
இன்று
முதல் முறையல்ல
எண்ணிக்கை முடிந்து வழியும்
ஒரு மாலையில் மீண்டும்
நடத்தி விட்டாய்.
விவாத முடிவில் தொடங்கும்
நீண்ட மௌனத்தில்
இறந்து போயிருந்தாய்
நாளை மீண்டுமொருமுறை
உன்னை உயிர்பிப்பதாய்
உன் திசைகள் தேடத் துவங்குவேன்
தொடரும் இந்த விளையாட்டை
தின்று நீ ஜீவித்திருக்கிறாய்
விளையாட்டை விட்டு விலகும்
என் தார்மீக உரிமையை
என் பேரன்பு கடல் ஒளிக்க
அதன் அடி ஆழத்தில்
தொலைந்தே போகிறேன்
//என் பேரன்பு கடல் ஒளிக்க
அதன் அடி ஆழத்தில்//
இதுல “ஒளிக்க” என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லவற்றீங்க!