தடங்கள்

கல்வியை வியாபாரமாக்குவதற்கு பதிலா………… மார்ச் 1, 2008

Filed under: Uncategorized — bashakavithaigal @ 6:18 பிப

a.jpg 

சமீபத்தில் மதுரை,சென்னை,பெங்களுர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளை காணும் வாய்ப்பும் கிட்டியது. பெரும்பாலோர் இந்த கல்வியாண்டில் முதல்முதலாக புகழ்பெற்ற பள்ளியில் சேருவதற்காக ஆயத்தமாகிகொண்டிருந்தார்கள். அவர்கள் LKG-யில் சேருவதற்காக செய்யும் வேலைகளை பார்க்கும்போது மயக்கம் வராத குறைதான். அதை விட தாங்க முடியாத விஷயம் பள்ளி கட்டணம்.
தோரயமாக மார்க்கெட் நிலவரம் இப்படி நீள்கிறது

மதுரை – 15000 முதல் 50000 வரை

சென்னை – 30000 முதல் 100000 வரை

பெங்களூர் – 50000 முதல் 150000 வரை

கட்டணத்தை நீட்டி முழக்கிய அத்தனை பெற்றோரிடமும் “இவ்வளவு காசுக்கு LKG-ல என்ன சொல்லி தருவாங்க” என்று அப்பாவியாய் கேட்டேன். சொல்லி வைத்தாற்போல் அனைவரும் தெளிவற்ற நிலையிலேயே “அதுதான் நிலவரம் இதெல்லாம் நாங்க கேட்க முடியுமா? அப்ளிக்கேஷன் வாங்குறதே பெரிய விஷயமா இருக்கு, அதுல இப்படியெல்லாம் கேட்டா எங்கள விரட்டி விட்டுடுவாங்க” என்றார்கள்.
தளபதி படத்துக்கு முதல் காட்சிக்கு அவ்வளவு கூட்டத்தில் டிக்கெட் வாங்கி அந்த பெருமையை ஒரு வருடத்துக்கு ஊர் முழுவதும் சொல்லி திரிந்த நண்பன் தன் முதல் குழந்தைக்கு விண்ணப்ப படிவம் வாங்க முடியாமல் மனைவியிடம் அர்ச்சனையை வாங்கிய அவலத்தை சோகமாக சொன்னான்.
விண்ணப்ப படிவம் குடுப்பதற்கு முதல் நாள் இரவே பள்ளியின் வாசலில் வரிசையில் காத்திருக்க வேண்டுமாம். ஏன் என்றால் குறைவான விண்ணப்பங்களே கொடுப்பார்களாம்.வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் அவர்களின் வயதான அப்பாக்களை வரிசையில் நிற்க வைத்த அவலுமும் நிகழ்ந்திருக்கிறது.

பெரும்பாலான குழந்தைகள் LKG-யில் சேருவதற்கு முன்னரே ஆங்கில எழுத்துக்களை முழுவதுமாக கற்றுகொண்டு விடுகின்றன.அது தவிர ஆங்கில பாடல்களையும். சில சின்ன ஆங்கில வாக்கியங்களும் பேசிகின்றன.அ-னா ஆ-வனா சொல்லு என்றால் “சின்ன குழந்தைக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?”,  “அவளுக்கு தமிழே தெரியாது தெரியுமா only english”,  “தமிழ் நாங்க வீட்ல பேசுறோம்ல போறும்….. French எடுக்கலாம்னு இருக்கேன்”
இப்படிதான் பெரும்பாலான பதில்கள் வருகின்றது பெற்றோரிடமிருந்து

அதுதவிர Interview card வந்து  நேர்முக தேர்வுக்கு குழந்தைகள் தயார் செய்யப்படுகிறார்கள்.

 நேர்முக தேர்வில் கேள்வி குழந்தையிடம் : what is your name?
                மதுரை குழந்தை      : ……………………………………(மலங்க மலங்க பார்த்தபடி உதட்டை பிதுக்கி அழ தொடங்குகிறது
              சென்னை குழந்தை      :  பேயி……………………….
              பெங்களூர் குழந்தை     : போ……போ
மேற்சொன்னபடி நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதுவும் சில பள்ளிகள் பெற்றோர்கள் அவசியம் படித்திருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.அது இல்லாத பட்சத்தில் இடம் கிடைப்பது கடினம்.

எப்பா………………………டியோ………………………………………

எனக்கு சில கேள்விகளுண்டு

1) ஒரு இலட்ச ரூபாய்க்கு LKG-யில் என்ன சொல்லி குடுப்பார்கள். நான் எல்லா வருடத்துக்கும் சேர்த்து 5000 செலவழித்து படித்த கணிப்பொறி முதுநிலை பட்ட படிப்பு LKG-யை விட குறைவானதா?

2) கல்வியை ஒரு கொடையாக அளித்த வள்ளல் அழகப்பா செட்டியார் போன்ற மாமனிதர்களாய் மாற ஏன் எந்த தனியார் கல்வி நிறுவனமும் முயற்சிக்கவில்லை?

3)  அரசாங்க பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு? அப்படி பெரிய வேறுபாடு உண்டெனில் அரசாங்கம் நடத்தும் IIT-களில் சேர ஆறாம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்துகொள்ள பெற்றோர்கள் ஏன் மெனக்கிட வேண்டும்?

4)IIT IIM IISC போன்று தரமான கல்வி நிறுவனங்களை நடத்தும் அரசாங்கத்தால் அந்த தரத்தை எல்லா அரசு பள்ளிகளிலும் கொண்டு வர இயலாதா?

5) அப்படி நடத்த நிறைய பணம் செலவாகுமெனில் வருடம் வருடம் நாம் வருமான வரியோடு கட்டும் Education cess மூலமாக திரட்டப்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் போதவில்லையா?

6) தாய்மொழி தெரியாததை பெருமையாக சொல்லும் அம்மா, குழந்தை அடுத்த வீட்டு Aunty வீட்டில்தான் இருப்பேன் என்று அடம் பிடித்தால் விட்டு விடுவாளா?

7) கணிப்பொறி,கர்னாடக சங்கீதம்,குச்சிபிடி டான்ஸ் என்று குறைவான கால இடைவெளிகளில் கற்றுகொள்ளும் குழந்தை ஆங்கில மொழியை கணிதம்போல், கணிப்பொறி போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கற்றுகொள்ள இயலாதா? அப்படிபட்ட பாடமுறை நம்மிடம் இல்லையா?

    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே

Advertisements
 

6 Responses to “கல்வியை வியாபாரமாக்குவதற்கு பதிலா…………”

 1. srirammurali Says:

  “கற்கை நன்றே கற்கை நன்றே
  பிச்சை புகினும் கற்கை நன்றே”

  போகிற போக்கை பார்த்தால், பிச்சை புகுந்தால் மட்டுமே கற்கை இருக்கும் போலிருக்கிறது.. 😦

 2. //போகிற போக்கை பார்த்தால், பிச்சை புகுந்தால் மட்டுமே கற்கை இருக்கும் போலிருக்கிறது

  கற்பிப்பது நன்றே கற்பிப்பது நன்றே
  பிடுங்கி தின்று கற்பிப்பது நன்றே

 3. அவலங்கள் என்ற தலைப்பில் எழுத வேண்டிய ஒன்று இது.காலம் செய்த கோலம் இது. நாம் எங்கே போகிறொம் என்று நமக்கே தெரியவில்லை. எதை வியாபாரம் செய்வது என்று புரியாமல் போய் விட்டது. கல்வி என்பது வேலை வாய்ப்பை நொக்கி நகர ஆரம்பித்ததன் விளைவு இது.
  வாழும் முறை சொல்லிக்கொடுத்தால் பரவாயில்லை.வேலை பிடிக்கும் முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவ்வளவே!
  கவலையுடன்
  கமலா

 4. //வேலை பிடிக்கும் முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவ்வளவே!

  ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவுகிறதா என்ன?????

 5. வேலை பிடிக்கத்தானே சொல்லிக் கொடுக்கிறது என்று சொன்னேன். வேலை பார்க்க என்றா சொன்னேன்.(ஏட்டுச்சுரைக்காய் உதவாதுன்னு தெரிஞ்சதுதானே)
  கமலா

 6. Jayalakshmi Says:

  That is not education or is it knowledge. It is only a race for a place. Millions of Indians who ahve studied in mother tongue and later learnt English as additional language are doing very well. So english medium is not necessary in the younger years.

  As you have rightly questioned, why can’t govt.schools perform?. Who can ask?. I tried queastioning one school on behalf of my domestic help. I was told not to visit the school any more.

  Education is big business today. My domestic help has changed her children to private English medium school. She does not know what her children are studying , she is paying for their tuition after school hours. So the middle class dream of English medium for economic empowerment is catching up.

  The so called private schools are teaching by rote method. Once again schools make good money . People want good schools, so they pay by hook or crook and opt for English medium private schools.

  The cycle seems endless. And we seem to be churning out young Indians with barely any educaton , but English literate. Call centre jobs are ready .

  Where are we going? Confusing and scary.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s