தடங்கள்

பாட்டி திசெம்பர் 4, 2006

Filed under: கவிதைகள் — bashakavithaigal @ 11:19 முப

சாணி மெழுகிய
பழுப்பு நிற தரை
குளிர்கால சிவப்பு நிற
ஓடுகள்
கோடைகால வெள்ளை
ஆஸ்பெஸ்டாஸ் வெப்பம்
தேள் ஒழுகும் கூரை
பல முகங்கள்கொண்டது
பாட்டியின் வீடுகள்!

‘பன்னி குட்டிபோட்டமாதிரி
பத்து பெத்தேண்டா
அத்தனையும் தாசில்தார்
டீச்சருன்னு இருக்குக’
மழை ஒழுகும் கூரையினடியிலமர்ந்து
திரண்ட சீம்பாலை ஊட்டிவிடும்
பாட்டியின் வார்த்தைகள்
அர்த்தம் பொதிந்தவை!

கூனிதடுமாறி இரண்டு தெருக்கள் கடந்து
பனியாரம் வாங்கி
சுருக்குபையில் பத்திரப்படுத்தி
நான்கு தெருகடந்து
பனியார வாசத்துடன்
தலைகோதி உறக்கம் கலைக்கும்
பாட்டியின் அன்பு
அங்கீகரிக்கப்படாதது!

முடியாத இறுதி சிலமாதங்களில்
உன் வீடு என் வீடென அலைக்கழிக்கப்பட்டு
குறுகலான சமையலறை மாடிப்படி இடுக்குகளுக்கிடையே
கால் நீட்டவும் வசதியின்றி
உயிர் நீத்த பாட்டியின் வலி
அறியப்படாதது!

அப்பாவும் பாட்டியும் ஒரே சமயத்தில்
உடல் நலமில்லாமலிருக்க
மரணம் தாங்கிய தந்தியை
பதட்டமாக பிரித்து
“பாட்டி……..!’ என்றடைந்த நிம்மதி
விசித்திரமானது!

– பாஷா

Advertisements
 

2 Responses to “பாட்டி”

 1. அப்பாவும் பாட்டியும் ஒரே சமயத்தில்
  உடல் நலமில்லாமலிருக்க
  மரணம் தாங்கிய தந்தியை
  பதட்டமாக பிரித்து
  “பாட்டி……..!’ என்றடைந்த நிம்மதி.

  இதுதான் யதார்த்தம்.
  வலிக்கும் உண்மைகள்.
  அறியப்படாத வலிகள் அம்மாக்களுக்ககும் அப்பாக்களுக்கும் உண்டு.

  குழந்தைகள் நலமா. பெரியவர்கள் சுகமா
  என்று போட்டி வரும்போது
  யாருமே ஜெயிப்பதில்லை.
  மனம் கலங்க வைக்கும் கவிதை.

 2. Thanx for ur comment.Yes Love becomes relative term from its well defined construct.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s