தடங்கள்

PM(பன்னி மேய்க்கலாம்) பிப்ரவரி 16, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:15 முப

சமீப காலங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு சொல் பிராந்திய மனப்பான்மை. இது அரசியலில் மட்டுமல்ல IT-யிலும் உண்டு.சிபாரிசு கடிதங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை இன்னும் வராவிட்டாலும் பணியில் செர்ந்த பிறகு கிடைக்கும் மரியாதையில்,முக்கியத்துவத்தில் அவை காட்டப்படுவதுண்டு.பொதுவாக  இந்திய மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில் அடங்குவர்.
1) தமிழர்கள்
2) மலையாளிகள்
3) ஆந்திரக்காரர்கள்
4) வட நாட்டுகாரர்கள்
5)கன்னடர்கள்
இவர்களை தவிர மற்றவர்கள் சொற்ப எண்ணிக்கையிலிருப்பர்.பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் இவர்கள் ஒரு குழுவாக அவர்களுக்குள் அமைத்துகொள்வார்கள்.அந்த குழுவின் மொழி பிராந்திய மொழியாய்தான் இருக்கும் Meeting-லும் கூட. மற்ற மொழிகாரர்கள் இந்த கூட்டத்தில் மாட்டினால் ‘மங்குனி பாண்டியாட்டம்’ அமர்ந்திருக்க வேண்டியதுதான். பெரும்பாலான நிறுவனங்களில் இந்த நிலைதான்.ஆக இப்படி இருக்கும் குழுவில் PM(ப்ராஜெக்ட் மானேஜர்) இருந்தால் இயற்கையாக அவருக்கும் அந்த குழு பாசம் வந்து விடும். ஆக அந்த குழுவில் நீங்கள் இல்லையென்றால் உங்கள் ‘சின்ச்சா…சின்ச்சா’ அவருக்கு புரியாது. உங்கள் சொல்லை விட அந்த குழுவில் இருக்கும் மற்றவர்களின் சொல் பெரிதாக எடுத்துகொள்ளப்படும். உதாரணத்திற்கு நீங்களும் அந்த பிராந்திய குழுவிலிருக்கும் ஒருவரும் சேர்ந்து ஒரு பணியை செய்ய நியமிக்கபடுகிறீர்கள். நீங்கள் இருவரும் அல்லது நீங்கள் மட்டும் அந்த பணியை திறம்பட செய்து முடிப்பதாய் வைத்துகொள்வோம். ஆனால் அதை உங்களோடு இருக்கும் அந்த பிராந்திய மொழிகாரர் தான் மட்டும் செய்ததாய் உங்கள் PM-ய் நம்ப வைத்துவிடுவார்.பொதுவாக இந்த குழு மனப்பான்மை மலையாளிகளிடம் அதிகமாகவும் தமிழர்களிடம் குறைவாகவும் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அனுபவம். செயல் ஓரிடம் பலன் வேரிடம் என்பது சாப்ட்வேர் வாழ்க்கையில் சாதாரணமப்பா!!!!!

இதை தவிர ‘சின்ச்சா…சின்ச்சா’ அடிக்க பிரயத்தனப்படும் உங்கள் சக பணியாளர்கள் செய்யும் செயல்களாவன:

1) பணியில் பத்து படி ‘எச்சா’ ஆர்வம் காட்டுவதாய் காட்டிகொள்ள எல்லாருக்கும் தெரிந்த ஆனால் PM-க்கு மாத்திரம் தெரியாத தொழில்நுட்ப நுணுக்கங்களை ஊருக்கே மெயிலில் அனுப்புவது குறிப்பாய் PM-க்கு CC போட்டு

2) சக பணியாளருக்கு சாதாரண ஒரு விஷயத்தை விளக்கும்போது அந்த பக்கம் PM கடந்து போனால் ஐன்ஸ்டீன் range-க்கு சிந்திப்பதாய் காட்டிகொள்ள ஷேக்ஸ்பியர் range-க்கு  500 டெசிபலில் சத்தமாக பீட்டர் விடுவது.

3)meeting-ன் போது PM சொல்லும் அர்த்தமற்ற கோமாளித்தனமான பேச்சுக்கு ‘excellant point’,’wonderful’,’valid point’ என்று உதார் விடுவது

4)எப்பொழுது முடிப்பாய் என்ற PM-ன் கேள்விக்கு தொடங்காமலேயே முடிந்ததாயும் சில திருத்தங்கள் மட்டும் பாக்கி இருப்பதாய் தமிழ் சீரியல் range-ku கதை சொல்வது.

5)எட்டப்ப வேலை பார்ப்பது

சரி இந்த அளவுக்கு ஆட்டுவிக்கும் PM-ன் பணி என்னவென்றால் குடுக்கும் ப்ரொஜெக்ட் வேலையை திறம்பட முடித்துகொடுக்க அவரே பொறுப்பு(பெரிய பருப்பு இவரு!!!!!!). மாடு அல்லது பன்னி மேய்ப்பதை பார்த்திருந்தால் உங்களுக்கு எளிதாக விளங்கிவிடும். ஒரிடத்திலிருந்த பன்னி கூட்டத்தை பிரிதொரு இடத்துக்கு குழு சிதறாமல் கவனமாக ஒட்டி செல்ல வேண்டும்.பன்னிகளிடையே ஏற்படும் மோதல்களை சமரசப்படுத்த வேண்டும். ‘awesome’,’Great job’  என்று அடிக்கடி பன்னிகளுக்கு உற்சாகமூட்ட வேண்டும். அவ்வளவே!

இந்த பொழப்புக்கு நாலு பன்னி குட்டிகள வாங்கி மேய்க்கலாமுனு எங்க வீட்டு பெரிசு திட்டிட்டு போயிட்டாருங்கோ……..

http://youtube.com/watch?v=1ZDDHnv65dI

 

9 Responses to “PM(பன்னி மேய்க்கலாம்)”

  1. PM Says:

    நண்பரே,

    நீங்கள் சொன்ன பிராந்திய குழு வேலைகள் மற்றும் ‘சின்ச்சா…சின்ச்சா’ பணிகள் அனேகமாக உண்மைதான். பிஎம் விவரமா இருந்தா இந்த காக்கா பிடிக்கும் ஆட்களை காதுகொடுத்துக் கேட்பார். ஆனால் கண்டுகொள்ளமாட்டார். மத்தபடி, இந்த பன்னி மேய்க்கும் சமாச்சாரம் பத்தி… என்ன அப்படி சுலபமா சொல்லீட்டீங்க? எந்த ஊருல பன்னிக வேலைக்கு சேர்ந்த ஒரே வருசத்தில ஆன்சைட் போகணுமின்னு அடம் பிடிக்குது?, சொல்லாம கொள்ளாம டெட்லைனுக்கு முன்னாடி விடுமுறை எடுக்குது?, அப்ரைசல் ரேட்டிங் சரியிலேன்னு ஒத்துக்கமாட்டேங்குது? ஊதிய உயர்வு சரியில்லேன்னு சொல்லியிருக்குது? திடீர்ன்னு வெளியூருக்கு மாற்றல் கேக்குது? தகுதியில்லேன்னாலும் பதவி உயர்வு கேக்குது?

  2. பன்னி Says:

    எதுக்குப்பா சாப்ட்வேர் பசங்களோட எங்கள ஒப்பீடு செய்து பன்னிங்களை கேவலப்படுத்துறீங்க?

  3. //நீங்கள் சொன்ன பிராந்திய குழு வேலைகள் மற்றும் ‘சின்ச்சா…சின்ச்சா’ பணிகள் அனேகமாக உண்மைதான். பிஎம் விவரமா இருந்தா இந்த காக்கா பிடிக்கும் ஆட்களை காதுகொடுத்துக் கேட்பார். ஆனால் கண்டுகொள்ளமாட்டார். மத்தபடி, இந்த பன்னி மேய்க்கும் சமாச்சாரம் பத்தி… என்ன அப்படி சுலபமா சொல்லீட்டீங்க? எந்த ஊருல பன்னிக வேலைக்கு சேர்ந்த ஒரே வருசத்தில ஆன்சைட் போகணுமின்னு அடம் பிடிக்குது?, சொல்லாம கொள்ளாம டெட்லைனுக்கு முன்னாடி விடுமுறை எடுக்குது?, அப்ரைசல் ரேட்டிங் சரியிலேன்னு ஒத்துக்கமாட்டேங்குது? ஊதிய உயர்வு சரியில்லேன்னு சொல்லியிருக்குது? திடீர்ன்னு வெளியூருக்கு மாற்றல் கேக்குது? தகுதியில்லேன்னாலும் பதவி உயர்வு கேக்குது?

    நண்பரே உங்கள் ஆதங்கம் உண்மைதான்.ஆனால் எத்தனை விவரமான PM-கள் இருக்கிறார்கள்

    1)ஒரு வருஷத்தில onsite போனுமின்னு நினைக்கிறது ஒரு பெரிய குற்றமா? தகுதி இருந்தால் போக கூடாதா?

    2)ah….அந்த டெட்லைன decide செய்வது யாரு? நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில deadline எல்லாம் சரியா பண்டிகைக்கு முந்தின நாளா இருக்கும். உங்களுக்கு வேலை தர அமெரிக்காகாரன் dec 24 இருந்து jan 1 வரை வேலை பார்ப்பான்னு நீங்க நம்பறீங்களா?

    3) போட்ற ரேட்டிங்கெல்லாம் ஒத்துக்கணும்னு இல்ல.
    அதுக்காகதான் அப்ரைசல் அப்படி வடிவமைத்துள்ளார்கள்.

    4) ஊதிய உயர்வு,பதவி உயர்வு,வேலை மாற்றல் இதெல்லாம் கேக்ககூடாதுன்னு இல்ல. அதெல்லாம் சாப்ட்வேர் கலாச்சாரம்.

    இருந்தாலும் PM வேதனை என்பது தனி அத்தியாயம்,அதையும் தொடுகிறேன் தோழரே

  4. //எதுக்குப்பா சாப்ட்வேர் பசங்களோட எங்கள ஒப்பீடு செய்து பன்னிங்களை கேவலப்படுத்துறீங்க?

    அய்யோ நல்ல சாப்ட்வேர் பசங்களும் இருக்காங்க தலைவா?????

  5. PM Says:

    நன்றி. ஆறேழு வருஷம் பொட்டி தட்டிட்டு சட்டுன்னு மேனேஜர் ஆகிற பலருக்கும் திட்ட மேலாண்மையை யாரும் சொல்லித்தருவதில்லை. அங்கயும் கஷ்ட நஷ்டங்கள் இருக்குன்னும், அதயும் உலகம் தெரிஞ்சிக்கணுமின்னுதான். ஏன்னா தமிழ் வலையுலகம் PMகளை டேமேஜர் என்றே அறிந்துள்ளது.

  6. //தமிழ் வலையுலகம் PMகளை டேமேஜர் என்றே அறிந்துள்ளது

    தமிழ் வலையுலகம் மட்டுமல்ல இந்தி,இங்கீலீஸ்,மலையாளம்,பிரெஞ்சு எல்லா உலகமும் அப்படிதான்

  7. lightink Says:

    i.t pathi enaku theriyathu epa theriji ketan thanks

  8. surya Says:

    நீங்கள் சொல்லும் தனித்தனி குழுக்கள் மொழி வாரியாக அமைவது ஐ.டி.யில் மட்டுமன்றி எல்லாத் துறைகளிலும், ஏன்? இந்திய அரசாங்கப் பணிகளிலுமே இருக்கத்தான் செய்கின்றன். மேலும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் வாழும்
    மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர் போன்ற இதர மானிலத்தவர் எல்லோருமே ஒரு தனக்கென ஒரு வளையம் போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர் என்பதும் உண்மை தான்.இந்த வளையங்கள் பெரும்பாலும் அவரவர்கள் கலாசார நிகழ்ச்சிகளுக்காகவும் செயல்படுகின்றன். உதாரணமாக, ந்யூ யார்க்கில் or new delhi இருக்கும் தமிழர் பொங்கல் கொண்டாடும்போது,அல்லது மலையாளிகள் ஓணம் கொண்டாடும்போதும். இதில் தவறேதும் இருப்பதாகத்தெரியவில்லை. மேலும் மேலதிகாரிகள் தங்கள் மொழியைச் சார்ந்தவரைக் கேட்டுத்தான் செயல் படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
    ஒருவருக்கு இதுபோன்ற ஐயங்கள் எழும்போது அவர் தனது மேலதிகாரியுடன் ஒரு
    நேர் காணலுக்கு ஏற்பாடு செய்து விரிவாக இது பற்றி விவாதிப்பது, அதற்கான solutions தேடுவதே சரியாக இருக்கும்.

    நிற்க. செய்யும் தொழில் தெய்வம் என்ற உணர்வு நிலை ஓங்குமானால், பன்னி மேய்க்கலாம்’ என்ற உணர்வு வருவது அரிது. உங்க‌ள் த‌ன்மான‌ம், த‌ன்ன‌ம்பிக்கை,
    எல்லாமே உங்க‌ள் கையில் தான் உள்ள‌து.
    உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்றார் திருவ‌ள்ளுவ‌ர்.த‌ன் ந‌ம்பிக்கையுட‌ன் செய‌ல்
    ப‌டுங்க‌ள். வெற்றி உங்க‌ள‌தே.
    க‌ட‌வுள் உங்க‌ளுக்கு என்றும் துணையாக‌ இருப்பார்.
    சுப்புர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.

  9. //உங்க‌ள் த‌ன்மான‌ம், த‌ன்ன‌ம்பிக்கை,
    எல்லாமே உங்க‌ள் கையில் தான் உள்ள‌து.
    உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்றார் திருவ‌ள்ளுவ‌ர்.த‌ன் ந‌ம்பிக்கையுட‌ன் செய‌ல்
    ப‌டுங்க‌ள். வெற்றி உங்க‌ள‌தே.

    அப்படிதாங்க வண்டி இவ்வளவு நாள் ஓடுது, தன்மானம் தன்னம்பிக்கையோட இன்னொரு கம்பெனிக்கு போறாங்க…….Attrition rate இங்க ரொம்ப ஜாஸ்தி…..
    மற்றபடி குழுமனப்பான்மை கொண்டாட்டங்களில் மட்டும்இருந்தால் பிரச்சனையே இல்லையே….
    மற்ற துறையில் எனக்கு அனுபவம் இல்லை….இது மென்பொருள் துறை சார்ந்த கருத்து மாத்திரமே


பன்னி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி