தடங்கள்

சான்றோனாக்க‌ல்……… ஒக்ரோபர் 5, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 8:31 முப

ந‌ல்வினையென்றே
க‌ருப்பையென‌தை க‌ழ‌ற்றி
கை தொடாத‌ தூர‌த்திலிட்ட‌ன‌
ஓராயிர‌ம் கைக‌ள்!
ஒதுக்கிய‌ கைக‌ளின் சிறைக‌ளில்
வ‌ழிந்தோடுகிற‌து என்
விந்து துளியொன்று
அத‌ன் ப‌சித்த‌ழும் குர‌லுக்கு
சுர‌க்கின்ற‌ன என் முலைக‌ள்
பிதுக்கி பிர‌ப‌ஞ்ச‌மெங்கும் தெளிக்கிறேன்
பின்னொரு இர‌யில‌டியில்
வ‌ற்றி காய்கிற‌து முலைக‌ள்
ப‌ய‌ண‌மென‌து துவ‌ங்குகிற‌து
இர‌க‌சிய‌மாய் மிக‌ இர‌க‌சிய‌மாய்
க‌ருப்பையில் வ‌ள‌ரும்
பிண்ட‌த்தின் ப‌சித்த‌ வ‌யிற்றை
நிறைக்கின்ற‌ன‌ என் கைக‌ள்!

Advertisements
 

இய‌லாமை ஜூலை 17, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:46 முப

அம்மா வேலைபார்க்கும் வீட்டில்
இந்த‌ தீபாவ‌ளிக்கு
வாங்கி வ‌ந்த‌
அந்துருண்டை வாச‌ம் வீசும்
ப‌ழைய‌ கிழியாத‌
ப‌ட்டு பாவாடையும் ச‌ட்டையும‌ணிந்து
ப‌ள்ளியில் முத‌ல் ஆளாய் நுழைந்து
சிட்டு குருவியாய் சுற்றி திரிகையில்
த‌லை நிறைய‌ ம‌ல்லிகையுட‌ன்
ந‌றும‌ண‌ம் வீசும் புத்தாடையுட‌ன்
வ‌குப்பு தோழிக‌ள் வ‌ர‌
கூனிக் குறுகி
நீள‌ மைதான‌த்தின் ஓர‌த்தில்
உறைந்து நின்ற‌து அந்த‌
ஒற்றை செடி!

 

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:45 முப

அம்மா வேலைபார்க்கும் வீட்டில்
இந்த‌ தீபாவ‌ளிக்கு
வாங்கி வ‌ந்த‌
அந்துருண்டை வாச‌ம் வீசும்
ப‌ழைய‌ கிழியாத‌
ப‌ட்டு பாவாடையும் ச‌ட்டையும‌ணிந்து
ப‌ள்ளியில் முத‌ல் ஆளாய் நுழைந்து
சிட்டு குருவியாய் சுற்றி திரிகையில்
த‌லை நிறைய‌ ம‌ல்லிகையுட‌ன்
ந‌றும‌ண‌ம் வீசும் புத்தாடையுட‌ன்
வ‌குப்பு தோழிக‌ள் வ‌ர‌
கூனிக் குறுகி
நீள‌ மைதான‌த்தின் ஓர‌த்தில்
உறைந்து நின்ற‌து அந்த‌
ஒற்றை செடி!

 

அப்பா மே 11, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 6:13 முப

ந‌ம் இருவ‌ருக்குமொரு அறிமுக‌ம்
தேவைப்ப‌ட்ட‌து.
அறிமுக‌மான‌ நாளில் ச‌ம்பிர‌தாய‌
கைக்குலுக்க‌ல்போல் ஒரு பார்வையோடு
புற‌க்க‌ணித்தாய் என்னை.
என்ன‌ செய்வ‌து நீ விரும்பும் வாச‌மும்
க‌த‌க‌த‌ப்பும் என்னால் த‌ர‌முடியாத‌போது!

இரு தோழ‌ர்க‌ளுக்கிடையே நடைபெறும்
உரையாட‌ல்க‌ளை வ‌ழிப்போக்க‌னாய்
பார்த்து சென்ற‌ என் த‌க‌ப்ப‌னின் வ‌ழியிலேதான்
இன்று நானும் ப‌ய‌ணிக்கிறேன்.

நீ
உல‌க‌ம் பார்த்த‌ நாளில்
உற‌வுக‌ளை பொருட்ப‌டுத்தா
ஞானியின் மன‌ நிலையிலிருந்தாய்
நானோ
நீ அறியா உன் சுக‌த்திற்காய்
மாய‌ க‌ர‌ங்க‌ளால் இழுக்க‌ப்ப‌ட்டு
குழ‌ந்தையாய் தேம்பிய‌ழுது சென்றேன்

க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌ என் க‌ண்ணீர் துளிக‌ளில்
கால‌ம் க‌ரைந்து விட்ட‌து
உன் க‌டித‌ங்க‌ளும் முட‌மாகி விட்ட‌ன‌
அல்ல‌து நான‌றியா க‌ணிப்பொறியில்
சிக்கி விட்ட‌ன‌
இன்றும் நீ
ஞானியாய்தானிருக்கிறாய்
நானும்
குழந்தையாய்தானிருக்கிறேன்

 

 

நினைவிழந்தவனாகிறேன் ஏப்ரல் 7, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 3:13 முப

திசைகள் தொலையும்
அடர்ந்த காட்டுக்குள்
உனக்கும் எனக்குமான தேடல்
தினம் தொடர்ந்திருக்கிறது
 நம் தேடல்களின் திசைகளின் முனைகளில்
 நாம் சந்தித்திருப்பதும் –  பின்
தெரிந்தே நம் திசைகள் தொலைப்பதும்
 நம் மேல் திணிக்கப்பட்ட   
விளையாட்டின் விதிகளன்றி வேறில்லை!

 நம் சந்திப்பின் தொடக்கமாய்
 திறக்கும் கதவோடே தொடங்கும்
உன் குறும் புன்னகை – பின்
குறும்பு சிரிப்பாய் விரிவடையும்
தருணங்களோடெ நமக்கான நேரம்
 நிறைவடைந்து விடுகிறது!

அடர்ந்த மௌனங்கள் உறையும்
 நம் அறைகளில் உன் மறைக்கப்பட்ட
கண்ணீர் துளிகளோடே தொடங்கும்
என் புறப்பாடு  -பின்
உன் சாத்தப்பட்ட கதவுகள்  
பின்னால்  கதறலோடு
முடிந்திருக்கும்!

என் விமான உயரங்களிலும் மேல் எழுந்து
என்னை ஆக்கிரமி்த்திருக்கும் உன் நினைவுகள்
கண்டங்கள்,கடல்கள், நிலப்பரப்புகள்
எல்லாவற்றையும் வாரிசுருட்டி
இல்லாமல் கரைத்துவிடுகிறது-பின்
உன் நினைவு பள்ளத்தாக்கிலேயே
 நினைவிழந்தவனாகிறேன்.

 

சொல்கிறாய் காதலை பிப்ரவரி 27, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 3:32 பிப

கைவிரல்கள் எதேச்சையாக
கை தீண்டி
வெடுக்கென நீ மீட்டுக்கொள்ளும்போதும்
கண்களின் மோதலில்
வார்த்தைகள் சிக்கிக்கொள்ளும்போதும்
காலுடைந்து நான் கிடக்க
கண்களில் குளம் தேக்கும்போதும்
பார்க்கத்தோன்றியும் பார்க்க மறுத்து
பார்வையை இடம்மாற்றும்
உன் இரண்டு மனதவிப்பிலும்
கொட்டி விடுகிறாய்
என்னிடம் சொல்ல
மறுக்கும் உன் காதலை!

 

நீயில்லா பொழுதுகள் பிப்ரவரி 13, 2008

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:38 பிப

save.gif

இன்றும் விடிந்தது
விரலெடுத்து தலைகோதி
உறக்கம் கலைக்கும்
உன் விரல்களன்றி!

தோப்பில் நகரில் இன்றும்
குயில்கள் கூவியது
அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதை
நீயும் நானும் தவிர யாருமற்ற வீட்டில்
இரகசியமாய் சொல்லும் உன் குரலின்றி!

வழக்கம்போல் இன்றும்
துடைக்க துண்டு மறந்து
குளியலறையில் நுழைகிறேன்
பின் தெப்பமானது
உனக்கு பிரியமான
உன் சோபா
காப்பாற்ற நீயின்றி!

நீயற்ற பொழுதுகள் இனி
திரும்ப திரும்ப நிகழும்
கடலை பிரிந்து
கரையில் மாயும் அலைபோல!