தடங்கள்

ஒரு பாமரனின் அமெரிக்க நாட்கள் ஏப்ரல் 5, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:40 பிப

அப்ரைசல் என்பது மேலாளர் கீழே வேலை பார்ப்பவர்களை மி்ரட்டுவதற்கான ஒரு அஸ்திரமாக பயன்படுவதுபோல வேலை நாட்டு பணி வாய்ப்பு அல்லது ராஜினமா என்ற மி்ரட்டல் பணியாளார்கள் மத்தியிலிருந்து மேலாளர்களுக்கு விடப்படுவதுண்டு.இதற்கு காரணம் மென்பொருள் துறையென்றால் கை நிறைய சம்பளத்துடன் பல நாடுகளையும் போய் சுற்றி பார்க்கும் வாய்ப்பு என்ற ஒரு மாய வலைதான். நீங்கள் மென்பொருள் துறையிலிருந்து வெளி நாடு வாய்ப்பு
கிடைக்காதவறாயிருந்தால் உங்கள் கிராமத்தில் கூட அவன் போனான் இவன் போனான் என்று புள்ளி விவரம் சொல்லி வெறுப்பேற்றுவார்கள்.

வெளி நாடுகளில் வேலை செய்யும் உங்கள் நண்பர்கள் பல இடங்களுக்கும் சென்றதாய் புகைப்படம் காட்டுகிறார்களா.  ” நல்லா எங்ஜாய் பன்றான்யா” என்று வயிறு எரிகிறதா…..?? நல்லா விசாரித்து பாருங்கள் அவர்கள் வருடம் முழுவதும் 24/7 வேலை பார்த்து ஏதோ ஒரு நாள் இரண்டு நாளில் சுற்றி  இந்த படங்களை அனுப்பிருப்பார்கள்.இதையும் நம்பவில்லையென்றால் வந்துதான் பாருங்கள்.
பெற்றோரை பிரிந்த பிள்ளைகளும்
பிள்ளைகளை பிரிந்து பெற்றோரும்
மனைவியை பிரிந்து கணவரும்
கணவரை பிரிந்து மனைவியும்
காதலனை பிரிந்து காதலியும்
இப்படி எத்தனையோ கண்ணீர் காட்சிகளை பார்க்கலாம்.வெளி நாடு வாய்ப்புகளில் சம்பாதிப்பது டாலர்களை மட்டும்தான். இழப்பிற்கு ஒரு பெரிய பட்டியலே உண்டு.

அது தவிர சாப்பாடு இங்கு ஒரு பெரிய பிரச்சனை நம்ம மக்களுக்கு.
உருளை கிழங்கு,கேரட்,முட்டைகோஸ்,சிக்கன் என்று நாம் சாப்பாட்டிற்கு சைடாக சாப்பிடுவதையே சாப்பாடாக தருவார்கள். அப்படியே தப்பி தவறி சோறு கிடைத்தாலும் நாம் சைடாக சாப்பிடும் பதார்த்தங்களின் அளவிலேதான் கிடைக்கும். மி்க பொதுவான உணவு இங்கு
காய்ச்சல் ரொட்டி
டீ கடை வறிக்கி
 நாய் ரொட்டி
உருளைகிழங்கு என்று நாம் சாப்பிடுவதையே பர்க்கர்  என்ற வெவ்வேறு அளவுகளில் தருவார்கள்.

ம்ம்ம்ம் என்னத்த சொல்றது
எட்டு திக்குகளும் செல்வீர்
கிட்டியதை ஊர் சேர்ப்பீர்
பட்ட துன்பங்களை மறைப்பீர்
‘அமெரிக்காவிலெல்லாம்……………..’
என்று வடிவேல் கதை சொல்வீர்

Advertisements
 

12 Responses to “ஒரு பாமரனின் அமெரிக்க நாட்கள்”

  1. Anony Says:

    Ranganathan theruvil thanga malikayil irukum kootathai parthu, India sezhipana naadu, angae no poor people sollara madiri oru writeup.

    Good luck next time to know what this country is about and what are its greatness.

  2. //Good luck next time to know what this country is about and what are its greatness.

    will try

  3. kamalaa Says:

    உண்மை நண்பரே உண்மை! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
    அன்புடன்
    கமலா

  4. நல்லதோர் பதிவு…

    பெயரிலியாக மறுக்கும் நண்பர்களே… உண்மை சுடத்தான் செய்யும். சுடுகிறது அதனால் அதை ஏற்கமுடியாது என்று சிறுகுழந்தை போல் கூறுவதை மாற்றிக்கொள்ளுங்கள் … 😉

  5. Jayalakshmi Says:

    Only those who earn more than half a million dollars per year can have a comfortable life, or those who dont spend anything from their earnings and sent it all back!. Rest all will have to live wiht longings all the time on both sides of Atlantic.

    Still it is an experience no one wants to miss :-). More so the parents who encourage the off springs to go to America!

  6. Jeyakumar Says:

    இதுக்கு தான்பா நம்மூர் ஜ்ட்டம் நம்ம ஊரை விட சீப்பா ,தரமா (export qulity) கிடைக்கிற லண்டன் மாதிரி ஊர்களுக்கு போகனும்கிறது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s