ஒரு இரகசியம் உடைபடும்போது
பிளவுப்பட்ட மலைகளுக்கிடையேயான
நாம் பயணிக்க முடியாத
… சாலை உருவாகி விடுகிறது
கருமை கவிழ்ந்த இடுக்குகளில்
வழியும் அதன் துயர தனிமைகள்
உனக்கு எனக்கும்
வெவ்வேறு நிறம் கொண்டவை
யாவரும் பயணித்து உறங்கும்
நிலா இரவுகளில்
நிழல்கள் மோதும் சாலையில்
பங்கிடப்படும் இரகசியங்கள்
கருஇருளில் பெருந்துளையில்
ஈர்க்கப்பட்டிருக்க கூடும்!