தடங்கள்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க. பிப்ரவரி 26, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 4:21 பிப

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க.

மென்பொருள் துறையில் துப்புரவு படுத்தும் பணி துவங்கிவிட்டது அதாங்க Layoff எனப்படும் ஆள்குறைப்பு வேலை.பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்பணியை துவக்கி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும்  அடிப்படை அமெரிக்க பொருளாதாரம் படுத்து அங்கிருந்து வரும் பணிகள் சுணங்கி போனதுதான்.ஆள் குறைக்கும் பணி கீழ்கண்ட படிகளில் நிகழ்கிறது

1) consultant அல்லது தற்காலிக பணியில் உள்ளோர் முதல் கட்டமாக தூக்கப்படுகிறார்கள்

2) பெஞ்சுவாசிகள் அதாவது பணி இல்லாமல் பிராஜெக்ட் எதிர்பார்த்து காத்திருப்போருக்கு அடுத்த வேட்டு. ஆகையால் முடிந்தவரை ஏதாவது ஒரு பிராஜெக்டில் ஒ(ஓ)ட்டிகொண்டிருங்கள்.

3) Appraisal-ல் குறைவான மதிப்பெண்கள் அல்லது ரேட்டிங் வாங்கியவர். ஆதலால் அடிக்கு சின்ச்சாவை கொஞ்சம் சத்தமாக அடிக்கவும்.

பெங்களூரில் ஒரு PL  நண்பரின் புலம்பல்

” நம்மட்ட யாரு யாரு சரியா வேலை செய்யலனு கேக்குறானுங்க…..திருத்ததான் போறானுங்கனு சொன்னா தூக்கிட்டானுங்க…தூக்குனவனுங்க எம்பேர சொல்லி தூக்கிருக்கானுங்க……வெளியே போறவன்லாம் வெளியில வா உன்ன பாத்துக்கறேன்னு மிரட்டிட்டு போறான்…..சரியான கடியா இருக்கு”

சில நிறுவனங்களில் கொத்து கொத்தாக அதாவது 50 100 என்று நீக்கப்படுகிறார்கள். சில நிறுவனங்களில் 10 10 ஆக நீக்கப்படுகிறார்கள்.

என்னத்த செய்யிறதுங்கிறீங்களா???????????

1) ஒரு வருடத்துக்கு உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கான் தொகையை சேமித்துகொள்ளுங்கள்

2) கடன் வாங்குவதை தவிருங்கள்

3) மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தி காட்டிகொள்ளும் திறமைகளை வளர்த்துகொள்ளுங்கள்

4) வேறு தொழில் செய்வதற்கான் வாய்ப்பு சூழல் இருக்கும் பட்சத்தில் அத்தொழிலில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம்

5) மென்பொருள் துறையில் என்ன நடக்கிறதென்ற அதித விழிப்புணர்வுடன் இருங்கள்

Advertisements
 

3 Responses to “ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க.”

 1. இதென்ன நாலு வருஷத்துக்கு ஒரு தடவை இந்த கூத்து?சாமானியமாமாகப் படித்தவர்களுக்குகூட‌ நல்ல வருமானத்தைக் கொடுக்கும் இந்தத் துறை இப்படி நிரந்தரம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய பிரச்சினைதான்!
  கமலா

 2. //இதென்ன நாலு வருஷத்துக்கு ஒரு தடவை இந்த கூத்து?

  நாங்கெல்லாம் கழை கூத்தாடிங்க–:)

 3. நல்ல apt பதில்.நகைச்சுவையும் இருக்கு. உண்மையும் இருக்கு,எனக்கும் பொருந்தியிருக்கு பாஷா!
  அன்புடன்
  கமலா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s