தடங்கள்

தாராம் பாய்: மே 31, 2014

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:14 முப

கால்சட்டை கிழிய கூடாத பகுதியில் கிழிந்திருக்கும் பருவத்தில் என் மிட்டாய கனவின் ஏஞ்சலாக இருந்தவர் இந்த தாராம் பாய்(என்ன பெயர் இது!!??) . கொஞ்சம் பணம் புழங்கும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் உடன்பிறப்புகள் நல்ல நிலையிலிருந்தாலும் எல்லா உதவிகளையும் உதறிவிட்டு தன் ஒன்றரை காலில் ஒன்றரை கை உழைப்பில் வாழ்ந்தவர்.ஆம் அவர் ஒரு கையில் மட்டுமே வேலை செய்ய விதிக்கப்பட்டிருந்தார் கொஞ்சம் காலை இழுத்து விந்தி விந்தி நடப்பார் . காலையில் 4 மணிக்கு எழுந்து தெருவில் இருக்கும் பெரும்பாலான வீடுகளுக்கு ஆவின் சென்று பால் வாங்கி தருவதுடன் அவரின் அன்றாட பணிகள் ஆரம்பிக்கும். அவர் வைத்திருந்த ‘பெட்டி’கடையில் 10 15 பாட்டில்களில் தேன் மிட்டாய்,ஜவ்வு மிட்டாய்,கோக்கோ மிட்டாய்,கல்ல(கடலை) மிட்டாய் என்று வைத்து விற்பார்.இதை தவிர பென்சில் குச்சி என்று பொருட்கள்.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து பெருமளவு இஸ்லாமியர்கள் இருந்த தெருவில் இருந்தாலும் அவரிடம் கடவுள் நம்பிக்கை இருந்ததற்கான சாத்திய கூறுகள் இருந்ததில்லை..ரம்ஜான் பக்ரீத்களில் உடை மாறிய தெருவில் அதே வெள்ளை சட்டை வேட்டி உடுத்திய செருப்பணியாத மனிதரை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். நாத்திகம் என்றால் என்னவென்றறியாத காலத்தில் பார்த்த முதல் நாத்திகர்.
தாராம்பாய் திருமணம் முடித்திருக்கவில்லை இல்லை மனைவி இறந்துவிட்டார் லவ் பெயிலியர்(!!!) போன்ற கிசுகிசுக்கள் அவ்வப்போது அவர் கடையின் பக்கத்திலிருக்கும் குட்டி சுவரில் அமர்ந்திருக்கும்போது நடக்கும்.
அந்த பருவத்தில் எனக்கு பிடிவாதத்தின்/இலட்சியவாதத்தின்/சுயமரியாதையின் ஆதர்சமாக தாரம்பாய் இருந்தார். அது சரி அதெல்லாம் பெரும் தலைவர்களிடமும் சாதித்த மனிதர்களிடமும் வெள்ளைக்காரர்கள் எழுதிய சுய முன்னேற்ற நூல்களில் மட்டுமே இருக்கிறதா என்ன?
அவர் கடையில் விக்டோரியா மகாராணியின் ஒரு போட்டோ இருக்கும். காந்தியின் பக்தனாக இருந்த எனக்கு அந்த போட்டாவை ஓட்டி அவரிடம் அடிக்கடி தர்க்கம் நடக்கும். சுதந்திரம் வாங்கி தந்தவர் படம் இல்லாம இந்த வெள்ளகாரி போட்டா மாட்டிருக்கீங்களே என்று கேட்பேன். சுதந்திரமா…?உங்களால அத உருப்படியா வச்சுக்க முடியுமா என்று கேட்டு உற்று பார்ப்பார். போன தேர்தலின்போது நிறைய நிறம்மாறிகொண்டிருந்த நண்பர்களிடம் விவாதிக்கும்போது தாராம்பாயின் இந்த வரிகள் நினைவில் வந்துகொண்டேயிருந்தது.
நாத்திகவாதி/பகுத்தறிவுவாதி,முற்போக்காளார்,கொள்கைவாதி எல்லா மனிதர்களையும் போல் ஒரு நாள் செத்து போனார். அவரை புதைத்துவிட்டு திரும்பும் வழியில் அவர் இரத்த சொந்தம் இன்னொருவரிடம் சொல்லிகொண்டிருந்தார்
’அவர புதைச்ச செலவு வரபோற ஜியாரத் விருந்து செலவு எல்லாம் போகவே அவர் சேத்து வச்ச பணம் நிறைய இருக்கப்பா….மனுசன் இதுக்குன்னே வாழ்க்கைபூரா உழைச்சிருக்கார்’

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s