்ள‌ இஸ்லாத்தை உள்வாங்கிய ந‌ல்ல‌ முஸ்லிமாக‌ வ‌ருகிறான்,கொலை பாத‌க‌த்தை வெறுமே வேடிக்கை பார்க்கும் தீவிர‌வாதியாக‌ வ‌ருகிறான், ந‌ல்ல‌திற்கும் தீய‌திற்கும் அத‌ன‌த‌ன் நியாயங்க‌ள் சொல்லும் ரா ஏஜெண்டாக‌ வ‌ருகிறான்,உல‌கை ந‌ம்ப‌ வைக்க‌ பெண் சாய‌ல் மிகுந்த‌ அப்பாவி க‌ண‌வ‌னாக‌ வ‌ருகிறான்.

ப‌ட‌த்தில் இப்ப‌டியென்றால் க‌ம‌ல்ஹாச‌ன் என்ப‌வ‌ர் தயாரிப்பாள‌ராக‌,இய‌க்குன‌ராக‌,வ‌ச‌னக‌ர்த்த‌வாக‌, ந‌டிக‌ராக‌ வெவ்வேறு பின் ந‌வீன‌த்துவ‌(!!!) நிஜ‌ பாத்திர‌ங்க‌ள் ஏற்றிருக்கிறார். ந‌டிக‌ர் க‌ம‌லை விட‌ என்னை எப்போதும் வ‌சிக‌ரிப்ப‌வ‌ர்க‌ள் டைர‌க்ட‌ர் க‌ம‌லும் எழுத்தாள‌ர் க‌ம‌லும். ஒரு குறிப்ப‌ட்ட‌ கால‌க‌ட்ட‌த்திற்கு பிற‌கு விருதுக்காக‌ வ‌லிந்து அழும் ந‌டிக‌ர் க‌ம‌ல் அவ்வ‌ள‌வு பிடிக்காம‌ல் போயிவிட்ட‌து. ஆனால் விஸ்வ‌ரூப‌த்தில் எழுத்தாள‌ர் க‌ம‌ல், டைர‌க்ட‌ர் க‌ம‌ல் என்னை ஏமாற்றிவிட்டார்க‌ள். ந‌டிக‌ர் க‌ம‌ல் இவ‌ர்க‌ளை தூக்கி சாப்பிட்டுவிட்டார். ப‌ல‌ காட்சிக‌ளில் ந‌டிக‌ர் க‌ம‌ல் என்ற‌ யானைக்கு தீனி போட‌ முடியாம‌ல் எழுத்தாள‌ர் க‌ம‌லும் டைர‌க்ட‌ர் க‌ம‌லும் அர்த்த‌ம‌ற்ற‌ கெக்கே பிக்கே வ‌ச‌ன‌ங்க‌ளில் மூழ்க‌டிக்கிறார்க‌ள். ஒரு திரில்ல‌ர் ப‌ட‌த்திற்கு காமெடி என்ற‌ பெய‌ரில் இப்ப‌டி வ‌ச‌ன‌ங்க‌ள் தேவையா? புதுமுக‌ம் பூஜா தசாவ‌தார‌ம் அசினை ஞாப‌க‌ப‌டுத்துகிறார். க‌மல் சார் உங்க‌ ஹீரோயினுக்கு வேறு மாதிரி ந‌டிக்க‌ சொல்லி கொடுங்க‌. ஆண்ட்ரியா ஏன் வ‌ருகிறார் என்று தெரிய‌வில்லை. ஒருவேளை க‌ம‌லின் ம‌னைவியாக‌ வ‌ரும் பூஜாவிட‌ம் ச‌க்க‌ள‌த்தி ச‌ண்டை போட‌ என்றே சொல்ல‌லாம்.அதைதான் செய்கிறார்.

“****அதெல்லாம் ச‌ரி அதுருக்கானு கேக்குறீங்க‌ளா?*****” இருக்கு சார் இருக்கு.
க‌ம‌லின் அறிமுக‌ காட்சியில் வ‌ரும் ந‌ட‌ன‌ம்/ பாட‌ல்( நீ அவ்வித‌ம் நோக்கினால் நான் எவ்வித‌ம் நாணுவேன்…வாரே வா) ந‌ளின‌ம் அருமையோ அருமை காத‌லின் க‌டை துளி வ‌ரை சொட்டுகிறார்.ஆயிர‌ம் முத்த‌ங்க‌ளும் இத‌ற்கு ஈடாகாது

“*****அதில்லையா….அது…அது..அவ‌ங்கே சொன்ன‌து****” ஓ அதுவா…அதுக்கும் மேல‌யே இருக்கு
ப‌ட‌த்தில் ஒரு காட்சியில் அமெரிக்க‌ போலிசிட‌ம் மாட்டும் க‌ம‌ல் ம‌னைவியிட‌ம் கேட்க‌ப்ப‌டும் கேள்வி ப‌தில்க‌ள்
“அல்லாதான் உன் க‌ட‌வுளா? ‍ ”
” இல்ல‌ அது என் வீட்டுக்கார‌ர் க‌ட‌வுள் என் க‌ட‌வுளுக்கு நான்கு கைக‌ள் இருக்கும்”
” நாலு கைக‌ள் இருந்தால் சிலுவையில் எப்ப‌டி அறைவாய்”
” சிலுவையில் அறைய‌ மாட்டோம் க‌ட‌லில்தான் தூக்கி போடுவோம்”
இந்த‌ வ‌ச‌ன‌மெழுதிய‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா நாத்திக‌ க‌ம‌ல்
“கட‌வுள்தான் காப்பாத்த‌ணும் ” என்ற‌ ம‌னைவிக்கு
“எந்த‌ கட‌வுள்” என்று டைர‌க்ட‌ர் க‌ம‌லுக்கு தெரியாம‌ல் ந‌டிக‌ர் க‌ம‌லை நாத்திக‌ வ‌ச‌ன‌ம் பேச‌ வைத்து விடுகிறார்

வில்ல‌ன் சாகாத‌ த‌மிழ் சினிமாவை இப்போதுதான் அனேக‌மாக‌ பார்க்கிறேன். இந்த‌ க‌தை இதோடு முடிய‌வில்லை தொட‌ரும் என்று த‌யாரிபாள‌ர்,டைர‌க்ட‌ர் க‌ம‌ல் சொன்னாலும் வ‌ச‌ன‌க‌ர்த்தா க‌ம‌ல் ம‌க்க‌ளுக்கு புரிய‌ற‌ மாதிரி சொல்லியிருக்க‌லாம்
“ஒன்று முல்லா சாக‌ணும் இல்ல‌ நான் சாக‌ணும் அதுவ‌ரை க‌தை முடியாது ” என்று சொல்வ‌த‌ற்கு அர்த்த‌ம் இஸ்லாம் இதுவென என‌ நான் ந‌ம்பும் கோட்டுபாடுக‌ள் வெல்ல‌ வேண்டும் இல்லை அவ‌ர்க‌ள‌து வெல்ல‌ வேண்டும் என்ற‌ அர்த்த‌த்திலும்கொள்ள‌லாம் .

தான் இஸ்லாமிய‌த்தை உண‌ர்ந்து க‌டைபிடிக்கும் தீவிர‌வாதிக‌ளுக்கு மாற்றான‌ ஒருவ‌ன் என்று பட‌த்தின் ப‌ல‌ காட்சிக‌ளில் சொல்கிறார்.அவ்வ‌கையான‌ காட்சிக‌ள்

த‌வ‌று செய்த‌ ச‌க‌ ரா ஏஜெண்டிட‌ம் ,அவ‌ர்க‌ளால் அநியாய‌மாக‌ ஒரு உயிர் போக‌போவ‌தை ப‌ற்றி குமுறும்போது “அல்லா ந‌ம்ம‌ளை ம‌ன்னிக்க‌ மாட்டான்” என்கிறார் அத‌ற்கு ச‌க‌ ஏஜெண்ட் ” ந‌ம்ம‌ளை இல்ல‌ உங்க‌ளை நான் தீவிர‌வாதியாக‌ ந‌டிப்ப‌த‌ற்காக‌த்தான் இஸ்லாமிய‌ பெய‌ர் சூட்டியிருக்கிறேன்” என்று கோப‌ம்கொள்ளும்போது வ‌லியுட‌ன் அதை ஏற்கிறார்.

த‌ங்க‌ள் சாவு கிட்ட‌த்த‌ட்ட‌ உறுதியான‌ நிலையில் அந்த‌ ப‌க்க‌ம் தீவிரவாதியும் இந்த‌ ப‌க்க‌ம் க‌ம‌லும் த‌ங்க‌ளுக்காக‌ தொழும் இறுதி தொழுகையில் அவ‌ர‌வ‌ர் கோட்பாடுக‌ளை ச‌ம‌ர‌ச‌ம் இல்லாது சொல்லி செல்கிறார் டைர‌க்ட‌ர் க‌ம‌ல்.

உஸ்…போதும். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் டிரெய்ட‌ர் என்ற‌ ஆங்கில‌ ப‌ட‌ம் பார்த்தேன். த‌மிழ் சினிமா ம‌சாலாக்க‌ளுக்காக‌ சேர்த்த‌ காட்சிக‌ள்(அப்பாவி அடித‌டி பாவியாக‌ மாறும் விசில் ப‌ற‌க்கும் வ‌ழ‌க்க‌மான த‌மிழ் சினிமா பாணி),அழ‌குக்காக‌ க‌ம‌ல் கூட‌வே திரியும் பெண்க‌ள் இவை யாவ‌ற்றையும் நீக்கி விட்டால் விஸ்வ‌ரூப‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ட்ரெய்ட‌ர் ப‌ட‌ம்தான் க‌தைய‌ள‌வில். அந்த‌ ப‌ட‌த்தில் ஹீரோ க‌டைசியாக‌ சொல்லும் கிளைமாக்ஸ் வ‌ச‌ன‌த்தை விசுவ‌ரூப‌த்திற்கு பொருத்தி பார்க்கிறேன்(இதையேதான் க‌ம‌ல் சொன்னாலும் இர‌ட்டை அர்த்த‌ம் அதை ம‌றைக்கிற‌து) அது

You know the Qur’an says that if you kill an innocent person it’s as if you’ve killed all mankind

it also says that if you save a life,it’s like you have saved all mankind

Advertisements