தடங்கள்

செப்ரெம்பர் 8, 2013

Filed under: Uncategorized — bashakavithaigal @ 11:44 பிப

இன்றைய படம்:Le Premier Homm(The First man)
மொழி: French
இயக்கம்: Gianni Amelio

Le Premier Homme என்ற Albert Camus-ன் முடிக்கப்படாத(அப்படியும் சொல்ல முடியாது ) சுயசரிதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பிரெஞ்சு அல்ஜிரியாவை கைப்பற்றியதன் பிண்ணனியில் தன் மக்களை அங்கு குடியமர்த்தியிருந்தது அவர்களும் அல்ஜிரிய ட்ரைபல் குழுக்களுடன் ஒன்றாக வாழ்ந்திருந்தார்கள் அவர்கள் யாவரும் pied-noir என்று அழைக்கப்பட்டார்கள் நம்ம ஊரில் ஆரியர்கள் வந்தேறிகள் என்று சொல்வது போல் அங்கு அதற்கும் முன்னதாக இருக்கும் அல்ஜிரிய மக்களுக்கு இந்த வந்தேறிகள் மேல் ஒரு வெறுப்பு.அப்படி ஒரு pied-noir குடும்பத்தில் பிறந்தவன் கோர்மேரி . பிறப்பால் அல்ஜிரியரான கோர்மேரி தந்தையற்று ஏழை கூலி தொழிலாளிகளான அம்மா மாமா பாட்டியுடன் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறான். கல்வி அவன் உயர்வுக்கு திறவுகோலாக அமைய பெரிய எழுத்தாளனாக சமூகத்தில் பலரும் அறியும் மனிதனாக பிரான்சில் உயர்ந்து தாயை காண அல்ஜிரியாவுக்கு வருகிறான். அவனை அல்ஜிரியர்கள் வெறுக்கிறார்கள். சிறு வயதில் வந்தேறியாக தன்னை வெறுத்த தன் நண்பனின் மகனின் மரண தண்டனைக்கு எதிராக தன் செல்வாக்கை பயன்படுத்த முனைகிறான். அவன் தாய் நாட்டை அவ்வளவு நேசிக்கிறான் அந் நாடு அவனை வந்தேறியாக காண மட்டுமே முயல்கிறது. கதையில் கோர்மேரிக்கும் அவன் தாயுக்கும் நடக்கும் உரையாடலும் கதை நெடுக ஒலிக்கும் பிண்ணணி இசையும் மனதை பிழிகிறது.

கதையின் ஆசிரியர் Albert Camus இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் சார்த்தர் Existenitalism என்ற காலத்தில் இவர் Absurdism என்பதை வளர்த்தெடுத்தவர். முடிக்கப்படாத சுயசரிதை என்று சொல்ல முடியாது என்று சொன்னேனல்லவா இவர் இதை முடிக்கு முன்பே ஒரு கார் பயணத்தில் மரணமடைந்து விட்டார்

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s