தடங்கள்

பிரிய தோழி ஜூலை 18, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 5:36 பிற்பகல்

என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி
இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை அலைகள்
இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய்
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
அதோ நம்சுவடுகள்
நடுக்கடலில் இறந்துகொண்டிருக்கிறது….

வேறு வழியின்றி பிரிவதாய் நீயும்
உன் சொல்கேட்பதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்
நட்பு….கொலைசெய்யபட்டதா ?
நட்பு….விபத்துக்குள்ளானதா ?
இல்லை….இல்லை அது
மனசாட்சி துறந்த மனங்களிலும் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்….

முகங்கள் முன் புன்னகைபோர்த்தி
இயல்புற்றிருப்பதாய் சுயம்மறைத்து,
நம் உரையாடல் நேரங்களில்
தொலைபேசி மறைத்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த,ஆறுதல்சொல்ல,ஆனந்தபட
அருகில் நீயிருப்பதாய் அவ்வப்போது சூன்யத்தில்
நானுன்னை விளிக்கவும் கூடும்….

எதுவெனினும் இன்றே இறுதி நாளென்பதால்,
சொற்கள் தீர்ந்துபோய்
உன் அழுகைகலந்த சம்மதம்கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மெளனத்தில் சொல்கிறேன்
போய் வருவோம்….என்
பிரிய தோழி!

 

வேறு என்ன செய்வது ஜூலை 18, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 5:33 பிற்பகல்

என்னிலிருந்து உன்னை
எடுத்தெறியத்தான் சொன்னாய்
எதை நான் எறிவேன் ?
உடலெல்லாம் உன் வர்ணம் பரப்பும்
உதிரத்தையா……
உன் குரல் கேட்டு
உரக்க ஒலிக்கும்
இதய துடிப்புகளையா……
உறக்கத்திலும் உன்பெயர்
உச்சரிக்கும் என் உதடுகளையா…
எதை நான் எறிவேன் ?

நெருப்பிலும் நிற்க துணிந்தமனம்
வெறுக்க உன்னை விடவில்லை
வடுக்களாய் என்னில் பதிந்துவிட்டாய்!

கண்களால் கைதுசெய்து
காதலிக்காத குற்றமும்செய்து உன்
நினைவுச் சிறையில்
நிரந்தரமாக என்னை
தள்ளிவிட்டாய்
இனி நான்
உன்பெயர் உச்சரித்து
சுவாசித்திருப்பதை தவிர
வேறு என்ன செய்வது ?

 

நேசிக்கிறேன் ஜூலை 18, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 5:27 பிற்பகல்

எறிந்த என் மெளனத்தை
எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது
இந்த அலைகள்!
மெளனத்தின் ஆழத்தில்
மெல்ல காதல் அழிந்ததாய்
கற்பிதம் கொண்டாலும் காற்றில்
முகம் உரசிப்போகும் உன்
முந்தானையில் மீண்டும்
உயிர்கொள்கிறது என் காதல்!

காதல் இல்லையென
அடுக்கடுக்காய் ஆயிரம் காரணங்கள்
அள்ளி தெளித்தாலும்
பிறந்த நாள் பாிசாய் எனக்களித்த
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
பதிந்து வைத்திருக்கிறாய்
உன் பெயரை மட்டுமல்ல
உன்னையும்!

உன்னவன் இவனென
உன் உதடுகள் உச்சாித்தபொழுது
நின்றுதான் போனது உன்னை
துரத்திகொண்டிருக்கும் என்
நிமிடங்கள்!
பின்
கரம் பற்றியவன்
காலடியில் கொட்டினேன்
தழும்பும் என் காதலை!
உன்னை மட்டுமல்ல
நீ நேசிக்குமெல்லாவற்றையும்
நானும் நேசிக்கிறேன்!

 

ஜூலை 18, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 4:57 பிற்பகல்

free counters

 

அழ‌குதான் வாழ்க்கை ஜூன் 13, 2009

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 7:06 பிற்பகல்

இன்று என் முழு
தாக‌ம் தீர்த்த‌து
உன் உத‌ட்டிலிருந்த‌
ஒரு துளி நீர்!
/********************************************************************/

பிற‌ந்த‌ நாள் உனக்கு
சிவ‌ப்பு நிற‌ சேலை சுற்றி
ப‌ரிசு த‌ந்தாய் என‌க்கு
உன்னை!

/********************************************************************/

போர்த்தும் ஒவ்வொரு முறையும்
அத‌ன் வாச‌த்தால் சொல்கிற‌து
எனக்கான‌ உன் பிரிய‌ங்களை
நீ துவைத்து கொடுத்த‌ என்
அழுக்கு போர்வை!

/********************************************************************/

க‌ட‌ல்ம‌ண‌ல் குவித்து
சிற்பிக‌ள் சுற்றி
‘என் காத‌ல் க‌ண‌வ‌னுக்கு’
என்றெழுதிய‌ த‌ட‌ம்
இன்றும் இருக்கிற‌து
என் இத‌ய‌ ஆழ‌த்தில்!

/********************************************************************/

அழ‌குதான் வாழ்க்கை நீ
அருகிலிருக்கும் நிமிட‌ங்க‌ளில்
அழ‌குதான் வாழ்க்கை நீ
தொலைந்த‌ க‌ண‌ங்க‌ளில்
உன்னைத் தேடும்
என் துடிப்பில்!

 

பிரிவு மே 2, 2009

கோப்பு வகை: கவிதைகள் — bashakavithaigal @ 10:36 மு.பகல்

lllll

ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ தெருவில்
த‌ழுவி ம‌றையும்
பிற்ப‌க‌ல் வெயிலாய்
அந்த‌ பிரிவு நிக‌ழ்ந்துவிட்ட‌து
பிரிவென்ப‌து ஒரு தொட‌க்க‌ம்
பிற‌கு ஒரு ச‌ட‌ங்கு
பிற‌கு ஒரு வ‌லி
பிற‌கு ஒரு மௌன‌ம்
பின்பு ஏதுமில்லை
விட்டு தொலைந்த‌
ம்று நாளில்
கூழாங்க‌ற்க‌ளின் நிற‌த்தை
தாங்கி செல்லும் ந‌தியாய் இருப்பேன்
என‌து திசைக‌ள் அந்த‌
க‌ற்க‌ளின் முக‌ங்க‌ளில் செதுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
பிரிதொரு நாள்
பிரிதொரு தெரு
பிரிதொரு வான‌ம்
இடைக்கால‌த்தில் அடைக்க‌ல‌ம் த‌ந்த‌வ‌ர்க‌ளே, த‌ந்த‌வைக‌ளே
ந‌ன்றிக‌ள் ப‌ல‌!!!!

 

IT-இம்சிக்கும் துறை பெப்ரவரி 22, 2009

கோப்பு வகை: கற்றது கணிப்பொறியிய — bashakavithaigal @ 9:46 மு.பகல்

இப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமை கூலிக‌ள் என்று.அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் நீங்க‌ள் நினைப்ப‌து போல் வாழ்க்கை ம‌ல‌ர் பாதையை அமைத்து த‌ர‌வில்லை. இழ‌ப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ த‌யாராக‌ இருந்தார்க‌ள். எளிய‌ உதார‌ண‌ம் காலை சூரிய‌ன்,அல்ல‌து ந‌ட்ச‌த்திர‌த்தை க‌டைசியாக‌ எப்பொழுது பார்த்தீர்க‌ள் என்று அவ‌ர்க‌ளை கேளுங்க‌ள் ம‌ல‌ங்க‌ ம‌ல‌ங்க‌ முழிப்பார்க‌ள்.அதுதான் அவ‌ர்க‌ள் வாழ்க்கை எப்போதும்.
இப்பொழுதுதான் அவ‌ர்க‌ளின் த‌ற்கொலை செய்தி த‌லைப்பு செய்தியாயிருக்க‌ வேண்டும்.இத‌ற்கு முன்பும் இப்படி நிக‌ழ்ந்திருக்கிற‌து ஆனால் அப்போது அவை செய்தியாக்க‌ப்ப‌ட்ட‌தில்லை. ந‌ல்லா உங்க‌ளுக்கு வேணும்டா என்று நீங்க‌ள் ஆன‌ந்த‌ப‌டும் நேர‌த்தில் அவ‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்துகொண்டிருக்கிறார்க‌ள் என்று பார்ப்போம்.

கேம்ப‌ஸில் அல்ல‌து ஒப்ப‌ன் இண்ட‌ர்வியுவில் கிடைத்து க‌ல‌ர் க‌ன‌வுக‌ளோடு வேலைக்கு செல்ல‌ காத்திருப்போர்,அமெரிக்க‌ க‌ன‌வுக‌ளோடு எம்ப‌ஸி வாச‌லில் காத்து இருப்போர்,ப‌த்து ஆப‌ர்க‌ளுட‌ன் அடுத்த‌ வேலைக்கு எக்க‌ச்ச‌க்க‌ ச‌ம்ப‌ள உய‌ர்வுட‌ன் இருப்போர்,டால‌ரில்,ப‌வுண்டில்,திர்ஹாமில் ச‌ம்பாதித்து கிட்ட‌த்த‌ட்ட‌ இந்திய‌ வாழ்க்கையை ம‌ற‌ந்தோர் என‌ ப‌ல‌ வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ இருந்த‌ இந்த‌ இன‌ம் இன்று
1) வேலை தேடுப‌வ‌ர்
2) வேலை இழ‌ந்து விர‌க்தியின் விளிம்பிலிருப்ப‌வ‌ர்
3) வேலை இழ‌ப்பு எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற‌ நிலையிலிருப்போர் என்ற‌ நிலையில் சுருங்கி விட்ட‌து.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வீட்டுக்க‌ட‌ன்,கார் க‌ட‌ன்,க‌ல்வி க‌ட‌ன்,இத‌ர‌ ப‌ல‌ க‌ட‌ன்க‌ளை வாங்கி க‌ட‌ன்கார‌ர்க‌ளாக‌ திணிக்க‌ப்ப‌ட்ட‌ கார்ப்ப‌ரேட் க‌லாச்சார‌த்தின் ப‌லி க‌டாக்க‌ளாக‌ அலைந்துகொண்டிருக்கிறார்க‌ள்.

இன்று ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ ப‌ல‌ குறுக்கு உபயாங்க‌ளை நிறுவ‌ன‌ங்க‌ள் கையாள‌ ஆர‌ம்பித்துவிட்ட‌ன‌.பத்து ந‌ப‌ர்க‌ள் பார்க்கும் வேலையை ஒருவ‌ருக்கு த‌ந்து ஒரு மாத‌ ப‌ணியை இரண்டு நாளில் முடிக்க‌ சொல்வ‌து,என்ன செய்வ‌து என்று சொல்லாம‌லேயே(உதார‌ண‌மாக‌ வெற்று காகித‌த்தை கொடுத்து) இதில் இருப்ப‌தையெல்லாம் முடித்து கொடுக்க‌ சொல்வ‌து,ரேட்டிங் என்று கொடுக்க‌ப்ப‌டும் வ‌ருடாந்திர‌ நிக‌ழ்வுக‌ளில் இந்த‌ வ‌ருடம் யாருக்கும் முத‌ல் ராங்க் இல்லை என்று முடிவு க‌ட்டுவ‌து இன்னும் மோச‌மாக‌ காஸ்ட் க‌ட்டிங் என்ற‌ பெய‌ரில் 7 ம‌ணிக்கு மேல் ஏசியை நிறுத்துவ‌து,லிப்ட்டை நிறுத்துவ‌து,க‌ழிப்ப‌றை காகித‌ங்க‌ளை முட‌க்குவ‌து என்று போய்கொண்டிருக்கிற‌து.

மேற்சொன்ன‌ செய‌ல்க‌ளால் மென்பொருள் துறையை துற‌க்க ப‌ல‌ர் த‌யாராகி வ‌ருகிறார்க‌ள்.குறிப்பாக‌ அர‌சாங்க‌ சம்ப‌ள உய‌ர்வுக்கு பின்னால் ச‌ம்பள‌ வித்தியாச‌ம் பெரும‌ள‌வு குறைந்து விட்ட‌து.ப‌ல‌ர் அர‌சாங்க‌த்தின் க‌த‌வுக‌ளை த‌ட்ட‌ ஆர‌ம்பித்துவிட்டார்க‌ள்.இன்னும் சில‌ர் வியாபாரம் செய்ய‌ உத்தேசித்துள்ளார்க‌ள்.பெண் வீட்டார் மென்பொருள் துறை என்றாலே காத‌ தூர‌ம் ஓடுகிறார்க‌ள்.

மாற்ற‌ம்தான் வாழ்க்கை.மாறுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்தான் தாக்குபிடிக்கிறார்க‌ள்.
ஆத‌லால்
1) ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டால் உங்க‌ளை குறைத்து ம‌திப்பிட்டுகொள்ளாதீர்க‌ள். உங்க‌ள் ஆற்ற‌லுக்கு அந்த‌ நிறுவ‌ன‌ம் ஏற்ற‌த‌ல்ல‌ என்று முடிவு செய்யுங்கள்.

2) ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ளை பார்த்து ந‌டுங்க‌ தேவையில்லை.சாப்ட்வேர் துறையில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா என்று ந‌கைச்சுவையாய் சொல்லி விடுங்க‌ள்.

3)சிக்க‌ன ந‌ட‌வ‌டிக்கையை கையாண்டு பெற்றோர்க‌ளின் ,உற‌வின‌ர்க‌ளின், ந‌ண்ப‌ர்க‌ளின் உத‌வியை கூச்ச‌மில்லாம‌ல் ஏற்றுகொள்ளுங்கள். ந‌ம‌து ச‌மூக‌ அமைப்பு ந‌ம்மை காப்பாற்றும்

4)உட‌ல் ந‌ல‌னை பேணுங்க‌ள் விட்டு போன‌ த‌னிப்ப‌ட்ட‌ வேலையை முடியுங்க‌ள்

5) அடுத்து என்ன‌ செய்ய‌லாம் என்று ஆலோச‌னை செய்யுங்க‌ள் இக்க‌ட்டான‌ சூழ‌லில் மீண்டு வ‌ருப‌வ‌ரே சாத‌னையாள‌ர்

ம‌றுப‌டி பொருளாதார‌ம் முன்னேறும் நிலையில் மென்பொருள் துறைக்கு ஆள் ப‌ற்றாக்குறை ஏற்ப‌டும். க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளால் ப‌ல‌ர் இத்துறைக்கு திரும்ப‌ வ‌ர‌ த‌யாராக‌ இருக்க‌ மாட்டார்க‌ள்.இப்பொழுது செய்யும் செய‌ல்க‌ளுக்கு மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் அத‌ற்கான‌ ப‌ல‌னை அடைந்தே தீரும்.2001 ல் இச்செய‌ல்க‌ளை செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும‌ள‌வு பின்ன‌ர் அடையாள‌ம் தெரியாம‌ல் அழிந்துவிட்ட‌து.வ‌ர‌லாறு மிக‌ முக்கிய‌ம் ம‌ங்குனி பாண்டிக‌ளே!!!!!!!

 

கோல‌ம் நவம்பர் 8, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 11:22 மு.பகல்

இன்னும் சில‌ நொடிக‌ளோ,
நிமிட‌ங்க‌ளோ,நாட்க‌ளோ
விமான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் ம‌க‌னுக்கோ
ப‌ள்ளி இறுதியாண்டு தேர்வு எழுதும் பேத்திக்கோ
இறுக்கி பிடித்து வைத்திருக்கும் உயிர்
செய‌ற்கை சுவாச‌ க‌ருவியினோடே
க‌சிந்துகொண்டிருக்கிற‌து….
வெறித்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழி பார்வையில்
நேற்று யாரோ இட்ட‌ க‌ல‌ர் கோல‌ம்
காற்றில் சிறிது சிறிதாக‌
க‌லைந்துகொண்டிருக்கிற‌து!

 

ஓட்டு செப்டம்பர் 20, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 3:36 மு.பகல்

அமெரிக்காவில் இது தேர்த‌ல் நேர‌ம். ம‌க்க‌ள் ஒபாமா,மெக்கெயினின் நிறை குறைக‌ளை அல‌சி யாருக்கு ஓட்டிடுவ‌து என்று ம‌ன‌த‌ள‌வில் த‌யாராகிகொண்டிருக்கிறார்க‌ள். ந‌ம் நாட்டில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து ந‌ட‌ந்த‌து என்று ஒப்பிட்டு பார்த்தால் அதிர்ச்சிதான் காத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல்வாதியை விடுங்க‌ள். ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளை விட‌ மோச‌மாக‌ போய்கொண்டிருக்கிறார்க‌ளோ என்றுதான் எண்ண‌ தோன்றுகிற‌து.

அந்த‌ க‌ட்சியில‌ எவ்வ‌ளவு த‌ராங்க‌. இந்த‌ க‌ட்சில‌ அவ‌ங்க‌ள் விட‌ நிறைய‌ த‌ராங்க‌ த‌விர‌ ஒரு குட‌ம் குத்துவிள‌க்கு கிடைக்குது என்று பாம‌ர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, க‌வ‌னிக்க‌வும் சில‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளும் நான்கு இல‌க்க‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்குப‌வ‌ர்க‌ளும் கூட‌ ஓட்டுக்கு விலை போய்கொண்டிருக்கிறார்க‌ள்.

ந‌ம்ம‌ட்ட‌ கொள்ளை அடிச்ச‌ காசுதானே என்று வில‌க்க‌ம் வேறு இதில்.

ப‌ண‌ம் த‌ந்து ஓட்டு வாங்க‌ துடிக்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளை விட‌ ப‌ண‌த்தை பெற்றுகொண்டு ஓட்டு போட‌ துடிக்கும் இவ‌ர்க‌ளின் அறியாமை மிக‌ மிக‌ ஆப‌த்தான‌து.

500 ரூபாயும் பிரியாணியும் ஒரு நாள் வாங்கினால் அடுத்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு அல்வாதான் என்று இந்த‌ ப‌டித்த‌ முட்டாள்க‌ளுக்கு கூட‌வா தெரிவ‌தில்லை.

உங்க‌ளுக்காக‌ உழைக்க‌ ஆசைப்ப‌டுகிறேன் காசு வாங்கிட்டு பிரியாணி சாப்பிட்டு என‌க்கே ஓட்டு போடுங்கோ என்றால் எப்ப‌டி ந‌ம்புகிறார்க‌ள்.

யாராவ‌து கோழி திங்க‌ கூலி த‌ருவானா??????????

500 ரூபாய் குடுத்து ஓட்டு வாங்குப‌வ‌ர்க‌ள் உங்க‌ள் வ‌ரிப்ப‌ண‌த்திலோ அல்ல‌து உங்களுக்கு நியாயமாக‌ கிடைக்க‌ வேண்டிய‌ ந‌ல்ல‌ ரோடு,குடி நீர் போன்ற‌ அடிப்ப‌டை தேவைக்கு ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ நிதியிலிருந்து த‌லைக்கு ஐயாயிர‌ம் ஆட்டைய‌ போட்டா…………!!!!!!!!!!

ஒரு விஷ‌ய‌த்தில‌ ந‌ம்ம‌ ம‌க்க‌ள் நேர்மையான‌வ‌ங்க‌!!!!!… எந்த‌ க‌ட்சிட்ட‌ ப‌ண‌ம் வாங்க‌றாங்க‌ளோ அவ‌ங்க‌ளுக்கு க‌ரெக்ட்டா ஓட்டு போட்டுறாங்க‌.பெரும்பாலும் ஏமாற்றுவ‌தில்லை.

முக‌ம்ம‌து பின் துக்ள‌க் ப‌ட‌த்தில் சோ சொல்வ‌து போல்

“ம‌க்க‌ள்!!! ம‌டைய‌ர்க‌ள்” என்றுதான் சொல்ல‌ வேண்டியிருக்கிற‌து

 

க‌விதை மே 31, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 10:34 மு.பகல்

இந்த‌ முறை
உன‌க்கும் என‌க்குமான இடைவெளி நிர‌ப்ப‌
க‌விதை இல்லை என்னிட‌ம்
நீ ந‌ட‌க்கும் பாதையில்
க‌ல்ல‌றைக‌ளாய் அது நிர‌ம்பியிருக்க‌லாம்!
********************************
தின‌ம் தொட‌ரும் ந‌ம் த‌ர்க்க‌ங்க‌ளின் முடிவில்
உன்னிட‌ம் மிச்ச‌மிருப்ப‌து என் இத‌யம் தின்று
குதூக‌லிக்கும் உன் குருர‌ புன்ன‌கையும்
என்னிட‌ம் மிச்ச‌மிருப்ப‌து உன்னைப் பற்றிய‌
ஒரு சில‌ க‌விதைக‌ளும்.
ந‌ம்மிட‌ம் தொலைந்தே போன‌து
அலைக‌ட‌லில் சிப்பிக‌ளாய் சேக‌ரித்திருந்த‌
நம் காத‌ல்!
********************************
என்
திசைக‌ளாவும் முடிந்திருந்த‌து
உன் விர‌ல் தொடும் ஒரு புள்ளியில்
வெடித்த‌ புள்ளியின் விளிம்பில்
வ‌ழிந்தோடுகிற‌து என் வான‌ம்!

 

********************************
சிலுவையாய்
உன்னை சும‌ந்து செல்கிற‌து
என் க‌விதை.
சும‌ப்ப‌தால் கருணை வ‌ழியும்
கர்த்த‌ராய் உய‌ரத்தில் நிற்கிற‌து
********************************