தடங்கள்

மழைகழுவிய இலையில் ஜூலை 30, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:50 முப

மழைகழுவிய இலையில்
பனித்துளியாக உருக்கொண்டு
மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து
அதனுள் இறங்கி நின்றாய்
ஒரு தேவதைகுட்டியென
நீ ஜனித்த இந்த நாளில்தான்
என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது!

சுற்றியெனை வட்டமிட்டு
சுருக்கியென்னுலகை அதனுள்
மணல்வீடுகட்டி குடியேற அழைத்தாய்!

தோளிற்குமேல் வளர்ந்து என்
தோழியானாய் நீ
எனது உணர்வுகளை
உனது உதடுகளால் மட்டும்
சிறப்பாக செதுக்கமுடிந்தது!

பின்னொரு மாலையில் தேம்பலுடன்
காதல்கணவன் கரம்பற்றி கடல்கடந்துசென்றுவிட்டாய்
நீ தண்ணீர் ஊற்றா
வாடிபோன ரோஜா செடிகளுடன் தினம் உன்
வரவை எதிர்பார்த்து பிரிய
மகளே நானும்!

Advertisements
 

4 Responses to “மழைகழுவிய இலையில்”

  1. அழகான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கவிதை. ஆழமாகவும் இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    நன்றி

  2. மிகவும் அழகான கவிதை!

    வாழ்த்துக்கள்! 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s