தடங்கள்

TRACKS திசெம்பர் 31, 2020

Filed under: Films — bashakavithaigal @ 7:09 பிப

2000 மைல் ஆஸ்திரேலிய பாலைவனத்தை கால் நடையாக 3 ஒட்டகங்களுடனும் ஒரு நாயுடன் கடந்த பெண்…..வாழ்க்கையை பயணங்கள மாற்றி போடுகிறது என்றால் பயணங்களில் வாழ்க்கையை தேடிய பெண்…
படமாகவும் வந்திருக்கிறது.

 

THE WAY

Filed under: Films — bashakavithaigal @ 7:08 பிப

தமிழில் பயண படங்கள் என்று தேடினால் பெரும்பாலும் மெட்ராஸ் டூ பாண்டிசேரி வருகிறது…..பக்கத்துல அப்படிக்கா கேரளா போனா நீலாகாசம் பச்சகடல்னு துல்ஹர் படம் கொஞசம் உலகதரமா இருக்குது. அப்படியே ஆன்மிக பயணம்(Pilgrimage) படம் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தால் நம்ம ஆட்கள் முழுவதும் கடவுள் படமாக சாமி கண்ண குத்திரும்னு மிரட்டிதான் எடுத்து வச்சுருக்காங்க…..அழகான ஆன்மிக பயண படம் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்து வாழ்வின் அழகியலை அபத்தங்களை அழகான வசனங்களால் நிரப்பி,வழியெல்லாம் தமிழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் பண்பாடு பழக்கவழக்கங்களுடன் சொல்லி இறுதியில் ஒரு சிலிர்ப்பூட்டும் ஆன்ம தரிசனத்தோடு முடிவடைய வேண்டும் இந்த படத்தை போல். உதாரணத்திற்கு மதுரையில் ஆரம்பித்து திருநெல்வேலி குற்றாலம் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் கால்நடை பயணத்தையோ அல்லது மதுரையில் ஆரம்பித்து திருச்சி தஞசை பெரியகோவில் மற்றும் சோழர்கள் கட்டிய சிறுசிறு கோவில்களை வரலாற்று பார்வையில் நிரப்பி தொடர்ந்து வேளாங்கண்ணி பயணப்பட்டு நாகூரில் அழகான ஒரு சூஃபி பாடலுடன் நிறைவடையலாம்.

 

certified copy திசெம்பர் 30, 2020

Filed under: Films — bashakavithaigal @ 7:45 பிப

Abbas Kiarostami-யின் செமையான கிரியேஷன் இது. டஸ்கனி என்ற அழகிய கலைகள் கொட்டி கிடக்கும் இத்தாலிய நகரில் காட்சிகள் நகர்கிறது. டாவின்ஸி தன் கையால் வரைந்த மொனலிசா ஓவியமே ஒரு காப்பிதான் அதன் ஒரிஜனல் அதற்கு மாடலாக இருந்த பெண்…ஆக நாம் ஒரிஜனல் என்று நினைப்பதெல்லாம் ஒரிஜனல் இல்லை கிட்டாதபட்சத்தில் காப்பியில் அழகை காணுங்கள் மாதிரி சிந்தனை உள்ளவர் ஹீரோ…சிங்கிள் மதர் எதுத்து பேசும் டீன் ஏஜில் நுழைந்துகொண்டிருக்கும் மகன் இவர்கள் இடையேயான உறவை சொல்வதுதான் இந்த படம். கல்யாணம் வரை ஆச்சரியமூட்டும் துணை கல்யாணத்திற்கு பிறகு ஒரு அதிர்ச்சி தருவார்கள் இல்லையா அந்த உணர்வை தரும் பல காட்சிகள் கதையில்…

 

LOLITA

Filed under: Films — bashakavithaigal @ 7:44 பிப

நபகோவ் எழுதிய நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது இந்த படம்…பல வெர்ஷன்கள் இருந்தாலும் 97-ல் வந்த வெர்சன் செம…பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் படங்களெல்லாவற்றிற்கும் அடிப்படை லொலிட்டாதான்

 

Turin hourse

Filed under: Films — bashakavithaigal @ 7:43 பிப
 

House maid திசெம்பர் 27, 2020

Filed under: Films — bashakavithaigal @ 5:33 பிப

உலகப்படங்கள் பார்க்கும்போதெல்லாம் ஆங்காங்கு பொறி தட்டும் இதே மாதிரி எங்கோ படித்திருப்பது போல்…அதில் நிறைய தமிழ்/மலையாள நாவல்களில் ஆங்காங்கு இருக்கும். தகழி செம்மீன் எப்போது எழுதினார் பெர்ஃபெக்ட் ஸ்ட்ராம் எப்போது வந்தது?! முஸ்தபாகண்ணுவும்(சாய்வு நாற்காலி) பூக்கொயா தங்களும்(ஸ்மரகசிலகள்) ,ஹீன்(த ஹவுஸ் மெயிட்) டும் மன்னராட்சி மக்களாச்சி என எல்லா காலத்திலும் நில பிரபுதுவத்தின் அல்லது காசால் எல்லாவற்றையும் அளக்கும் உயர்வர்க்கத்தின் பிரதிநிதிகள்…பூங்குஞசி பீபியும் நயோமியும் அதை ஏளனமாக மதிப்பீடுகளற்று பார்த்துகொண்டிருக்கும் மவுன சாட்சிகள்….. தமிழில் உலக படங்கள் எடுக்க கதையில்லை என்றெல்லாம் இல்லை….மிக பெரும் கதாசிரியர் என ஒருவர் ஒரு யுட்யூப் சானலில் பிரஸ்தாபம் பண்ணுவதை கேட்கையில் முடியை சிலுப்புவதையும் வேகமாக நடப்பதையுமே தகுதியாக வைத்து கதை எடுத்துள்ளார்கள் என தெரிகிறது. அவர் சிலாகித்து சொன்னது பெரும்பாலும் மட்டமான கதை பின்னல்கள்….

 

Killing me softly திசெம்பர் 11, 2020

Filed under: Films — bashakavithaigal @ 3:59 பிப

நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். கொஞசம் சிவப்பு ரோஜாக்கள் சாயலில் இருந்தாலும் கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட். எரோட்டிக் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக நகர்கிறது.

 

Bad Guy

Filed under: Films — bashakavithaigal @ 3:54 பிப

கிம் கி டுக் இயக்கிய கொரிய படம்….வழக்கம்போல் கிம்கிடுக் நிஜ வாழ்வின் இருண்ட பகுதிகளை காட்டுகிறார். கதை கொஞசம் நம்மூர் சில நேரங்களில் சில மனிதர்கள் சிறை ஜாடையில் இருந்தாலும் கொரிய கான்டக்ஸ்ட்டுடன் பார்ப்பது அவசியம். தலையில்லாமல் கடல் மண்ணில் புதைக்கப்பட்ட படத்திற்கு இறுதியில் தன்னுடைய மற்றும் வில்லனின் தலையை பொருத்தி பார்க்கும் நாயகி காட்சி சொல்லும் மெட்டஃபர் அட்டகாசம். இந்த படத்தில் மெயின் கதாபாத்திரம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வாயை திறந்து பேசுகிறான். இதேபோல் 3-அயர்ன்லும் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்

 

An Easy Girl

Filed under: Films — bashakavithaigal @ 3:45 பிப

இளம் பிரெஞசு டைரக்டரால் தயாரிக்கப்பட்ட இந்த படம் கேன்ஸ் விழாவில் பரிசு வாங்கியிருக்கிறது. நம் பால்யத்தில் கோடை விடுமுறை என்று ஒன்று வரும்.பெரும்பாலும் தாத்தா வீட்டுக்கோ சென்னை போன்ற மா நகரத்துக்கோ இல்லை சென்னையிலிருந்து கிராமத்துக்கோ செல்வோம்…அங்கே நமக்கு வாழ்க்கை முழுவதும் சொல்ல நம்மை சுற்றியிருக்கும் ஒரு கதை கிடைக்கும். நமது வாழ்வை தீர்மானிக்கும் ஸ்பார்க்குகளும் அங்கு கிடைக்கலாம்.