தடங்கள்

ஒரு ம‌ர‌ண‌ம் ஜூலை 9, 2011

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:02 பிப

புல‌ன்க‌ளில் துளிர்க்கும் ம‌ர‌ண‌ம்
பார்க்காத‌வ‌ர்க‌ள்,பார்த்து ம‌றைந்த‌வ‌ர்க‌ளை
பார்த்து கொண்டிருக்கும்
ம‌ல்லிகையில் ச‌ந்த‌ன‌ம் வ‌ழிந்த‌
வாடையாய் வ‌ழிந்து கொண்டிருக்கும்
இறுதி ஏற்பாடுக‌ளை தீர்மானிக்கும்
இர‌க‌சிய‌ங்க‌ள் எதிரே இருக்கும்
ப‌ட்ட‌றை ஒலியை மீறி
ஒலித்து கொண்டிருக்கும்
அத‌ன் ருசி
க‌டுந்தேளின் அட‌ர்ந்த‌
விஷ‌மென‌ எச்சிலுட‌ன்
க‌ரைந்து கொண்டிருக்கும்
பின்
மூங்கில் க‌ம்புக‌ளுக்கும்
ஓலை பாயுக்குமிடையே
ந‌சிகேத‌னிட‌ம் சொல்ல‌ப்பட்ட‌
இர‌க‌சிய‌மாய் புதைந்திருக்கும்!

Advertisements
 

நான்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:01 பிப

நிர்வாண‌ம் அணிந்த‌து என்
தேக‌ம் ம‌ட்டும‌ல்ல‌ நானும்
அம்ம‌ண‌த்திற்கு ஆடைக‌ள்
பொருத்தி வில‌க்கி
பார்க்கும் விளையாட்டில்
க‌றை ப‌டிகின்ற‌ன‌
உங்க‌ள் க‌ர‌ங்க‌ள்!

என்
க‌ண்ணாடி குடுவையில்
நிர‌ம்பிருக்கின்ற‌ன‌ உங்க‌ள் பொய்க‌ள்
உங்க‌ள் ந‌ள்ளிர‌வுக‌ளில்
அதை ப‌ருகுகிறீர்க‌ள் பின்
உன்ம‌த்த‌ போதையில் என்
உல‌க‌ம் தேடுகீறிர்க‌ள்!

அலைக‌ள் அரிக்கும் ம‌ணலில்
என் த‌ட‌ம் தேடுகிறீர்க‌ள்.
முன் ப‌திந்த‌வ‌ர்க‌ளுக்கு பின் ப‌திந்தும்
பின் ப‌திப்ப‌வ‌ர்க‌ளுக்கு முன் ப‌திந்தும்
யாரோ விட்டு சென்ற‌ கால‌டியின்
த‌ட‌ம் ம‌ட்டுமே நான்!

 

ச‌ர‌ண‌டைத‌ல்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:01 பிப

ச‌ர‌ண‌டைந்தாலும்
க‌ண்ணம்மாக்க‌ளுக்கும்,செல்ல‌ம்​மாக்க‌ளுக்கும்
நக‌ரின் மைய‌த்தில் இர‌ட்டை அறை வீடும்
சொகுசு காரும் வேண்டியிருக்கிற‌து.

 

ப‌சி

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:00 பிப

ஆளுங்க‌ட்சியா,எதிர்க‌ட்சியா
இட‌தா,வ‌லதா
க‌ம்யூனிஸமா,முதலாளித்துவ‌மா
எதுவாய் இருக்கும்
வறுமை எடுத்து வ‌ந்த‌
இன்றைய‌ ப‌சி!