தடங்கள்

நீயா அவள் ஏப்ரல் 13, 2007

Filed under: bashakavithaigal — bashakavithaigal @ 7:57 முப

சீண்டலாய் நான்
தீண்டியபோது தாங்காமல்
தலைகவிழ்ந்து கேவினாயே
நீயா அவள் ?

நீயென்னை பார்ப்பதை
நான் பார்த்துவிட்டால்
வான் பார்ப்பாயே
நீயா அவள் ?

உன் கண்களின் ஊடுருவலில்
நான் நிலைதடுமாறி
வார்த்தைகளை தேடிதவிக்கையில்
கீழுதடு கடித்து
கிண்டலாய் சிரிப்பாயே
நீயா அவள் ?

எதார்த்தமாக இதழ்குவித்து
என்னை பார்க்கையில்
என் கன்னம் காட்டியபோது
முகம் சிவந்தாயே
நீயா அவள் ?

காலொடிந்து கட்டிலில்கிடக்க
கண்களில் குளம்கட்டி
உச்சந்தலை கோதி
உள்ளங்கை பற்றினாயே
நீயா அவள் ?

செல்போன் சிணுங்கலும்
தோள்சாய்ந்து காதலனிடம்
தெரிந்தவர் என்ற அறிமுகப்படுத்தலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
நூதனமாகத்தான் மாறிவிட்டாய்
ஆறாண்டு இடைவெளியில்
அடுத்த பிறவி எடுத்தாயோ ?

Advertisements
 

3 Responses to “நீயா அவள்”

  1. Nandha Says:

    //ஆறாண்டு இடைவெளியில்
    அடுத்த பிறவி எடுத்தாயோ ?//

    அருமையான வரிகள். கலக்கல் கவிதை. ரொம்ப அழகா சோகத்தை வெளிப்படுத்தி இருக்கீங்க.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s