தடங்கள்

நாவல் விமர்சனம் 2: ஜனவரி 12, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 3:13 பிப

நாவல் விமர்சனம் 2:
முன் கதை சுருக்கத்தை தற்கொலை ஒன்றுடன் முடிக்கும்போது அதிர்ந்து அடுத்தடுத்த பக்கங்கள் புரள தொடங்குகிறது. இருந்தாலும் துக்கம் தொண்டையை அடைத்ததில் எனக்கும் உடன்பாடில்லை-:) கடைசி குறுஞ்செய்தியை அழிக்கும் மாபெரும் துயரத்தை கடக்கும் தருணங்கள் சொல்லப்பட்டிருக்கும்போது. செல்போன் இன்றைய காலத்தின் சந்தோஷ கஷ்டங்களின் குறியீடாக இருக்கிறதல்லவா. ஒரு நட்பை காதலை உடைக்கும்போது சம்பந்தபட்டவரின் எண்ணை அழிப்பது எத்தனை வாதையை தருகிறது. அழிந்த பிறகும் நினைவில் அந்த எண் சுழன்று சுழன்று வருகிறது. அழைக்கும் பட்டனுக்கும் கேன்சல் செய்யும் பட்டனுக்குமிடையே எத்தனை முறை விரல்கள் மாறி மாறி பயணிக்கின்றன.
அப்புறம் அந்த தற்கொலை. நானும் பல மனிதர்களை கடந்திருக்கிறேன் தற்கொலைக்கான சுவடுகளை அவர்கள் எப்போதும் தாங்கியிருந்ததில்லை. அவர்களின் முதுகுக்கு பின்னே அது எப்போதும் பயணப்பட்டிருந்திருக்கிறது. அது அதற்கான தருணங்களுக்காய் காத்திருந்திருக்கிறது.
நான் முதன் முதலில் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் ஐஐடி யில் இருந்து வந்த ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்டான்.

இந்த உலகம்
எங்கோ செல்கிறது
நான் எங்கோ
சென்றுகொண்டிருக்கிறேன்

என்று முடியும் ஒரு ஒரிய கவிதையை தவிர வேறு காரணங்கள் எதையும் அவன் தற்கொலை குறிப்புகள் சொல்லவில்லை

 

நாவல் விமர்சனம் 1: ஜனவரி 10, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:31 பிப

நாவல் விமர்சனம் 1:
நாவலின் முன்னுரையை கவித்துவத்தோடு எழுதியிருக்கிறார் கதைசொல்லி. இது ஒன்றுடன் ஒன்று பிணைந்த metamorphic கதை. இடத்துடன் மனிதர்களும் வேறு வடிவமெடுத்த கதை என்று கதைசொல்லி முன்னுரையில் சொல்லியிருப்பதுடன் தான் சந்தித்த விசித்திர மனிதர்களையும் உதாரணம் காட்டியிருக்கிறார்.
கதை எழுதுவதுருக்காய் எழுத்தாளர்கள் கொடைக்கானல முதல் கனடா வரை பயணப்பட்டு ரூம் போட்டு எழுதியிருக்கிறார்கள். தனது முந்தைய நாவல் ஊத்தி மூடிய நிலையில் கதைக்காய் மும்பை வந்து தங்கி கதை எழுத முற்பட்ட யான் மார்ட்டலுக்கு (Life of pie) கதையின் கரு பாண்டிசேரி நேரு தெருவில் உள்ள இந்தியன் காபி ஹவுஸ்ஸில் கிடைத்தது. கதைசொல்லி கதையின் தளத்தில் இருந்து எழுதுவதை முழுவதுமாக புனைவு என்றும் சொல்ல முடியாது . கதையில் அவர் சொன்ன விசித்திர மனிதர்களில் நானும் ஒருவன்.
எத்தனை ஞாயிறு மதியங்களில் அலுவலக கண்ணாடி வழியாக வெறுமனே எடை கல்லை தூக்கி விளையாண்டுகொண்டிருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளிகளை பார்த்து பொறாமைபட்டிருப்பீர்கள். எத்தனை இரவுகளில் 2 மணிக்கு மேல் உறக்கமற்று அலுவலகத்தின் 10வது 11வது மொட்டை மாடியில் நின்று மஞ்சள் விளக்கு வழியும் சாலைகளை பார்த்துகொண்டிருந்தீர்கள்.எத்தனை முறை தீபாவளிக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு குழந்தைகளின் முகங்களை சந்திக்க திராணியற்று இருந்தீர்கள்.

 

நாவல்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 5:29 பிப

இன்று மதியம் நல்ல காய்ச்சலில் படுத்திருக்கும்போது ஆர்டர் செய்த நாவல் வந்திருந்தது. இந்த நாவல் படிக்க தொடங்கியதிலிருந்து அதன் விமர்சனம் தொடர்ச்சியாக எழுதபோகிறேன் ( உச்சத்தில் போன காய்ச்சல் காரணமாகவும் இருக்கலாம்-:)) அந்த நாவலின் பெயரையோ ஆசிரியரையோ குறிப்பிடாமல். மெட்டா டேட்டாக்கள் வைத்து அறிந்துகொள்க. இந்த முடிவுக்கு காரணம் கதை களம்:
அது ஒரு வேட்டை காடு, உறுப்புகள் சிதைந்த உயிர் மட்டும் மிஞ்சியிருக்கும் போர்களம், பிரளயம் சூழ் உலகை தாக்கியிருக்கும் தனிமை. அதில் நானும் ஒரு பாத்திரம் எனது விமர்சனம் நாவலை சார்ந்து எனக்கு தெரிந்த உபதகவலை தருவதும் முடிந்தால் நாவலை கிழிப்பதும்-:).
கதையின் ஆசிரியர் தனது முன்னுரையில் சொன்னபடி இதை ஒரு டைரி குறிப்பாகவும் பார்க்கலாம் இல்லை ஒரு பைத்தியகாரனின் உளறலாகவும் பார்க்கலாம்-:)