தடங்கள்

செப்ரெம்பர் 15, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 10:35 பிப

இன்றைய படம் : NACHTZUG NACH LISSABON(Night train to Lisbon)

“We leave something of ourselves behind when we leave a place we stay there even though we go away”

Pascal Mercier எழுதிய NACHTZUG NACH LISSABON என்ற ஜெர்மானிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். யாருமற்று தனியாக வாழும் ஆசிரியர் ரேமுண்ட் பள்ளி செல்லும் வழியில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணை காப்பாற்றி அழைத்து செல்கிறார். பின் அவரிடம் சொல்லாது அப்பெண் கிளம்பி விட அவளின் கோட்டை ஆராயும் ரேமுண்ட் உள்ளே குறிப்புகள் தொகுக்கப்பட்ட உள்ளங்கை அளவே உள்ள ஒரு புத்தகத்தையும் அதனுள் இருந்த லிஸ்பன் செல்லும் ஒரு பயண சீட்டையும் பார்த்து அந்த பெண்ணிடம் சேர்ப்பிக்கும் பொருட்டு இரயில்வே நிலையம் செல்கிறார்.

“If it is so that we live only a small part of life which is within us what happens to the rest?”

இரயில் நிலையத்தில் தேடி அவள் கிடைக்காது ஏற்கனவே புத்தகத்தின் ஆரம்ப வரிகள் தந்த சுவாரஸ்யத்தில் லிஸ்பன் செல்லும் வண்டியில் அந்த புத்தகத்தின் ஆசிரியரை தேடி ஏறி விடுகிறார். அதன் பின் ஒரு பயணம் அவருக்கு தொடங்குகிறது அகவயமாக.

“The fear of death must be described as the fear of not being able to become whom one planned to be”

அந்த குறிப்புகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் லிஸ்பனில் வாழ்ந்து வருகின்றனர் . அந்த குறிப்புகள் அடங்கிய புத்தகம் நிறைய கேள்விகளை ரேமுண்டிடம் எழுப்ப துவங்குகிறது. குறிப்புகளின் ஆசிரியரை தேடி அவர் அவர் வீடு செல்கிறார். அதிர்ச்சியூட்டும் விதத்தில் அறிமுகமாகிறார் அதன் ஆசிரியர்!?

“when dictatorship is a fact ,revolution is the duty”

குறிப்புகளில் இருக்கும் பாத்திரங்களை தேடி அவர்கள் இருப்பிடம் செல்லும் ரேமுண்ட் அந்த பாத்திரங்கள் விட்டு சென்ற இடைவெளியை நிரப்புகிறார்.

ஒரு மனிதன் இறந்த பின்பும் வாழ்ந்துகொண்டிருப்பதை தத்துவ அலசல்களுடன் சொல்கிறது இந்த படம்.

The Real director of Life is accident

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s