இறுக்கி அனணத்து
இதழ் இணைத்தாய்
நம்முள் நிரம்பியது
நம் உயிர்!
/*****************************************************************************/
“ம்மியாவ்…ம்மியாவ் பூனேக்குட்டி…”
குழந்தையை கொஞ்சுகிறாய்.
குழந்தையாய் உன்னருகில்
நான்!
/*****************************************************************************/
ஒரு குளிர் இரவில்
நட்சத்திரங்கள் பதித்த
கருவானம் போர்த்திய
மொட்டை மாடியில்
நீண்ட மின்வெட்டென
சுவற்றின் அந்த
முனையில் நீயும்
இந்த முனையில் நானும்
வானம் பார்த்து அமர்ந்திருந்தோம்
அருகிலிருந்த ஒற்றை நட்சத்திரம்
நம்மை பார்த்து
கண் சிமிட்டியது!
/*****************************************************************************/
நீ
நம்மை பிரிக்கும் எந்த
பாதைகளின் திருப்பங்களிலும்
என்னைப் பார்க்கும் பொருட்டு
திரும்பியதில்லை
நான்
நம்மை பிரித்த திருப்பங்களில்
தென்படுவாயென திரும்ப திரும்ப
திரும்பிகொண்டிருக்கிறேன்!
*****************************************************************************/
இறுக்கி அனணத்து
இதழ் இணைத்தாய்
நம்முள் நிரம்பியது
நம் உயிர்!
எவ்ளோ பெரிய விஷ்யம்
நான்
நம்மை பிரித்த திருப்பங்களில்
தென்படுவாயென திரும்ப திரும்ப
திரும்பிகொண்டிருக்கிறேன்!
ம்ஹூம்
வணக்கம்
\\
நம்மை பிரிக்கும் எந்த
பாதைகளின் திருப்பங்களிலும்
என்னைப் பார்க்கும் பொருட்டு
திரும்பியதில்லை
நான்
நம்மை பிரித்த திருப்பங்களில்
தென்படுவாயென திரும்ப திரும்ப
திரும்பிகொண்டிருக்கிறேன்!
\\
நல்லாத்தான் இருக்கு ம்ம்ம்ம்
தொடருங்கள்
நன்றி