தடங்கள்

சுயம் ஜனவரி 15, 2012

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:58 பிப

க‌ன‌ன்றிருக்கும் ஆசைக‌ளில்
சித‌றுகிற‌து ‘நான்’
க‌ங்கையில் க‌ரைந்த‌பின்பும்
க‌ரையில் தேங்கிவிடுகிற‌து

Advertisements
 

மோக‌த்தால்…

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:51 பிப

உன் விர‌ல்தொட்ட‌ க‌ண‌த்தில்
ப‌ற்றிய‌து பின்பு
பெருவெளியாவும் எரித்து
கால‌ம‌ற்ற‌ கண‌த்தில்
என் சாம்ப‌ல் இரைக்கிற‌து!

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:48 பிப

ஒரு உட‌லிலிருந்து
தெரியும் இருமுக‌ங்க‌ளை
காட்டும் க‌ண்ணாடிக்கு
தெரியாத‌து ந‌ம்
இடைவெளிக‌ள்

 

ம‌லையென‌ வாழ்வு

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:48 பிப

ஒரு இர‌க‌சிய‌ம் உடைப‌டும்போது
பிள‌வுப்ப‌ட்ட‌ ம‌லைக‌ளுக்கிடையேயான‌
நாம் ப‌ய‌ணிக்க‌ முடியாத‌
… சாலை உருவாகி விடுகிற‌து

க‌ருமை க‌விழ்ந்த‌ இடுக்குக‌ளில்
வ‌ழியும் அத‌ன் துய‌ர‌ த‌னிமைக‌ள்
உன‌க்கு என‌க்கும்
வெவ்வேறு நிற‌ம் கொண்ட‌வை

யாவ‌ரும் ப‌ய‌ணித்து உற‌ங்கும்
நிலா இர‌வுக‌ளில்
நிழ‌ல்க‌ள் மோதும் சாலையில்
ப‌ங்கிட‌ப்ப‌டும் இர‌க‌சிய‌ங்க‌ள்
க‌ருஇருளில் பெருந்துளையில்
ஈர்க்க‌ப்ப‌ட்டிருக்க‌ கூடும்!

 

புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ள்

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:46 பிப

இர‌த்த‌ம் தெறிக்கும் நாட்க‌ளில்
க‌றைக‌ளாய் த‌ங்கி விடுகிற‌து
உன் மீதான‌ ஏமாற்ற‌ம்
நான‌றியா நில‌த்தில்
வேறூன்ற‌வே முய‌ல்கிறேன்
வென்னீரையெனும் ஊற்றாதிரேன்

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:46 பிப

நீ
புற‌க்க‌ணித்து போன‌பிற‌கும்
காத்திருக்கிற‌ன‌ என் கோரிக்கைக‌ள்
திரும்பும் உன் த‌ட‌ங்க‌ளிலெல்லாம்

 

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:46 பிப

உருகி க‌ட‌ல்
வ‌ழியும் நில‌வு
அம்ப‌ல‌ப்ப‌டுத்துகிற‌து
என் காதோர‌ம் க‌சியும்
உன் இர‌க‌சிய‌ங்க‌ளை!