
ஆளரவமற்ற தெருவில்
தழுவி மறையும்
பிற்பகல் வெயிலாய்
அந்த பிரிவு நிகழ்ந்துவிட்டது
பிரிவென்பது ஒரு தொடக்கம்
பிறகு ஒரு சடங்கு
பிறகு ஒரு வலி
பிறகு ஒரு மௌனம்
பின்பு ஏதுமில்லை
விட்டு தொலைந்த
ம்று நாளில்
கூழாங்கற்களின் நிறத்தை
தாங்கி செல்லும் நதியாய் இருப்பேன்
எனது திசைகள் அந்த
கற்களின் முகங்களில் செதுக்கப்பட்டிருக்கும்.
பிரிதொரு நாள்
பிரிதொரு தெரு
பிரிதொரு வானம்
இடைக்காலத்தில் அடைக்கலம் தந்தவர்களே, தந்தவைகளே
நன்றிகள் பல!!!!