தடங்கள்

பிரிவு மே 2, 2009

Filed under: கவிதைகள்,Uncategorized — bashakavithaigal @ 10:36 முப

lllll

ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ தெருவில்
த‌ழுவி ம‌றையும்
பிற்ப‌க‌ல் வெயிலாய்
அந்த‌ பிரிவு நிக‌ழ்ந்துவிட்ட‌து
பிரிவென்ப‌து ஒரு தொட‌க்க‌ம்
பிற‌கு ஒரு ச‌ட‌ங்கு
பிற‌கு ஒரு வ‌லி
பிற‌கு ஒரு மௌன‌ம்
பின்பு ஏதுமில்லை
விட்டு தொலைந்த‌
ம்று நாளில்
கூழாங்க‌ற்க‌ளின் நிற‌த்தை
தாங்கி செல்லும் ந‌தியாய் இருப்பேன்
என‌து திசைக‌ள் அந்த‌
க‌ற்க‌ளின் முக‌ங்க‌ளில் செதுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
பிரிதொரு நாள்
பிரிதொரு தெரு
பிரிதொரு வான‌ம்
இடைக்கால‌த்தில் அடைக்க‌ல‌ம் த‌ந்த‌வ‌ர்க‌ளே, த‌ந்த‌வைக‌ளே
ந‌ன்றிக‌ள் ப‌ல‌!!!!

Advertisements
 

என் சிறைவாச‌ம் மார்ச் 7, 2009

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 8:23 பிப

sss2

இன்று
முத‌ல் முறைய‌ல்ல‌
எண்ணிக்கை முடிந்து வ‌ழியும்
ஒரு மாலையில் மீண்டும்
ந‌ட‌த்தி விட்டாய்.
விவாத‌ முடிவில் தொடங்கும்
நீண்ட‌ மௌன‌த்தில்
இற‌ந்து போயிருந்தாய்
நாளை மீண்டுமொருமுறை
உன்னை உயிர்பிப்ப‌தாய்
உன் திசைக‌ள் தேட‌த் துவ‌ங்குவேன்
தொட‌ரும் இந்த‌ விளையாட்டை
தின்று நீ ஜீவித்திருக்கிறாய்
விளையாட்டை விட்டு வில‌கும்
என் தார்மீக‌ உரிமையை
என் பேர‌ன்பு க‌ட‌ல் ஒளிக்க‌
அத‌ன் அடி ஆழ‌த்தில்
தொலைந்தே போகிறேன்

 

க‌விதைக‌ள் திசெம்பர் 8, 2008

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 1:25 முப

இறுக்கி அனண‌த்து
இத‌ழ் இணைத்தாய்
ந‌ம்முள் நிர‌ம்பிய‌து
ந‌ம் உயிர்!
/*****************************************************************************/
“ம்மியாவ்…ம்மியாவ் பூனேக்குட்டி…”
குழ‌ந்தையை கொஞ்சுகிறாய்.
குழ‌ந்தையாய் உன்ன‌ருகில்
நான்!
/*****************************************************************************/
ஒரு குளிர் இர‌வில்
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ப‌தித்த‌
க‌ருவான‌ம் போர்த்திய‌
மொட்டை மாடியில்
நீண்ட‌ மின்வெட்டென‌
சுவ‌ற்றின் அந்த‌
முனையில் நீயும்
இந்த‌ முனையில் நானும்
வான‌ம் பார்த்து அம‌ர்ந்திருந்தோம்
அருகிலிருந்த‌ ஒற்றை ந‌ட்ச‌த்திர‌ம்
ந‌ம்மை பார்த்து
க‌ண் சிமிட்டிய‌து!
/*****************************************************************************/
நீ
ந‌ம்மை பிரிக்கும் எந்த‌
பாதைக‌ளின் திருப்ப‌ங்க‌ளிலும்
என்னைப் பார்க்கும் பொருட்டு
திரும்பிய‌தில்லை
நான்
ந‌ம்மை பிரித்த‌ திருப்ப‌ங்க‌ளில்
தென்ப‌டுவாயென‌ திரும்ப‌ திரும்ப‌
திரும்பிகொண்டிருக்கிறேன்!
*****************************************************************************/

 

க‌விதை ஜூலை 12, 2008

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 10:18 முப

உன்
விர‌ல் தொடும் புள்ளியோடு
முழுமைய‌டைந்திருந்த‌து என்
வாழ்க்கையெனும் வ‌ட்ட‌ம்!
/************************************************************/
க‌ண்ணாடியில்
உன் இத‌ய‌ க‌த‌க‌த‌ப்பில்
க‌ழுத்தோர‌ ஈர‌ முத்த‌த்தில்
புகைப்ப‌ட‌மாய் உறைந்து கிட‌க்கிற‌து
என் பிம்ப‌ம்!
/*****************************************************************/
தின‌ம்
சிரிக்கும் க‌ண்க‌ளில்,
ஒளிரும் புன்னைகையோடே உன்
உத‌டுக‌ள் ஒலிக்கும்
Good Night ல்
என்  நாள் துவ‌ங்கிவிடுகிற‌து!
/*****************************************************************/

நீயில்லா இன்னொரு
நாள் முடிந்து விட்ட‌து
வாழ்த‌லுக்கான‌ என் போராட்ட‌ம்
உன் நினைவுக‌ளை அரித்து
தின்று விட்டிருந்த‌து
உன் சுவாச‌ம் நிர‌ம்பியிருக்கும்
ந‌ம் வீட்டிற்கு அலுவ‌ல‌க‌ம் முடிந்து
திரும்பிகொண்டிருக்கிறேன்!

 

நான் இப்படித்தான் பிப்ரவரி 7, 2007

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 9:17 பிப

சுவாரஸ்யமற்றுதான் போய்விட்டது
காற்றில் மகரந்தமில்லை
உனது வெறுப்பு
எனது வேர்களை
கருக்கிவிட்டது.
இதழ்கள் இழந்த ஒற்றை ரோஜாவாய்
காற்றில் ஆடி
கடைசிமுறையாக உன்
கருனணதுளி பருக காத்திருக்கிறேன்!

உன் தோழி,உன் மரப்பாச்சிபொம்மை
உன் கவிதையென
உனக்கு பிரியமானவைகளில்
உன்னையே கண்டேன்.
விட்டுவிடு என்றா சொன்னாய்
சொன்ன கணத்தில்
என் செல்களிலெல்லாம் பொதிந்த நீ
சிதறி போகிறாய்……
சிதறல் சேகரிப்பதில் சிந்தைபோகுதன்றி
சீ…..போ என்று உதறிப்போகுதில்லை
நான் இப்படித்தான்………….

 

நானுன்னை காதலிக்கிறேன்

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 9:17 பிப

“ஏன் சுரேஷ்….”
“ஏனென்றால் நானுன்னை
காதலிக்கிறேன்”
கேட்கப்படும் உன்
கேள்விகளுக்கெல்லாம் ஒரே
பதிலாக சொல்ல முடியவில்லை
நேசிக்கிறாயா
என் நினைவால்
தேய்ந்துகொண்டிருக்கிறாயா,
பாசம் வைத்திருக்கிறாயா,
என் ஆழ்ந்த இதயத்தின்
இருள் பள்ளத்தாக்குகளில்
ஊறும் என் அன்பு
உன்னிடம் அடைக்கலமாக
உன் மனக்கதவு
திறந்திருக்கிறதா,
என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற உறுதிசெய்ய முடியாத அவஸ்தையில்
உயிர் தீண்டிகொண்டுதானிருக்கிறாய் நீ!
என் காதலை
ஏற்பாயா
எதிர்ப்பாயா
எதுவெனினும் உன்னை
பார்க்காத நாளும்
நினைக்காத நெஞ்சமும்
நெருப்பில் வேகட்டும்!

sikkandarbasha@hotmail.com

 

இடம்

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 9:11 பிப

எனது இருப்புக்கான
எதுவும் அங்கில்லை
அவை ஒரு சூறாவளியாலொ
அல்லது அரசாங்க ஆணையாலொ
இடம் பெயர்ந்திருக்கலாம்!

உழைத்து களைக்கவும்
களைத்து துயிலவும்
அழைத்து உபசரிக்கவும்
அமைந்த விலாசமற்றுமன்று
அது உணர்வுகள்
உறையும் கூடு!

என்னுடையதென எல்லாவற்றையும்
எடுத்து வந்திருக்கிறேனா
எண்ணிக்கை பார்த்தால்
விட்டு வந்தவை ஏராளம்
அவை பாதுகாப்புணர்வாக,
ஸ்பரிசமாக,வாசமாக
காற்றில் இறகென
அலைந்திருக்கும்!

sikkandarbasha@hotmail.com