தடங்கள்

நாம் இப்பொழுது…. பிப்ரவரி 6, 2007

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 7:40 பிப

என்ன செய்துகொண்டிருப்பாய் நீ
நீ நடந்த வீதிகளின்
ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் நினைவுகளை
நான் சேகரித்துகொண்டிருக்கும்பொழுது!

யாருடைய தோள்களில்
நீ சாய்ந்திருப்பாய்
“என் மனம்,மெய்,உயிரெல்லாம் நீயெ” என
தொடங்கும் உன் பழைய கவிதை படிக்கும்பொழுது!

எந்த குடையின் கீழ்
ஒதுங்கியிருப்பாய்
யாருமற்ற பாலையில்
தொடர்ந்து விழும் சாரல்
உன் நினைவை என்மேல்
தௌ¤க்கும்பொழுது!

புணர்ச்சியின் எத்தனையாவது
தளத்தில் நீ நிற்பாய்
காமம் தலைக்கேறி நான்
கட்டிய மனைவியின்
கரம் பற்றும்பொழுது!

உன் குழந்தைக்கு என்ன
கதை நீ சொல்லிகொண்டிருப்பாய்
கானல் நீரான நம் காதலை
என் ஒரு மாத குழந்தைக்கு சொல்கையில்!

Advertisements
 

8 Responses to “நாம் இப்பொழுது….”

 1. […] February 19th, 2007 — Priya நாம் இப்பொழுது…. « தடங்கள் Posted in கவிதைகள், நான் […]

 2. அருமையான வார்த்தை புள்ளிகளால் நிதர்சனமான கவிதை கோலம்.நன்று தொடருங்கள்

 3. K.Gnaniyar Says:

  கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது பாஷா…. வாசிக்கும்பொழுது மெல்லிய சோகம் வந்து படருகிறது இதயத்தில்.

 4. […] தடங்கள் நாம் இப்பொழுது…. « தடங்கள் […]

 5. mahatmamani Says:

  கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது

 6. //கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது
  Thanx


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s