தடங்கள்

நான் க‌ட‌வுள்(ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌ம்) பிப்ரவரி 15, 2009

Filed under: கருவறையிலிருந்து கல — bashakavithaigal @ 2:44 முப

“ந‌சிகேதா இந்த‌ உல‌க‌த்தில் உள்ள செல்வ‌ங்க‌ளையெல்லாம் கேள், நீண்ட‌ ஆயுளை கேள், ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை ம‌ட்டும் கேட்காதே”

“அழியும் பொருளும் தேய்ந்து போகும் வாழ்க்கையும் வேண்டாம் ஆதலால் ப‌ய‌ன் இல்லை.ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை கூறும் வ‌ரைக்கும் விட‌ப்போவ‌தில்லை”

பின் எம‌ன் ந‌சிகேத‌னிட‌ம் ம‌ட்டும் கூறிய‌ இர‌க‌சிய‌ம் ஜெய‌மோக‌னுக்கும் தெரிந்த‌தோ என எண்ணும்ப‌டி

 “வாழ‌ கூடாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை ம‌ர‌ணம் .

வாழ‌வே முடியாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை வ‌ர‌ம்” என்ற‌ இர‌ட்டை வ‌ரிக‌ளில் க‌தையின் க‌ள‌ம் எழுப்ப‌ப‌ட்டிருக்கிற‌து.

பாலாவின் பட‌ங்க‌ள் பொதுவாக‌ ஒரு ந‌ல்ல‌ இல‌க்கிய‌ நாவ‌ல் ப‌டித்த‌ திருப்தியை எப்பொழுதும் எனக்குள் ஏற்ப‌டுத்தியிருக்கிற‌து.க‌தையையோ ப‌ட‌த்தையோ விம‌ரிச‌ன‌ம் செய்யாம‌ல் இந்த‌ ப‌ட‌ம் என‌க்குள் கிள‌றி விட்ட‌ இல‌க்கிய‌ ஞாப‌க‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வே இங்கு நான் விழைகிறேன். இத‌ற்கு முன் வ‌ந்த‌ பிதாமக‌ன் ஜெய‌காந்த‌னின் ந‌ந்த‌வ‌ன‌த்தில் ஒரு ஆண்டியை நினைவுப‌டுத்திய‌து என்றால் நான் க‌ட‌வுள் MT வாசுதேவ‌ன் நாய‌ர் எழுதிய‌ வார‌ணாசியையும் த‌க‌ழி எழுதிய‌ பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌லையும் நினைவுப‌டுத்திய‌து.இதில் க‌தையின் மூலமான ஏழாம் உல‌க‌த்தை ப‌டிக்கும் ஆவ‌லில் உள்ளேன்.

லௌதீக‌ வெளியில் காசியில் அலைந்து திரிந்து பின் பல‌ ஊர்க‌ள் க‌ட‌ந்து, மீண்டும் 60ஐ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் காசி செல்லும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ம‌ன‌தை காலி பாத்திர‌மாக‌, சூன்ய‌மாக‌ வைத்து ம‌ர‌ண‌த்தை, ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வினெர்க‌ளும் க‌ட‌ந்து போகும் ம‌னித‌ர்க‌ளை எந்த‌ ச‌ல‌னுமும் இல்லாம‌ல் வேடிக்கை பார்க்கும் வார‌ணாசி க‌தை நாய‌க‌ன் சுதாக‌ர‌னும், ப‌ட‌த்தின் நாயக‌ன் ருத்ர‌னும் ஒன்றாக‌வே தெரிகிறார்க‌ள்.

பிச்சைகார‌ர்க‌ளின் உல‌க‌த்தை ஆழ‌ சென்று காட்டிய‌ முத‌ல் ப‌ட‌ம் நான் க‌ட‌வுள் என்றால் நான் ப‌டித்த‌வ‌ரை பிச்சைகார‌ர்க‌ளின் அவ‌ல‌த்தை முத‌லில் அதிர‌ அதிர‌ ப‌திவு செய்த‌து த‌க‌ழியின் பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌ல். முத‌லாம் குலோத்துங்க‌ சோழ‌ன் இர‌ண்டாம் குலோத்துங்க‌ சோழ‌ன் என்று நாம் தெரிந்த‌ வைத்திருக்கும் ச‌ரித்திர‌ம் போல் ஒரு ஆல‌ ம‌ர‌த்தின் கீழ் ஒதுங்கி வாழ்ந்து ஒரு மாலை பொழுதில் மொத்த‌மாக‌ காணாம‌ல் போய் பின்னொரு ம‌ர‌த்தில் அல்ல‌து கூட்ட‌த்தை குடும்ப‌மாக‌ ஏற்றுகொள்ள‌ பழ‌க்க‌ப்பட்ட‌ ம‌னித‌ர்க‌ளீன் வாழ்க்கையையும் வ‌ர‌லாறாக‌ ப‌திவு செய்திருக்கிற‌து இந்த‌ புத்த‌க‌ம். ச‌முதாய‌த்தில் ச‌ராச‌ரியாக‌ வாழும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கை முறையை வாழ‌ ஆசைப்ப‌டும் அபிலாசைக‌ளை வ‌லி நிறைந்த‌ ந‌கைச்சுவையாக‌ நான் க‌ட‌வுளில் வ‌ரும் பிச்சைக்கார‌ர்க‌ள் பிர‌திப‌லித்தார்க‌ள் என்றால், பிச்சைக்கார‌ர்க‌ள் நாவ‌லில் சராச‌ரி உல‌க‌த்தின் க‌த‌வுக‌ளை திற‌க்க‌ திரும்ப‌ திரும்ப‌ த‌ட்டும் இளைஞ‌ன் ஒரு கட்ட‌த்தில் முடியாம‌ல் தோல்வி அடைவ‌த‌ன் அடையாள‌மாக‌ க‌தை முடிகிற‌து.த‌க‌ழியால் க‌தையின் நாயக‌னை வாசுதேவ‌ன் நாய‌ரின் காசியில் நுழைத்து வாழ‌ தெரியாத‌ அவ‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்னும் வ‌ர‌ம் த‌ர‌ இய‌லாத‌தை பாலா என்னும் மேதை நான் க‌ட‌வுளில் செய்திருக்கிறார்!!!!!!!!

Advertisements
 

பயணம் நவம்பர் 24, 2006

Filed under: என் தடங்கள — bashakavithaigal @ 8:47 முப

துவங்கிய இடத்தில் துவங்கி
தொடரும் இடத்தில் தொடர்ந்து
துரத்தி கொண்டிருக்கிறது
விட்டு வந்த வாழ்க்கை!

அம்மா ஆரம்பித்துவைக்க
அப்பா அடுத்தடிகாட்ட
சுற்றமும் நட்பும்
வழியெங்கும் வழிப்போக்கர்களாய்.
சில கையசைப்புடன்
சில கண்ணீருடன்
சில சம்பிரதாய சிரிப்புகளுடன்
யாவும் வழியனுப்புதலின்
வகைகளன்றி வேறொன்றுமில்லை!

நகரும் நொடிகளில்
சக பயணியாய்
நகரும் முகங்கள்
நேசித்த முகங்கள்
நிழலென இருப்பதில்லை
பயண விதிகளோ ?

எனவே
இதயத்தின் நந்தவனத்தில் என்
கல்லறை வேண்டாம்
இட நெருக்கடி இருக்ககூடும்
நரகத்தின் நெருப்பில்
நான் சுமந்த பயண நினைவுகளுடன்
என்னை எரித்துவிடுங்கள்!

sikkandarbasha@hotmail.com
 

 

என் தடங்கள் நிரம்பி வழிந்த இடங்கள் நவம்பர் 22, 2006

Filed under: என் தடங்கள — bashakavithaigal @ 4:16 பிப

இது ஒரு பயணக் கட்டுரையின் முன்னுரை அல்ல. என் பாதங்கள் ஸ்பரிசித்த, என் கண்கள் உறைந்த,என் இதயம் இடம் பெயர்ந்த
என் உதடுகளின் உச்சரிப்பு மட்டுமே. இதை வாசிக்கும் எவரும் இந்த தரிசனம் அடைந்திருக்கலாம். நான் தொட தவறிய இடங்களை
தொட்டும் காட்டலாம். தொடர்வேன் தொடருங்கள்………

முதலடி----->>>>