தடங்கள்

IT-யில் ஆள் அள்ளுராங்கோ ஏப்ரல் 24, 2010

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 4:12 பிப

மீண்டும் ஒரு பொருளாதார‌ ம‌ந்த‌ நிலைக்கு பிறகு மென்பொருள் ச‌ந்தையில் ஆள் சேர்க்கும் ப‌ணி ஆர‌ம்பித்தே விட்ட‌து. இந்த‌ முறை ஆள் சேர்க்கும் ப‌ணியில் ஈடுப‌டும் HR,க‌ன்ச‌ல்ட‌ன்ட் இவ‌ர்க‌ளின் முக‌ம் மாறி இருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து.

கேம்ப‌சில் தேர்வு செய்ய‌ப்ப‌டாத‌வ‌ர்க‌ளின் வேலை தேடும் முயற்சி மிக‌ க‌டின‌மாக‌ மாறி விட்ட‌தாக‌ தோன்றுகிற‌து. முன்பெல்லாம் மிக‌ மிக‌ நேர்மையான‌தாக‌ இருந்த‌ மென்பொருள் துறையில் இப்போது Back door entry போன்ற சொற்க‌ள் ம‌லிந்து விட்ட‌து. அத‌ன் கார‌ண‌க‌ர்த்தாக்க‌ளான HR துறையின‌ரை ப‌ற்றி வெளி நாட்டு முத‌லாளிக‌ளுக்கு பெரும்பாலும் தெரிவ‌தில்லை.அது ம‌ட்டும‌ல்ல‌ க‌ன்ச‌ல்ட‌ண்ட் என‌ப்ப‌டும் ஆள் பிடித்து கொடுக்கும் த‌ர‌க‌ர்க‌ளுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ஒரு ந‌ல்ல‌ புரிந்துண‌ர்வு இருப்ப‌தாக‌வே தெரிகிற‌து.இப்போது கொடுமை என்ன‌வென்றால் +2 படித்து க‌ன்ச‌ல்டண்டாக‌ ப‌ணி புரிப‌வ‌ரெல்லாம் MTech படித்து 10 வ‌ருட‌ அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் மிர‌ட்ட‌ல் தொனியில் தொழில் நுட்ப‌ கேள்வி கேட்ப‌து.

நிஜ‌ம் என்ன‌வென்றால் பெரும்பாலான நிறுவ‌ன‌ங்க‌ளில் 50%க்கும் மேல் ராஜின‌மா செய்து அடுத்த‌ வேலைக்கு தாவ‌ த‌யாராக இருக்கும் நிலைதான். மென்பொருள் துறையின் ப‌ல‌மே உட‌னே ப‌ணி துவ‌ங்கி விடும் இவ‌ர்க‌ளால் என்று த‌யார் நிலையில் காட்ட‌ப்பொடும் வ‌ல்லுன‌ர்க‌ள்தாம்.ஆனால் இன்று அவ‌ர்க‌ள் இல்லாத‌ நிலை. இதையெல்லாம் இந்த‌ HR துறை புரிந்துகொண்ட‌தா என்று தெரிய‌வில்லை. இன்னும் அவ‌ர்க‌ள் ம‌ந்த‌ நிலை நீடிப்ப‌தாக‌வும் ச‌ந்தையில் அவ‌ர்க‌ள்தான் வ‌ர‌ம் கொடுக்கும் தெய்வ‌மாக‌வும் நினைத்துகொண்டிருக்கிறார்க‌ள்.திற‌மையான‌ வ‌ல்லுன‌ர்க‌ளி இல்லாத‌ நிறுவ‌ன‌த்திடம் projects வராது.project இல்லாத‌ நிறுவ‌ன‌ம் தொலைந்து போகும்.பெரும்பாலான‌ ராஜினாமாக்க‌ளின் பின்ன‌ணியில் இருப்ப‌து பி.ம் க‌ளும் பார‌ப‌ட்ச‌மான‌ அலுவ‌லக‌ பிராச‌ஸ்க‌ளும்தான்.

இனி மென்பொருள் துறையில் வேலை தேடுவோர் க‌ன்ச‌ல்ட‌ண்ட் என‌ப்ப‌டும் இடை த‌ர‌கர்க‌ளை த‌விர்ப்ப‌து ந‌ல‌ம். ஏனென்றால் உங்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை நிர்ண‌யிப்ப‌தாய் அதாவ‌து குறைந்த‌ ச‌ம்பள‌த்தில் ஆள் பிடித்து த‌ருவ‌தாய் நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் ச‌த்திய‌ம் செய்திருப்பார்க‌ள். உங்க‌ளுக்கான விலையை நீங்க‌ளே நிர்ண‌ய‌ம் செய்துகொள்வ‌தே புத்திசாலித்த‌ன‌ம்.So நாட்டாமை to ப‌ங்காளி ப‌ங்காளி to நாட்டாமை டீலிங்தான் ச‌ரி.அது த‌விர‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ வேலை வாய்ப்புக‌ளை ஒரே நேர‌த்தில் அடுத்த‌டுத்து சேரும் இடைவெளியில் வாங்கிகொள்ளூங்க‌ள்.புதிதாக‌ சேரும் நிறுவ‌ன‌த்தில் ஏமாற்ற‌ப்ப‌டும் ப‌ட்ச‌த்தில் இது கை கொடுக்கும்

இனி தொழில் நுட்ப‌ க‌ல்வி ப‌யில்வோர் மென்பொருள் வேலை வாய்ப்பை இறுதியாக‌ தேர்வு செய்யும் நிலை வ‌ந்து விட்டது.க‌டும் வெயிலில் உட‌ல் நோக‌ க‌ல் உடைப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கண்ணாடி கூண்டில் உள்ள‌ம் நோக‌ கீ போர்டில் அடிப்ப‌வ‌ர்க‌ளுக்குமிடையே பெரிய‌ வேறுபாடில்லை.
த‌ங்க‌ கூண்டில் கிளி இருந்தாலும் அது கூண்டில்தானே இருக்கிற‌து.

Advertisements
 

IT-இம்சிக்கும் துறை பிப்ரவரி 22, 2009

Filed under: கற்றது கணிப்பொறியிய,Uncategorized — bashakavithaigal @ 9:46 முப

இப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமை கூலிக‌ள் என்று.அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் நீங்க‌ள் நினைப்ப‌து போல் வாழ்க்கை ம‌ல‌ர் பாதையை அமைத்து த‌ர‌வில்லை. இழ‌ப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ த‌யாராக‌ இருந்தார்க‌ள். எளிய‌ உதார‌ண‌ம் காலை சூரிய‌ன்,அல்ல‌து ந‌ட்ச‌த்திர‌த்தை க‌டைசியாக‌ எப்பொழுது பார்த்தீர்க‌ள் என்று அவ‌ர்க‌ளை கேளுங்க‌ள் ம‌ல‌ங்க‌ ம‌ல‌ங்க‌ முழிப்பார்க‌ள்.அதுதான் அவ‌ர்க‌ள் வாழ்க்கை எப்போதும்.
இப்பொழுதுதான் அவ‌ர்க‌ளின் த‌ற்கொலை செய்தி த‌லைப்பு செய்தியாயிருக்க‌ வேண்டும்.இத‌ற்கு முன்பும் இப்படி நிக‌ழ்ந்திருக்கிற‌து ஆனால் அப்போது அவை செய்தியாக்க‌ப்ப‌ட்ட‌தில்லை. ந‌ல்லா உங்க‌ளுக்கு வேணும்டா என்று நீங்க‌ள் ஆன‌ந்த‌ப‌டும் நேர‌த்தில் அவ‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்துகொண்டிருக்கிறார்க‌ள் என்று பார்ப்போம்.

கேம்ப‌ஸில் அல்ல‌து ஒப்ப‌ன் இண்ட‌ர்வியுவில் கிடைத்து க‌ல‌ர் க‌ன‌வுக‌ளோடு வேலைக்கு செல்ல‌ காத்திருப்போர்,அமெரிக்க‌ க‌ன‌வுக‌ளோடு எம்ப‌ஸி வாச‌லில் காத்து இருப்போர்,ப‌த்து ஆப‌ர்க‌ளுட‌ன் அடுத்த‌ வேலைக்கு எக்க‌ச்ச‌க்க‌ ச‌ம்ப‌ள உய‌ர்வுட‌ன் இருப்போர்,டால‌ரில்,ப‌வுண்டில்,திர்ஹாமில் ச‌ம்பாதித்து கிட்ட‌த்த‌ட்ட‌ இந்திய‌ வாழ்க்கையை ம‌ற‌ந்தோர் என‌ ப‌ல‌ வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ இருந்த‌ இந்த‌ இன‌ம் இன்று
1) வேலை தேடுப‌வ‌ர்
2) வேலை இழ‌ந்து விர‌க்தியின் விளிம்பிலிருப்ப‌வ‌ர்
3) வேலை இழ‌ப்பு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற‌ நிலையிலிருப்போர் என்ற‌ நிலையில் சுருங்கி விட்ட‌து.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வீட்டுக்க‌ட‌ன்,கார் க‌ட‌ன்,க‌ல்வி க‌ட‌ன்,இத‌ர‌ ப‌ல‌ க‌ட‌ன்க‌ளை வாங்கி க‌ட‌ன்கார‌ர்க‌ளாக‌ திணிக்க‌ப்ப‌ட்ட‌ கார்ப்ப‌ரேட் க‌லாச்சார‌த்தின் ப‌லி க‌டாக்க‌ளாக‌ அலைந்துகொண்டிருக்கிறார்க‌ள்.

இன்று ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ ப‌ல‌ குறுக்கு உபயாங்க‌ளை நிறுவ‌ன‌ங்க‌ள் கையாள‌ ஆர‌ம்பித்துவிட்ட‌ன‌.பத்து ந‌ப‌ர்க‌ள் பார்க்கும் வேலையை ஒருவ‌ருக்கு த‌ந்து ஒரு மாத‌ ப‌ணியை இரண்டு நாளில் முடிக்க‌ சொல்வ‌து,என்ன செய்வ‌து என்று சொல்லாம‌லேயே(உதார‌ண‌மாக‌ வெற்று காகித‌த்தை கொடுத்து) இதில் இருப்ப‌தையெல்லாம் முடித்து கொடுக்க‌ சொல்வ‌து,ரேட்டிங் என்று கொடுக்க‌ப்ப‌டும் வ‌ருடாந்திர‌ நிக‌ழ்வுக‌ளில் இந்த‌ வ‌ருடம் யாருக்கும் முத‌ல் ராங்க் இல்லை என்று முடிவு க‌ட்டுவ‌து இன்னும் மோச‌மாக‌ காஸ்ட் க‌ட்டிங் என்ற‌ பெய‌ரில் 7 ம‌ணிக்கு மேல் ஏசியை நிறுத்துவ‌து,லிப்ட்டை நிறுத்துவ‌து,க‌ழிப்ப‌றை காகித‌ங்க‌ளை முட‌க்குவ‌து என்று போய்கொண்டிருக்கிற‌து.

மேற்சொன்ன‌ செய‌ல்க‌ளால் மென்பொருள் துறையை துற‌க்க ப‌ல‌ர் த‌யாராகி வ‌ருகிறார்க‌ள்.குறிப்பாக‌ அர‌சாங்க‌ சம்ப‌ள உய‌ர்வுக்கு பின்னால் ச‌ம்பள‌ வித்தியாச‌ம் பெரும‌ள‌வு குறைந்து விட்ட‌து.ப‌ல‌ர் அர‌சாங்க‌த்தின் க‌த‌வுக‌ளை த‌ட்ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.இன்னும் சில‌ர் வியாபாரம் செய்ய‌ உத்தேசித்துள்ளார்க‌ள்.பெண் வீட்டார் மென்பொருள் துறை என்றாலே காத‌ தூர‌ம் ஓடுகிறார்க‌ள்.

மாற்ற‌ம்தான் வாழ்க்கை.மாறுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்தான் தாக்குபிடிக்கிறார்க‌ள்.
ஆத‌லால்
1) ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டால் உங்க‌ளை குறைத்து ம‌திப்பிட்டுகொள்ளாதீர்க‌ள். உங்க‌ள் ஆற்ற‌லுக்கு அந்த‌ நிறுவ‌ன‌ம் ஏற்ற‌த‌ல்ல‌ என்று முடிவு செய்யுங்கள்.

2) ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ளை பார்த்து ந‌டுங்க‌ தேவையில்லை.சாப்ட்வேர் துறையில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா என்று ந‌கைச்சுவையாய் சொல்லி விடுங்க‌ள்.

3)சிக்க‌ன ந‌ட‌வ‌டிக்கையை கையாண்டு பெற்றோர்க‌ளின் ,உற‌வின‌ர்க‌ளின், ந‌ண்ப‌ர்க‌ளின் உத‌வியை கூச்ச‌மில்லாம‌ல் ஏற்றுகொள்ளுங்கள். ந‌ம‌து ச‌மூக‌ அமைப்பு ந‌ம்மை காப்பாற்றும்

4)உட‌ல் ந‌ல‌னை பேணுங்க‌ள் விட்டு போன‌ த‌னிப்ப‌ட்ட‌ வேலையை முடியுங்க‌ள்

5) அடுத்து என்ன‌ செய்ய‌லாம் என்று ஆலோச‌னை செய்யுங்க‌ள் இக்க‌ட்டான‌ சூழ‌லில் மீண்டு வ‌ருப‌வ‌ரே சாத‌னையாள‌ர்

ம‌றுப‌டி பொருளாதார‌ம் முன்னேறும் நிலையில் மென்பொருள் துறைக்கு ஆள் ப‌ற்றாக்குறை ஏற்ப‌டும். க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளால் ப‌ல‌ர் இத்துறைக்கு திரும்ப‌ வ‌ர‌ த‌யாராக‌ இருக்க‌ மாட்டார்க‌ள்.இப்பொழுது செய்யும் செய‌ல்க‌ளுக்கு மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் அத‌ற்கான‌ ப‌ல‌னை அடைந்தே தீரும்.2001 ல் இச்செய‌ல்க‌ளை செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும‌ள‌வு பின்ன‌ர் அடையாள‌ம் தெரியாம‌ல் அழிந்துவிட்ட‌து.வ‌ர‌லாறு மிக‌ முக்கிய‌ம் ம‌ங்குனி பாண்டிக‌ளே!!!!!!!

 

க‌ம்யூட்ட‌ர் கூலிக‌ளே….காசு ப‌த்திர‌ம் நவம்பர் 15, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 3:39 பிப

“ஏம்பா த‌ர‌க‌ரே….செல்ல‌மா வ‌ள‌த்த‌ பொண்ணு க‌ம்யூட்ட‌ர் இஞ்சினிய‌ரெல்லாம் வேண்டாம் ஏதாவ‌து காய்க‌றி விக்கிற‌ வ‌ர‌ன் இருந்தா சொல்லு” என்று எங்கோ ப‌டித்த‌து ந‌கைச்சுவையாய் இருந்தாலும் இதேபோல் ஒன்று நிஜ‌மாய் என‌க்கு ந‌ட‌ந்த‌து. 2001ல்(இதே போல் ஒரு நிலை அமெரிக்காவில் இருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்) பெங்க‌ளூரில் வீடு தேடி அலையும்போது வீட்டு சொந்தக்கார‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ர் க‌ம்பெனியா வாட‌கை ஒழுங்கா த‌ருவியா என்று மிர‌ட்டினார்க‌ள்.அத‌ற்கு பிற‌கு வ‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் இராஜ‌ ம‌ரியாதை கிடைத்தாலும் எப்போனாலும் ச‌ங்குதூவானுங்க‌ என்று கொஞ்ச‌மாவ‌து சேமிக்கும் ப‌ழ‌க்க‌ம் பிற்பாடு ஏற்ப‌ட்ட‌து.அமெரிக்கர்க‌ளுக்கும் இந்திய‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌ ஒரு வித்தியாச‌ம் அமெரிக்க‌ர்க‌ள் சேமிப்ப‌தில் அவ்வ‌ள‌வாக‌ ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் அனாவ‌சிய‌மாய் செல‌வ‌ழிப்ப‌தில் ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ள் என்ப‌துதான். 21/22 வ‌ய‌தில் சம்பாதிக்க‌ தொட‌ங்கும் இந்திய‌ த‌லைமுறை அப்ப‌டி ஒன்றும் கெட்டு போன‌தாக‌ தெரிய‌வில்லை.கலாச்சார‌ சீர‌ழிவுக‌ளுக்கு க‌ம்யூட்ட‌ர் ஆசாமிக‌ளை குறை சொல்ப‌வ‌ர்க‌ள் க‌ம்யூட்ட‌ நுழைவ‌த‌ற்கு முன்னால் மெரீனா பீச்சில் புனித‌மான‌ காத‌ல்க‌ள் ம‌ட்டுமே அர‌ங்கேறியிருந்த‌தா என்று சொல்ல‌ வேண்டும். கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌ம் இர‌ண்டு வ‌ருட‌ம் ஆடுப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு பின் நிறைய‌ சேமிப்பில் நாட்ட‌ம் காட்டுகிறார்க‌ள் என்ப‌துதான் ந‌டைமுறை உண்மை.க‌ம்யூட்ட‌ர் ப‌ணி என்ப‌து க‌ண‌வ‌ன் ம‌னைவி பந்த‌ம் போல் அல்ல‌. அது இருப‌க்க‌ங்க‌ளிலும் இலாப‌ நோக்கில் ந‌டைபெறும் ஒரு தின‌ச‌ரி அலுவ‌ல். பிராஜ‌க்ட் இல்ல‌ அத‌னால் இந்த‌ வ‌ருட‌ம் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு இல்லை என்று இந்த‌ வருட‌ம் நிறுவ‌ன‌ங்கள் நாக்கு துருத்தினாலும், “கைல‌ ப‌த்து ஆ:பர் இருக்கு ச‌ம்ப‌ள‌ம் இர‌ண்டு ம‌ட‌ங்கா உய‌ர்த்த‌ர‌தா இருந்தா பேச்சு வார்த்தைக்கு யோசிக்கிறேன்!” என்று போன‌ வ‌ருட‌ம்வ‌ரை பிலிம் காட்டிய‌தையும் ம‌ற‌க்க‌ கூடாது. உல‌க‌ம‌ய‌மாக்க‌லின் ப‌ல‌ன்க‌ள் ம‌ட்டும் வேண்டும் ந‌ஷ்ட‌ங்கள் வேண்டாம் என்று சொல்வ‌து அறிவுடைமை ஆகாது.
ம‌ழை கால‌த்திற்காய் உணவு சேமிக்கும் எறும்பை போல் எந்த‌ சிக்க‌ல் வ‌ந்தாலும் அடிப்ப‌டை தேவைக‌ள் ஆட்டம் காணாத‌ அள‌வுக்கு அக்க‌வுண்டில் ப‌ண‌ம் இருந்தால்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு வ‌ருட‌ம் தாக்கு பிடிக்க‌) த‌ப்பி பிழைப்போம்.இது த‌விர‌ என‌க்கு தெரிந்த‌ வேறு வழிக‌ள்
1)குர‌ங்காட்ட‌ம் க‌ம்பெனி க‌ம்பெனியா தாவும்போது அந்த‌ர‌த்தில் தொங்கும் பிராவிட‌ண்ட் ப‌ண்டுக‌ளில் போட்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌ எடுக்க‌ வ‌ழி முறைக‌ளை யோசிக்க‌லாம்
2) மார்ச் முத‌ல் வார‌த்தில்  யோரோ சொல்லி எவ‌ரோ நீட்டிய‌ ப‌டிவ‌த்தை நிர‌ப்பி வ‌ருமான‌ வ‌ரிக்காக‌ சேமித்த‌ ப‌த்திர‌ங்களை ,சேமிப்புக‌ளை தேடிப் பிடித்து அதில்  கை வைக்கலாம்.
3) வார‌ இறுதி பார்ட்டிக‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளில் செய்யும் ம‌துபான‌ சைட் டிஷ் செல‌வின‌ங்களை நிறுத்தி விட்டு ப‌ற‌க்கும் இர‌யிலில் மெரீனா வ‌ந்து கிரிக்கெட் விளையாடி செல்ல‌லாம்.
4)ஐபோட்,புளுபெர்ரி என்று காத‌லிக்கும்,கேர்ள் பிர‌ண்டுக்கும் காசு செல‌வ‌ழிப்ப‌வ‌ர்க‌ள் “அலைபேசி ஒலியெல்லாம் உன் குரலாக‌….” என்று க‌விதை எழுதி ப‌ழ‌க‌லாம் காத‌லி தெரித்து ஓடினால் காத‌லுக்கு ஒரு இடைவேளை விட்டு சொந்த‌ ஊர்க‌ளுக்கு அவ்வ‌ப்போது சென்று சுற்ற‌த்தையும் ந‌ட்பையும் பார்க்க‌லாம்.
5)தெரு முனைக்கும் ஸ்டைலாக‌ ஆட்டோ என்ற‌ழைப்ப‌வ‌ர்க‌ள் முடிந்த‌ ம‌ட்டும் வாக‌ன‌ங்களை த‌விர்த்து விட்டு ந‌ட‌ந்து நிறைய‌ கொழுப்புருக்க‌லாம்.
6) எத‌ன்பொருட்டு எவ‌ருக்காக‌ என்று தெரியாம‌ல் பொழுதை க‌ழிக்க‌  ஷாப்பிங் மால்களில் ச‌க‌ட்டுமேனிக்கு அள்ளி இறைத்த‌வ‌ர்க‌ள் நிலா வழியும் இரவில் அலை விர‌ல் தொடும் தூர‌த்தில் அமைதியாக‌ அம‌ர்ந்து இய‌ற்கையை இர‌சிக்க‌லாம்
7) இது த‌விர‌ பெரிதாக‌ வீடு,கார் மற்றும் அடிப்ப‌டை தேவைக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை வாங்குவ‌தை த‌விர்க்கலாம்.

 2000,2001 அடி வாங்கிய‌ க‌ணிப்பொறி துறை மாண்டு விட‌வில்லை. வீறிட்டு எழுந்த‌து. க‌ணிப்பொறி துறை இந்தியாவை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கு முன்னால் த‌ங்க‌த்தை அட‌கு வைத்த‌ தேச‌ம் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு கேத்ரீனா புய‌ல் அமெரிக்காவை தாக்கிய‌ போது பெரும் நிவார‌ண‌ம் டால‌ர் தேச‌த்திற்கே வ‌ழ‌ங்கும் அள‌வுக்கு உய‌ர்ந்து நின்ற‌து.
இர‌வுக்கு பின்னால் எப்போதும் ஒரு ப‌க‌ல் உண்டு க‌ண்ணை இறுக்க‌ மூடி இருள் என்று கூவினாலும்!!!!

 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு……… ஜூலை 20, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 5:52 முப

மென்பொருள் துறையென்றாலே கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம்,க‌ல‌க்க‌லான‌ வாழ்க்கை,வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று எல்லோராலும் ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌து.அதில் மூன்றாவ‌தான‌ இந்த‌ வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிஜ‌ங்க‌ளை த‌ரிசிப்போம். உங்க‌ளுக்காக‌ வேலை செய்கிறோம் என‌க்கொரு வாய்ப்பை கொடுங்க‌ள் என்று ந‌மக்காக‌வே உழைக்க‌ துடிக்கும்(!!!!!!!!) அர‌சிய‌ல்வாதியை ந‌ம்புகிறீர்க‌ளா அப்ப‌டியானால் என‌க்கொரு வாய்ப்பு கொடுங்க‌ள் என்று அன்பாக‌,வெளி நாட்டு வேலை வாய்ப்பு இல்லையென்றால் இராஜின‌மா என்று அராஜ‌க‌மாக‌ கேட்கும் மென்பொருள் துறை நிபுண‌ர்க‌ளையும் ந‌ம்பிதானாக‌ வேண்டும்.இது இந்திய‌ க‌ம்பெனிக‌ள் மூல‌ம் செல்லுப‌வ‌ர்க‌ள். க‌ன்ச‌ல்டென்ட் என‌ப்ப‌டும் ஆட்க‌ள் மூல‌ம் போகும் கூட்ட‌ம் ஒரு ப‌க்க‌ம்.

 டால‌ர் க‌ன‌வு ‍‍… இது ம‌ட்டுமே க‌ண‌க்கு.

 பெரும்பாலான‌ வேலை வாய்ப்புக‌ள் அமெரிக்கா சார்ந்த‌வை. முத‌லில் B1,H1B,L1 tஹிஉச் இது மாதிரி ஏதாவ‌து ஒரு விசா வாங்க‌ வேண்டும். அதை வாங்க‌ சென்னையின் ப‌ட்ட‌ ப‌க‌ல் வெயிலில் கோட்டு,டை எல்லாம் போட்டு நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்மான வ‌ரிசையில் கோமாளி மாதிரி நின்று உள்ளே சென்று ம‌ன‌ப்பாட‌ம் செய்து வைத்த‌ ப‌தில்க‌ளை க‌ட‌க‌ட‌வென ஒப்பிக்க‌ வேண்டும். சிறிது இட‌றினாலும் விசா நிராக‌ரிக்க‌ப்ப‌டும்.

விசா வாங்கியாகி விட்ட‌து. இப்பொழுது ப‌ற‌க்க‌ த‌யார். டிக்கெட் எடுப்ப‌த‌ற்கு என்றே த‌னி துறை பெரும்பாலான‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் இய‌ங்கும். அவ‌ர்க‌ள் ப‌ணியே பல‌ ஆராய்ச்சிக‌ள் செய்து மிக‌வும் குறைந்த‌ விலையிலான‌ டிக்கெட் எடுத்து உங்க‌ளை அனுப்புவ‌து. கொஞ்ச‌ம் உஷாராக‌ இல்லையென்றால் க‌ட்டை வ‌ண்டியிலும் உங்களை அனுப்பி விடுவார்க‌ள். உதார‌ண‌த்திற்கு ம‌துரையிலிருந்து சென்னைக்கு விமான‌த்தில் செல்ல‌ ப‌ய‌ண‌ சீட்டு கேட்ப‌தாக‌ கொள்வோம். ம்துரை ‍>>>>>> கொச்சி

கொச்சி >>>>>> கோய‌ம்புத்தூர்

கோய‌ம்புத்தூர் ‍>>>>> கொல்கத்தா

கொல்க‌த்தா >>>>> சென்னை

என்று மாறி மாறி ப‌ய‌ண‌ம் செய்ய‌ டிக்கெட் எடுத்து த‌ருவார்க‌ள். என்ன‌ த‌லை சுற்றுகிறதா? இந்த‌ சுற்று சுற்றினாம் த‌லை சுற்றாம‌ல் என்ன‌ செய்யும்? இந்தியாவுக்குள்ளேயே இந்த‌ மாதிரி சுற்ற‌ த‌லை சுற்றுகிற‌தென்றால் உல‌க‌ம் முழுவ‌தும் சுற்றி அமெரிக்கா செல்ல‌? அமெரிக்க‌ ப‌ய‌ண‌ம் செய்ப‌வர்க‌ள் பெரும்பாலும் ஆசியா அரேபிய‌ ஐரோப்பிய‌ அமெரிக்க‌ க‌ண்ட‌ங்க‌ளை க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். ஆப்பிரிக்க‌,ஆஸ்திரேலிய‌ க‌ண்ட‌ங்க‌ளை விட்டுவிட்டார்க‌ளா என்ன‌? நல்ல‌ வேளையாக‌ ஆர்ட்டிக் க‌ண்ட‌த்தில் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

இப்படியாக‌ உல‌க‌ம் சுற்றி டால‌ர் தேச‌ம் எட்டி விட்டீர்க‌ள். இந்திய‌ க‌ம்பெனிக‌ள் மூல‌ம் இங்கு வாங்கும் ச‌ம்ப‌ள‌மென்ன‌மோ இந்தியாவில் வாங்கும் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ இரு ம‌ட‌ங்குக்கும் மேல்தான். ஆனால் செல‌வு போக‌ சேமிப்பு? சில‌ ஆயிர‌ங்க‌ளேயென‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் சொல்ல‌ கேள்வி. அப்ப‌டியானால் அமெரிக்கா ஏன் செல்ல‌ வேண்டும்? இது த‌விர‌ பெரும்பாலான‌ இந்திய‌ க‌ண‌வ‌ர்க‌ள் குழ‌ந்தை பெற்றுகொள்ள எல்லா வித‌ ஏற்பாடுக‌ளுட‌ன் த‌ங்க‌ள் ம‌னைவியை அழைத்து வ‌ருகிறார்க‌ள். அமெரிக்க‌ குடிம‌க‌ன் அந்த‌ஸ்து கிட்ட‌. ஒரு உற‌வின‌ர் திரும‌ண‌ ப‌த்திரிகையில் த‌ங்க‌ள் ந‌ல் வ்ர‌வை விரும்பும் என்று குழ‌ந்தை பெய‌ர் போட்டு அடைப்பு குறிக்குள் அமெரிக்க‌ன் என்று குறிப்பு வேறு.

என‌க்கு சில‌ கேள்விக‌ள் எழுகிற‌து. யாரேனும் அமெரிக்க‌ இந்திய‌ர்க‌ள் ப‌தில் தாருங்க‌ள்

1) சில‌ ஆயிர‌ ச‌ம்ப‌ள வித்தியாச‌ங்க‌ளுக்காக‌ நீங்க‌ள் எதையும் இந்தியாவில் இழ‌க்க‌வில்லை?

 2) இந்திய‌ சூழ‌லில் க‌ற்ற‌ இந்தியர்க‌ள் அமெரிக்காவின் பெரும் வேலைக‌ளை செய்யும் திற‌ம் மிக்க‌வ‌ர்க‌ளாக‌ இருக்கும்போது குழ‌ந்தைக்கு அமெரிக்க‌ குடியுரிமை வாங்க‌ ஏன் இந்த‌ போராட்ட‌ம்?

3) ப‌வுண்டு டால‌ரை விட‌ இரு ம‌ட‌ங்கு ம‌திப்பு மிக்க‌து,குவைத் ப‌ண‌ம் டால‌ரை விட‌ ஐந்து ம‌ட‌ங்கு ம‌திப்பு மிக்க‌து. இதையெல்லாம் ச‌ம்பாரிக்க‌ அமெரிக்க‌ர்க‌ள் ந‌ம்மை போல‌ மென‌க்கிடுகிறார்க‌ளா?

4)அமெரிக்க‌ர்காவில் டால‌ர் ச‌ம்பாரிக்க‌ செல்லும் நாம் அவ‌ர்க‌ளிட‌மிருக்கும் நல்ல‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளை இந்தியா வ‌ந்தால் க‌டை பிடிக்கிறோமா? உதார‌ண‌ம் வ‌ழிப்போக்க‌ர்க‌ளாக‌ இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்ன‌கை.

5)ம‌னைவி ம‌க்க‌ள் கூட‌ இருக்கிறார்க‌ள் வேறு என்ன‌ வேண்டும் என்ப‌வ‌ர்களுக்கு ம‌னைவி ம‌க்க‌ள் என்ற‌ சிறு வ‌ட்ட‌த்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்ட‌தா?

 

IT-‍யில் அர‌சிய‌ல் மே 3, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 4:44 முப

“என் உயிரினும் இனிய‌,த‌ன் இன்னுயிரையும் பொருட்ப‌டுத்தாம‌ல் க‌டுமையான‌ டெட்லைனில் ப‌ல டெலிவ‌ரிக‌ளை கொடுத்த‌ த‌ங்க‌ த‌லைவ‌ர் பிராஜெக்ட் மானேஜ‌ர் அவ‌ர்க‌ளே,த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தானும் அவ்வ‌ழியென்று கோடு மாறாம‌ல் த‌லைவ‌ரின் இரு கைக‌ளை உய‌ர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீட‌ர் அவ‌ர்க‌ளே,ட‌ப்பாங்குத்து ஆடும் ப‌க்குக‌ளை கும்மாங்குத்து குத்த‌ இர‌வும் ப‌க‌லும் அய‌ராது க‌ணிப்பொறியை பார்த்திருக்கும் டெக்கினிக்க‌ல் லீட் அவ‌ர்க‌ளே,குறை சொல்லி த‌லைவன் டெஸ்ட் லீட் அவ‌ர்க‌ளே,ம‌ற்றும் அடிப்பொடிக‌ளான‌ பிராஜெக்ட் அங்க‌த்தின‌ர்க‌ளே………….உஸ் யாருடா அவ‌ன் ஒரு காப்ப‌ச்சீனோ க‌ல‌க்கு தொண்ட‌ வ‌ற‌ண்டுபோச்சு”.
இன்னும் சிறிது நாளில் இதே மாதிரி மேடை வ‌ச‌ன‌ங்க‌ளை மென்பொருள் துறையில் கேட்டாலும் ஆச்ச‌ரிய‌மில்லை அந்த‌ அள‌வு அர‌சிய‌ல்(பாலிடிக்ஸ்) மென்பொருள் துறையில் புகுந்து விளையாடுகிற‌து. மென்பொருள் துறையில் ம‌ட்டும்தானா மற்ற‌ துறைக‌ளில் இல்லையா என‌ முணுமுணுப்ப‌வ‌ருக்கு, மற்ற‌ துறைக‌ளில் இருக்கும்,ஆனால் மென்பொருள் துறையில் அதிக‌மோ என‌ யோசிக்க‌ வைக்கிற‌து.

புதிதாக‌ இத்துறையில் அடியெடுத்து வைப்ப‌வ‌ர்க‌ளுக்கு,அல்ல‌து மிக‌ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஆர‌ம்ப‌ நிலையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இத‌ன் வீச்சு குறைவாக‌வே இருக்கும். மேலே போக‌ போக‌த்தான் ‘க‌ப்’ அடிக்கும்.
அப்ப‌டி என்ன‌தான் அர‌சிய‌ல்ங்கீறீங்க‌ளா?????? ந‌ம்ம‌ ஊர்ல‌ ஒரு ப‌ழ‌மொழி சொல்வாங்க‌ளே “இந்த‌ வாய் ம‌ட்டும் இல்ல‌ன‌ நாய் கூட‌ ந‌க்காது” ‍னு அந்த‌ மாதிரி சில‌ பேர் வேலையே செய்ய‌ மாட்டார்க‌ள்.உதார‌ண‌த்துக்கு சிறு குழு த‌லைவர்க‌ள்(மாடுல் லீட்,டெக் லீட்).ஆனால் அவ‌ர்க‌ள் குழுவில் சில‌ர் சாதிக்கும் விஷ‌யங்க‌ளை தான் சாதித்த‌தாக‌ பிராஜெக்ட் மானேஜ‌ர்க‌ளிட‌ம் ப‌ட்டிய‌லிடுவார்க‌ள் . அந்த‌ அப்பாவி குழு உறுப்பின‌ரோ இது எதுவும் தெரியாம‌ல் வ‌ல‌ம் வ‌ருவார்.
அது த‌விர‌ ஏதாவ‌து பிர‌ச்ச‌னை என்றால் குழு உறுப்பின‌ரை கொண்டு சென்று முன் வ‌ரிசையில் கேட‌ய‌மாக‌ நிறுத்தும் வித்தையும் இந்த‌ குழு த‌லைக‌ளுக்கு தெரிந்திருக்க‌ வேண்டும்.பிராஜெக்ட் மானேஜ‌ருக்கு ஓர‌ள‌வாவ‌து டெக்கினிக்க‌ல் விஷ‌ய‌ங்க‌ளை புரிந்திருக்கும் திற‌னிருக்க‌ வேண்டும் இல்லையென்றால் அந்த‌ குழு உறுப்பின‌ருக்கு சங்குதான்.

இப்ப‌டி அடிப்ப‌ட்டு உதைப்ப‌டும் குழு உறுப்பின‌ரும் இதை சமாளிக்க‌ அர‌சிய‌ல் ப‌டிக‌ளில் கால் வைக்க‌ ஆர‌ம்பித்து விடுவார்.சில‌ பேர் குழு த‌லைக‌ளுக்கு ஜால்ரா த‌ட்டி நாளை க‌ட‌த்துவார்க‌ள். இன்னும் சில‌ பேர் காதிலே வாங்காம‌ல் ம‌ங்குனி பாண்டியாட்ட‌ம் வ‌ந்து போவார்க‌ள்.ரோஷ‌க்கார‌ பிள்ளைக‌ள்
“பாத‌க‌ம் செய்பவரை கண்டால் நீ
ப‌ய‌ம்கொள்ள‌லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவ‌ர்
முக‌த்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
என‌ ரௌத்திர‌மாவார்க‌ள் அப்புற‌ம் என்ன‌ சில‌ நாட‌க‌ளிலேயே அடுத்த‌ வேலைக்கு தாவி விடுவார்க‌ள். பெரும்பாலும் எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணி வில‌க‌லுக்கு காரணிக‌ளில் மேலாளர் பெய‌ர் இருக்கும்.இங்குதான் ம‌ற்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் வேறுபாடு இருக்கிற‌து. ம‌ற்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணி வில‌க‌ல் அள‌வுக்கு போவ‌து மிக‌வும் குறைவு ஆனால் மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளில் இது மிக‌ அதிக‌ம். மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளும் பூனைக்கு(மேலாள‌ர்க‌ளுக்கு) ம‌ணி க‌ட்டும் வேலையை செய்வ‌தில்லை. அ போனா ஆ என்னும் நிலையில்தான் இருக்கிறார்க‌ள். எங்க‌ள் ஊழிய‌ர்க‌ள்தான் எங்க‌ள் சொத்து என்று சொல்லும் ஒரு பெரிய‌ நிறுவ‌ன‌ம் கூட‌  விதி வில‌க்க‌ல்ல‌.

அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாதார‌ண‌ம‌ப்பா!!!!!!!!

 

IT-யும் ஆங்கில‌மும் ஏப்ரல் 20, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:48 பிப

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான்.
மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில் இருக்கும் த‌லைக‌ள் ‘எச்சிக்குயுட்டெட்’,’டோட்ட‌பேஸ்’ என்று உச்ச‌ரிப்ப‌தை கேட்ட‌துண்டு. அதேபோல் நுனி நாக்கு ஆங்கில‌ம் பேசும் யுவ‌திக‌ளும்,பீட்ட‌ர்‍களும் த‌ட்டு த‌டுமாறி கொடுத்த‌ வேலையை முடிக்காம‌ல் குழ‌ம்பி இருப்ப‌தையும் காண‌ முடியும். பொதுவாக‌ பெரு ந‌க‌ர‌ங்க‌ளில் உள்ள அலுவ‌ல‌க‌ங்க‌ளில் அமெரிக்க‌ ஆங்கில‌ம்தான் அதிக‌ம் பிர‌யோகிக்க‌ப‌டுகிறது.’ஷிட்’,’ஸ்குரூட்’,போன்ற‌ கெட்ட‌ வார்த்தைக‌ளெல்லாம் நாக‌ரிக‌ வார்த்தைக‌ளாகி சாதார‌ண‌ அலுவ‌ல‌க‌ உரையாட‌ல்க‌ளிலே பிர‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. அமெரிக்க‌ ஆங்கில‌ம் என்ப‌து ந‌ம்ம‌ ஊரு த‌ங்கிலீஸ் மாதிரிதான்.
ஆனாலும் மென்பொருள் துறையில் நுழைய‌ அடித்துபோடும் ஆங்கில‌ம் தேவைப‌டாவிட்டாலும் அவ‌சிய‌மான‌ அள‌வு ஆங்கில‌ம் தேவைப‌டுகிற‌து. ந‌ம்ம‌ ஊர்க‌ளில் ப‌ள்ளி ப‌டிப்பு த‌மிழ் வ‌ழியில் முடித்து விட்டு முத‌ல் நாள் க‌ல்லூரியில் ‘க‌பார்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்’ என்று கேட்கும் மாண‌வ‌ர்க‌ள் மிர‌ண்டுதான் போகிறார்க‌ள். மென்பொருள் துறையில் சேர‌ போகிற‌வ‌ர்க‌ள் கல்லூரி கால‌ங்க‌ளிலேயே உங்க‌ளை த‌யார் செய்துகொள்ளுங்க‌ள்.

1) நீங்க‌ள் பிளாட்பார‌ங்க‌ளில் விற்கும் கிளுகிளூப்பு புத்த‌க‌ங்க‌ளை வெறித்த‌னமாக‌ ப‌டிப்ப‌வ‌ராக‌ இருன்தால் அதைவிட‌ கிளுகிளு சமாச்சார‌ங்க‌ள் ஆங்கில‌த்தில் கிடைக்கும். ஒரு அக‌ராதியை வைத்து உங்க‌ளுக்கும் இருக்கும் ஆர்வ‌த்திற்கு ஒரு நாவ‌லை ஒரு நாளில் முடிக்க‌லாம்.இதை த‌விர‌ ந‌ல்ல‌ நாவ‌ல்க‌ள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு இன‌ண‌யான‌ ஆங்கில‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்க‌லாம்.உதார‌ண‌ம்                                                                     ராஜேஷ் குமார் ‍ ‍…..  சேஸ்,ஷிட்னி ஷெல்ட‌ன்
சுஜாதா…………..மைக்க‌ல் கிரைட்ட‌ன்,ஐச‌க் அசீமொவ்,ராபின் குக்
புஷ்பா த‌ங்க‌துரை,ராஜேந்திர‌ குமார்……… ஹெரால்ட் ராபின்ஸ்,இர்விங் வால‌ஸ்
ர‌ம‌ணி ச‌ந்திர‌ன்,ல‌ஷ்மி……மில்ஸ் அன்ட் பூன்,டானிய‌ல் ஸ்டீல்
பால‌குமார‌ன்…..பால் காஹெலொ,அய‌ன் ரான்ட

2) பட‌ம் பார்ப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌வ‌ரானால் உங்க‌ள் விருப்ப‌த்திற்கேற்ப‌ ஆங்கில‌ டிவிடிக‌ள் ச‌ப்டைட்டிலுட‌ன் கிடைக்கும். ஒரு ஹெட்போனை வைத்து ப‌ட‌த்தை பாருங்க‌ள்

3) சாட்டிங் செய்வ‌தில் விருப்ப‌முள்ள‌வ‌ரானால் வெள்ள‌கார‌ புள்ளைக‌ளை வ‌லையில் பிடித்து வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌த்தில் உரையாடுங்க‌ள்

4)உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ள் பெரு நக‌ர‌ங்க‌ளில் வேலை செய்ப‌வ‌ரா? அடிக்க‌டி அங்கு சென்று என்னதான்யா இவ‌ங்கே சொல்றாங்கே என்று ஆராயுங்க‌ள்.

5)சீன் போடுப‌வ‌ரா? உங்க‌ள் வ‌குப்பு தோழிக‌ளிட‌ம் உரையாடும்போது வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளை சேர்த்து உப‌யோகியுங்க‌ள் த‌வ‌றாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை….அவ‌மான‌மில்லை வாழ்க்கை முழுவ‌தும் அவ‌மான‌படுவ‌தை விட‌ ஒரு இர‌ண்டு நிமிட‌ம் அவ‌மான‌ப‌ட்டால் பாத‌க‌மில்லை.
உங்க‌ள் சூழ் நிலை உங்க‌ளை வெகு எளிதாக‌ ஆங்கில‌ம் பேச‌ வைத்து விடும். ஆனால் உங்களை அந்த‌ நிலையில் கொண்டு வ‌ந்து நிறுத்துவ‌து உங்க‌ள் பொறுப்பு

 

 

 

 

ஒரு பாமரனின் அமெரிக்க நாட்கள் ஏப்ரல் 5, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:40 பிப

அப்ரைசல் என்பது மேலாளர் கீழே வேலை பார்ப்பவர்களை மி்ரட்டுவதற்கான ஒரு அஸ்திரமாக பயன்படுவதுபோல வேலை நாட்டு பணி வாய்ப்பு அல்லது ராஜினமா என்ற மி்ரட்டல் பணியாளார்கள் மத்தியிலிருந்து மேலாளர்களுக்கு விடப்படுவதுண்டு.இதற்கு காரணம் மென்பொருள் துறையென்றால் கை நிறைய சம்பளத்துடன் பல நாடுகளையும் போய் சுற்றி பார்க்கும் வாய்ப்பு என்ற ஒரு மாய வலைதான். நீங்கள் மென்பொருள் துறையிலிருந்து வெளி நாடு வாய்ப்பு
கிடைக்காதவறாயிருந்தால் உங்கள் கிராமத்தில் கூட அவன் போனான் இவன் போனான் என்று புள்ளி விவரம் சொல்லி வெறுப்பேற்றுவார்கள்.

வெளி நாடுகளில் வேலை செய்யும் உங்கள் நண்பர்கள் பல இடங்களுக்கும் சென்றதாய் புகைப்படம் காட்டுகிறார்களா.  ” நல்லா எங்ஜாய் பன்றான்யா” என்று வயிறு எரிகிறதா…..?? நல்லா விசாரித்து பாருங்கள் அவர்கள் வருடம் முழுவதும் 24/7 வேலை பார்த்து ஏதோ ஒரு நாள் இரண்டு நாளில் சுற்றி  இந்த படங்களை அனுப்பிருப்பார்கள்.இதையும் நம்பவில்லையென்றால் வந்துதான் பாருங்கள்.
பெற்றோரை பிரிந்த பிள்ளைகளும்
பிள்ளைகளை பிரிந்து பெற்றோரும்
மனைவியை பிரிந்து கணவரும்
கணவரை பிரிந்து மனைவியும்
காதலனை பிரிந்து காதலியும்
இப்படி எத்தனையோ கண்ணீர் காட்சிகளை பார்க்கலாம்.வெளி நாடு வாய்ப்புகளில் சம்பாதிப்பது டாலர்களை மட்டும்தான். இழப்பிற்கு ஒரு பெரிய பட்டியலே உண்டு.

அது தவிர சாப்பாடு இங்கு ஒரு பெரிய பிரச்சனை நம்ம மக்களுக்கு.
உருளை கிழங்கு,கேரட்,முட்டைகோஸ்,சிக்கன் என்று நாம் சாப்பாட்டிற்கு சைடாக சாப்பிடுவதையே சாப்பாடாக தருவார்கள். அப்படியே தப்பி தவறி சோறு கிடைத்தாலும் நாம் சைடாக சாப்பிடும் பதார்த்தங்களின் அளவிலேதான் கிடைக்கும். மி்க பொதுவான உணவு இங்கு
காய்ச்சல் ரொட்டி
டீ கடை வறிக்கி
 நாய் ரொட்டி
உருளைகிழங்கு என்று நாம் சாப்பிடுவதையே பர்க்கர்  என்ற வெவ்வேறு அளவுகளில் தருவார்கள்.

ம்ம்ம்ம் என்னத்த சொல்றது
எட்டு திக்குகளும் செல்வீர்
கிட்டியதை ஊர் சேர்ப்பீர்
பட்ட துன்பங்களை மறைப்பீர்
‘அமெரிக்காவிலெல்லாம்……………..’
என்று வடிவேல் கதை சொல்வீர்