தடங்கள்

கற்றது கணிப்பொறியியல்(3) ஜனவரி 12, 2008

Filed under: Jobs — bashakavithaigal @ 2:12 பிப

IT துறையில் முதல் வேலை வாங்குவது பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம். ஏன் எனில் IT-யில் வேலை வாங்குவது மிகவும் எளிது ஆனால் மிக கடினம்(வரும்………….. ஆனா வராது!!!!!!)
இரண்டு முறைகளில் வேலை வாங்குபவர்கள் உண்டு

Campus Interview:
     நீங்கள் reputed college-ல் படித்தவர்களானால் ,உங்கள் கல்லூரியில் campus interview உண்டு என்றால் தப்பித்தீர்கள் இல்லை என்றால் ஒரு வேலை வாங்குவதற்குள் கிட்னி
இரண்டும் இடம் மாறிவிடும்.
ஆதலால் முதல் பாடம் கல்லூரியை தெர்வு செய்வது. campus interview இல்லையெனில் தயவு தாட்சயண்யம் இன்றி அந்த கல்லூரியை விலக்குவது உத்தமம்.campus interview-ல்
ஒரு 100,200 போட்டியாளர்கள்தான் இருப்பார்கள் ஆனால் வெளியே Out of campus சென்று விட்டால் சிவாஜி பட முதல் காட்சிக்கு காணும் கூட்டத்தை நீங்கள்
ஒவ்வொரு நேர்முக தேர்விலும் காண வேண்டி வரும்.
campus interview போகும் முன் வரும் நிறுவனத்தை பற்றி அவர்கள் இணைய தளத்திலிருந்து அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் குடுக்கும் General Introduction session-ல் அவர்கள் நிறுவனத்தை
பற்றி ஏதாவது கேட்டு கொஞ்சம் scene போட்டு நீங்கள் ஒரு தில்லாலங்கடி என்று காட்டிகொள்ளுங்கள்.
எழுத்து தேர்வு வைத்தால் விடைத்தாள்களை வேறு கல்லூரி நண்பர்கள் மூலமோ இணையத்தின் மூலமோ எடுத்து தயாராய்கொள்ளவும்.அதற்கும் மேல்
Quantitative Aptitude
Anaytical Reasoning
GRE
C
போன்றவற்றை படித்து தயாராகிகொள்ளவும்.
அது தவிர ஒரளவு சரியாக ஆங்கில்த்தில் உரையாடினாலும் போதும்.பொதுவாக இப்பொழுது நேர்முக தேர்வுக்கு வருபவர்களில் ஒரு ‘அருக்காணியோ’,’அல்லாபிச்சையோ’ இருப்பார்கள்( நம் கஷ்டம் அவர்களுக்கும் தெரியும்).
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும். நீங்கள் அதை நம்பாவிட்டாலும் கூட!!

Open Interview:
 இங்கு campus interview-ல் இடம் கிடைக்காதவர்கள் குவிந்து கிடப்பார்கள்.campus interview-ல் இடம் கிடைக்கவில்லையெனில் பெங்களுருக்கோ,சென்னைக்கோ மூட்டை கட்டுங்கள்.
அதற்குமுன் அங்கு வேலை கிடைத்து அறிவுரைகளை அள்ளி வழங்கிகொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள்,seniors இருக்கும் முகவரியை தெரிந்து அவர்களுடன் Link போடுங்கள்.மூன்று வேலை சாப்பாட்டிற்கு உத்திரவாதத்துடன்
உங்களுக்கு நேர்முக தேர்வு நடக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உறுதி.படிப்பு முடித்து ஒரு வருடத்துக்குள் வேலை வாங்கிவிட வேண்டும். வருடம் ஒன்று கடந்துவிட்டால் அடுத்த வருடம்
உங்களை Freshers-க நிறுவனங்கள் ஏற்றுகொள்ளாது. அப்படிபட்ட சூழலில் நிறைய Fake experience முளைக்க துவங்கும்.முன்புபோல் இல்லை இப்பொழுது. 9/11-க்கு பிறகு நிறுவனங்கள்
உங்களை பற்றிய பின்புல தகவல்களை சேகரிக்க துவங்கிவிட்டது.  நீங்கள் படித்த பால்வாடி பள்ளியிலும் விசாரிக்கும் அளவிற்க்கு கீழிறங்கி விட்டார்கள்.அது மட்டுமல்லாது இப்போழுது ஒரு
மைய தகவல் களஞ்சியமும்(Centralised database) தயாராகி வருகிறது. அதன்படி நீங்கள் ஒரு நிறுவனத்தில் போலி சான்றிதழ் காட்டியதற்காக பிடிபட்டிற்களானால் உடனே அத்தகவல் இந்த தகவல் களஞ்சியத்தில்
ஏற்றப்படும். அதன்பிறகு  நீங்கள் வேலை வாங்குவது கனவுதான்! கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நேர் வழியில் செல்வதுதான் உத்தமம்!
இந்த போலி சான்றிதழ்கள் பற்றிய நிறுவன ‘தலைகளின்’ உறுமலுக்கு பயந்துகொள்ளும் அதே நேரத்தில் அவர்கள் அவர்கள் பக்கம் இருக்கும் சில அநியாங்களை பார்ப்போம்.
2000/2001-ல் recession வந்தபொழுது பல மென்பொருள் கூலிக்காரர்கள் வேலை இழந்தார்கள்.அதற்கு இந்த நிறுவனங்களே தலைமை தாங்கின. இலாபத்தை கொஞ்சமாக பிய்த்து தரும் நிறுவனங்கள்
 நஷ்டத்தில் உங்களை நட்டாத்தில் இறக்கிவிட்ட அவலம் அப்பொழுது நிகழ்ந்தது.அந்த இரு வருடங்களில் பெரிதாக எந்த  நேர்முக தேர்வும் நிகழவில்லை. அந்த வருடத்தில் கல்லூரி முடித்தவர்கள்
 போலி முன்னனுபவம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஏன் எனில் பணிக்காலத்திலோ படிப்பு காலத்திலோ இடைவெளி இருந்தால் உங்கள் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படாது.
இந்த நிறுவனங்களை கட்டிபோடும் சட்டங்களோ,அரசியல் தலைமையோ நம் நாட்டில் இல்லை.Labour Law இவர்களை கட்டுப்படுத்தாது.கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அன்பே சிவம் படத்தில்
கமல் சொல்வது போல் “அவன் தூக்கி போடற எலும்பு துண்ட தூக்கிட்டு வாலாட்டுகின்ற” நாய்கள் மட்டுமே நாம்.recession  மீண்டும் வராது என்று சொல்வதற்கில்லை.எப்பொழுது வேண்டுமானாலும்
வரும். நீங்கள் அனுபவசாலியாகும்போது உங்கள் நிறுவனத்தை நீங்களெ தெரிவு செய்யும் உரிமம் உங்களிடம் வழங்கப்படும். அப்பொழுது காற்றுள்ளபோதே தூற்றிகொள்ளுங்கள்!

Advertisements
 

2 Responses to “கற்றது கணிப்பொறியியல்(3)”

  1. sivaakumar Says:

    open interview ல் தேர்வாவது பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
    உங்களால் முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் ஒரு பிளாக் தொடங்கியிருக்கிறேன். தேடுபொறியில் தேடினால் பட்டியலிடப்படுவதில்லை. தேடுபொறியில் பட்டியலிடப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் கொடுத்தேன். வேறு என்ன செய்வது?

  2. campus interview-ல் சொல்லிருப்பதெல்லாம் open interviewkum பொருந்தும் உங்களுடன் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையை தவிர. நீங்கள் முன் அனுபவமுள்ளவரானால் வேலை வீடு தேடி வரும். சொல்ல எதுவுமில்லை.
    இந்த பட்டியலிடுவதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதுங்கோ….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s