தடங்கள்

இதெல்லாம் ஒரு பொழப்பா பிப்ரவரி 5, 2008

Filed under: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 7:38 பிப

பிரபல மென்பொருள்  நிறுவனம் 500 மென்பொருள் வல்லுநர்களை வேலையை விட்டு போக சொல்லியிருக்கிறது.ஒவ்வொரு வருடமும் எல்லா நிறுவனத்திலும் Performance appraisal என்று ஒன்று இருக்கும். அதாவது நாம் பள்ளியில் படிக்கும்போது Rank card தருவார்களே ஏறக்குறைய அது போல் எல்லா நிறுவனங்களும் எல்லா பணியாளர்களுக்கும் Rank இடுவார்கள்.
அதில் சரியாக பணி செய்யாதவர்கள்,பணி செய்ய திறனில்லாதவர்களுக்கு இறுதி மதிப்பெண் தரப்படும். அதனடிப்படையில் அவர்கள் Danger zone-ல் வருவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கும். அந்த மதிப்பெண்கள் முழுவதும் உங்கள் திறமையின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள். பெரும்பாலான மென்பொருள் வல்லுனர்கள் சொல்லும் குற்றச்சாட்டு இந்த மதிப்பெண்கள் உங்களின் காக்காய் பிடிக்கும்(மேலதிகாரியை) திறனை பொருத்திருக்கிறது என்பதை. இருந்தாலும் உங்கள் மதிப்பெண்ணை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு உங்களுக்கு சண்டையிடும் திராணி இருந்தால்.மேலதிகாரியின் கருணை இருந்தால் அவை பரிசிலிக்கப்படும். இதென்ன கவர்மெண்ட் ஆபிசா இல்லை கம்யூட்டர் நிறுவனமா என்று சந்தேகம் வருகிறதா. என்ன செய்வது. இரண்டு இடத்திலும் இருப்பது மனிதர்கள்தானே!!!!
இப்படி பணியில் பாதியில் செல்வதில் சில சங்கடங்கள் உண்டு. உண்மையில் உங்களுக்கு திறமை இருந்து பிற காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துகொண்டாலோ நீங்கள் சுலபத்தில் பிற கம்பெனியில் வேலையில் சேர்வதென்பது கடினம்.அவர்கள் சீழ் பிடித்த புண்ணை மோந்து பார்ப்பதுபோல் உங்கள் முந்தைய பணி நீக்கத்தை அறிந்துகொள்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள்.தென்னை மரத்திலே தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து அது உங்கள் மதிப்பெண்ணில் பிரதிபலிக்கலாம்.ஆனால் அந்த காரணங்கள் அறிந்திருந்தும் அவை மறக்கப்பட்டு உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நீங்கள் பணி முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டவரென்றால்.
இப்பொழுதுதான் சில நிறுவனங்கள் இந்த பணி  நீக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனன.இது மேலும் விரிவடையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது.2001-ல் நடந்த Dot com burst-ய் விட இது மிக மோசமாக இருக்கும் என்று பொருளாதார தலைகள் பெரிய கண்ணை உருட்டி மிரட்டுகின்றன.
போங்கடா………இதெல்லாம் ஒரு பொழப்பா………….

Advertisements
 

12 Responses to “இதெல்லாம் ஒரு பொழப்பா”

 1. Murali Says:

  ஆம், பலருக்கு வயற்றில் புளி கரைக்கிறது பலருக்கு என்றாலும் , நீங்கள் சொன்ன காக்கா பிடிக்கும் விசயம் முற்றிலும் உண்மையல்ல,. சிலர் காக்காய் பிடித்தல் மூலம் ஒரு வருடம் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கலாம் , ஆனால் தொடர்ந்து முடியாது.. மேலும் நீக்கப்படுபவர் உண்மையிலேயே ஆக தான் இருப்பர்..

  அப்புறம், உங்க டெம்ப்ளேட் அருமையாக உள்ளது, எங்கிருந்து எடுத்தீர்?

 2. Murali Says:

  ஆம், பலருக்கு வயற்றில் புளி கரைக்கிறது பலருக்கு என்றாலும் , நீங்கள் சொன்ன காக்கா பிடிக்கும் விசயம் முற்றிலும் உண்மையல்ல,. சிலர் காக்காய் பிடித்தல் மூலம் ஒரு வருடம் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கலாம் , ஆனால் தொடர்ந்து முடியாது.. மேலும் நீக்கப்படுபவர் உண்மையிலேயே bad performer ஆக தான் இருப்பர்..

  அப்புறம், உங்க டெம்ப்ளேட் அருமையாக உள்ளது, எங்கிருந்து எடுத்தீர்?

 3. //Dont make us cry
  Don’t cry….Careful….and improve your skills

 4. /*, பலருக்கு வயற்றில் புளி கரைக்கிறது பலருக்கு என்றாலும் , நீங்கள் சொன்ன காக்கா பிடிக்கும் விசயம் முற்றிலும் உண்மையல்ல,. சிலர் காக்காய் பிடித்தல் மூலம் ஒரு வருடம் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கலாம் , ஆனால் தொடர்ந்து முடியாது.. மேலும் நீக்கப்படுபவர் உண்மையிலேயே bad performer ஆக தான் இருப்பர்..*/

  Good/bad performer apdinrathu oru relative terminology…

 5. // சிலர் காக்காய் பிடித்தல் மூலம் ஒரு வருடம் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கலாம்//

  காக்காவை ஒவ்வொரு வருஷமும் மாத்தி மாத்தி புடிச்சா போதுமே 🙂

 6. Murali Says:

  அப்புறம், உங்க டெம்ப்ளேட் அருமையாக உள்ளது, எங்கிருந்து எடுத்தீர்?

 7. i think it is from wordpress default template….taken long back

 8. //காக்காவை ஒவ்வொரு வருஷமும் மாத்தி மாத்தி புடிச்சா போதுமே

  சூப்பரப்பு!!!! எங்க போனாலும் காக்கா காக்காதான-:)

 9. இது சில காலமாக நடந்துகொண்டிருக்கிறது . எனக்கு தெரிந்த நண்பர்கள் இது போன்று வலுக்கட்டாயமாக வேலையை விட்டு தூக்கியெறியப்பட்டுள்ளனர். இதில் என்ன பிரச்னை என்றால் அவர்களாக வேலையைவிட்டு செல்வதுபோல் மிரட்டி கையெழுத்து வாங்கிவிடுகின்றனர். அதனால் இது சாதாரண விசயம்போல் ஆகிவிடுகிறது. நம்மாளுகளும் அனுபவச் சான்றிதழ் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுவிடுகின்றனர். படித்த முட்டாள்கள் !. வேற என்ன சொல்றது.

  அன்புடன்,
  அன்பு

 10. //படித்த முட்டாள்கள் !. வேற என்ன சொல்றது

  என்ன செய்யிறது…………உயரத்துள கூட்டிட்டு போயி குதின்னா!!!!!!!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s