தடங்கள்

IT-யும் ஆங்கில‌மும் ஏப்ரல் 20, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:48 பிப

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான்.
மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில் இருக்கும் த‌லைக‌ள் ‘எச்சிக்குயுட்டெட்’,’டோட்ட‌பேஸ்’ என்று உச்ச‌ரிப்ப‌தை கேட்ட‌துண்டு. அதேபோல் நுனி நாக்கு ஆங்கில‌ம் பேசும் யுவ‌திக‌ளும்,பீட்ட‌ர்‍களும் த‌ட்டு த‌டுமாறி கொடுத்த‌ வேலையை முடிக்காம‌ல் குழ‌ம்பி இருப்ப‌தையும் காண‌ முடியும். பொதுவாக‌ பெரு ந‌க‌ர‌ங்க‌ளில் உள்ள அலுவ‌ல‌க‌ங்க‌ளில் அமெரிக்க‌ ஆங்கில‌ம்தான் அதிக‌ம் பிர‌யோகிக்க‌ப‌டுகிறது.’ஷிட்’,’ஸ்குரூட்’,போன்ற‌ கெட்ட‌ வார்த்தைக‌ளெல்லாம் நாக‌ரிக‌ வார்த்தைக‌ளாகி சாதார‌ண‌ அலுவ‌ல‌க‌ உரையாட‌ல்க‌ளிலே பிர‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. அமெரிக்க‌ ஆங்கில‌ம் என்ப‌து ந‌ம்ம‌ ஊரு த‌ங்கிலீஸ் மாதிரிதான்.
ஆனாலும் மென்பொருள் துறையில் நுழைய‌ அடித்துபோடும் ஆங்கில‌ம் தேவைப‌டாவிட்டாலும் அவ‌சிய‌மான‌ அள‌வு ஆங்கில‌ம் தேவைப‌டுகிற‌து. ந‌ம்ம‌ ஊர்க‌ளில் ப‌ள்ளி ப‌டிப்பு த‌மிழ் வ‌ழியில் முடித்து விட்டு முத‌ல் நாள் க‌ல்லூரியில் ‘க‌பார்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்’ என்று கேட்கும் மாண‌வ‌ர்க‌ள் மிர‌ண்டுதான் போகிறார்க‌ள். மென்பொருள் துறையில் சேர‌ போகிற‌வ‌ர்க‌ள் கல்லூரி கால‌ங்க‌ளிலேயே உங்க‌ளை த‌யார் செய்துகொள்ளுங்க‌ள்.

1) நீங்க‌ள் பிளாட்பார‌ங்க‌ளில் விற்கும் கிளுகிளூப்பு புத்த‌க‌ங்க‌ளை வெறித்த‌னமாக‌ ப‌டிப்ப‌வ‌ராக‌ இருன்தால் அதைவிட‌ கிளுகிளு சமாச்சார‌ங்க‌ள் ஆங்கில‌த்தில் கிடைக்கும். ஒரு அக‌ராதியை வைத்து உங்க‌ளுக்கும் இருக்கும் ஆர்வ‌த்திற்கு ஒரு நாவ‌லை ஒரு நாளில் முடிக்க‌லாம்.இதை த‌விர‌ ந‌ல்ல‌ நாவ‌ல்க‌ள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்கு இன‌ண‌யான‌ ஆங்கில‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்க‌லாம்.உதார‌ண‌ம்                                                                     ராஜேஷ் குமார் ‍ ‍…..  சேஸ்,ஷிட்னி ஷெல்ட‌ன்
சுஜாதா…………..மைக்க‌ல் கிரைட்ட‌ன்,ஐச‌க் அசீமொவ்,ராபின் குக்
புஷ்பா த‌ங்க‌துரை,ராஜேந்திர‌ குமார்……… ஹெரால்ட் ராபின்ஸ்,இர்விங் வால‌ஸ்
ர‌ம‌ணி ச‌ந்திர‌ன்,ல‌ஷ்மி……மில்ஸ் அன்ட் பூன்,டானிய‌ல் ஸ்டீல்
பால‌குமார‌ன்…..பால் காஹெலொ,அய‌ன் ரான்ட

2) பட‌ம் பார்ப்ப‌தில் ஆர்வ‌முள்ள‌வ‌ரானால் உங்க‌ள் விருப்ப‌த்திற்கேற்ப‌ ஆங்கில‌ டிவிடிக‌ள் ச‌ப்டைட்டிலுட‌ன் கிடைக்கும். ஒரு ஹெட்போனை வைத்து ப‌ட‌த்தை பாருங்க‌ள்

3) சாட்டிங் செய்வ‌தில் விருப்ப‌முள்ள‌வ‌ரானால் வெள்ள‌கார‌ புள்ளைக‌ளை வ‌லையில் பிடித்து வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌த்தில் உரையாடுங்க‌ள்

4)உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ள் பெரு நக‌ர‌ங்க‌ளில் வேலை செய்ப‌வ‌ரா? அடிக்க‌டி அங்கு சென்று என்னதான்யா இவ‌ங்கே சொல்றாங்கே என்று ஆராயுங்க‌ள்.

5)சீன் போடுப‌வ‌ரா? உங்க‌ள் வ‌குப்பு தோழிக‌ளிட‌ம் உரையாடும்போது வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளை சேர்த்து உப‌யோகியுங்க‌ள் த‌வ‌றாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை….அவ‌மான‌மில்லை வாழ்க்கை முழுவ‌தும் அவ‌மான‌படுவ‌தை விட‌ ஒரு இர‌ண்டு நிமிட‌ம் அவ‌மான‌ப‌ட்டால் பாத‌க‌மில்லை.
உங்க‌ள் சூழ் நிலை உங்க‌ளை வெகு எளிதாக‌ ஆங்கில‌ம் பேச‌ வைத்து விடும். ஆனால் உங்களை அந்த‌ நிலையில் கொண்டு வ‌ந்து நிறுத்துவ‌து உங்க‌ள் பொறுப்பு

 

 

 

Advertisements
 

3 Responses to “IT-யும் ஆங்கில‌மும்”

  1. […] தமிழ் எழுத்தாளர்களுக்கு இணையான ஆங்கில எழுத்தாளர்கள்் கோப்பு வகை: links, tamil, websites, தமிழ் — இணையக் கடலோடி @ 11:15 நான் Tags: எழுத்தாளர், தமிழ், பதிவு சுட்ட தளம் : தளம் [ https://bashakavithaigal.wordpress.com ] பக்கம் : பக்கம் […]

  2. sivasayanth Says:

    ம்ம் மொழி என்பது இந்த காலத்தில் கட்டாயம் தான். ஆருக்கு கூட மொழி தெரியுதோ அவங்களுக்கு நல்ல காலம்……….

    நல்ல விசயம் ஒன்றை எழுதியிருக்கின்றீர்காள்

  3. Venkatachalam Says:

    Thank you for sharing valuable information to Tamil Medium students..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s