மென்பொருள் துறையென்றாலே கை நிறைய சம்பளம்,கலக்கலான வாழ்க்கை,வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.அதில் மூன்றாவதான இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிஜங்களை தரிசிப்போம். உங்களுக்காக வேலை செய்கிறோம் எனக்கொரு வாய்ப்பை கொடுங்கள் என்று நமக்காகவே உழைக்க துடிக்கும்(!!!!!!!!) அரசியல்வாதியை நம்புகிறீர்களா அப்படியானால் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்று அன்பாக,வெளி நாட்டு வேலை வாய்ப்பு இல்லையென்றால் இராஜினமா என்று அராஜகமாக கேட்கும் மென்பொருள் துறை நிபுணர்களையும் நம்பிதானாக வேண்டும்.இது இந்திய கம்பெனிகள் மூலம் செல்லுபவர்கள். கன்சல்டென்ட் எனப்படும் ஆட்கள் மூலம் போகும் கூட்டம் ஒரு பக்கம்.
டாலர் கனவு … இது மட்டுமே கணக்கு.
பெரும்பாலான வேலை வாய்ப்புகள் அமெரிக்கா சார்ந்தவை. முதலில் B1,H1B,L1 tஹிஉச் இது மாதிரி ஏதாவது ஒரு விசா வாங்க வேண்டும். அதை வாங்க சென்னையின் பட்ட பகல் வெயிலில் கோட்டு,டை எல்லாம் போட்டு நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்மான வரிசையில் கோமாளி மாதிரி நின்று உள்ளே சென்று மனப்பாடம் செய்து வைத்த பதில்களை கடகடவென ஒப்பிக்க வேண்டும். சிறிது இடறினாலும் விசா நிராகரிக்கப்படும்.
விசா வாங்கியாகி விட்டது. இப்பொழுது பறக்க தயார். டிக்கெட் எடுப்பதற்கு என்றே தனி துறை பெரும்பாலான நிறுவனங்களில் இயங்கும். அவர்கள் பணியே பல ஆராய்ச்சிகள் செய்து மிகவும் குறைந்த விலையிலான டிக்கெட் எடுத்து உங்களை அனுப்புவது. கொஞ்சம் உஷாராக இல்லையென்றால் கட்டை வண்டியிலும் உங்களை அனுப்பி விடுவார்கள். உதாரணத்திற்கு மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல பயண சீட்டு கேட்பதாக கொள்வோம். ம்துரை >>>>>> கொச்சி
கொச்சி >>>>>> கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் >>>>> கொல்கத்தா
கொல்கத்தா >>>>> சென்னை
என்று மாறி மாறி பயணம் செய்ய டிக்கெட் எடுத்து தருவார்கள். என்ன தலை சுற்றுகிறதா? இந்த சுற்று சுற்றினாம் தலை சுற்றாமல் என்ன செய்யும்? இந்தியாவுக்குள்ளேயே இந்த மாதிரி சுற்ற தலை சுற்றுகிறதென்றால் உலகம் முழுவதும் சுற்றி அமெரிக்கா செல்ல? அமெரிக்க பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆசியா அரேபிய ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை கடக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்க,ஆஸ்திரேலிய கண்டங்களை விட்டுவிட்டார்களா என்ன? நல்ல வேளையாக ஆர்ட்டிக் கண்டத்தில் சர்வதேச விமான நிலையம் இருப்பதாக தெரியவில்லை.
இப்படியாக உலகம் சுற்றி டாலர் தேசம் எட்டி விட்டீர்கள். இந்திய கம்பெனிகள் மூலம் இங்கு வாங்கும் சம்பளமென்னமோ இந்தியாவில் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்குக்கும் மேல்தான். ஆனால் செலவு போக சேமிப்பு? சில ஆயிரங்களேயென பல நண்பர்கள் சொல்ல கேள்வி. அப்படியானால் அமெரிக்கா ஏன் செல்ல வேண்டும்? இது தவிர பெரும்பாலான இந்திய கணவர்கள் குழந்தை பெற்றுகொள்ள எல்லா வித ஏற்பாடுகளுடன் தங்கள் மனைவியை அழைத்து வருகிறார்கள். அமெரிக்க குடிமகன் அந்தஸ்து கிட்ட. ஒரு உறவினர் திருமண பத்திரிகையில் தங்கள் நல் வ்ரவை விரும்பும் என்று குழந்தை பெயர் போட்டு அடைப்பு குறிக்குள் அமெரிக்கன் என்று குறிப்பு வேறு.
எனக்கு சில கேள்விகள் எழுகிறது. யாரேனும் அமெரிக்க இந்தியர்கள் பதில் தாருங்கள்
1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?
2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?
3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?
4)அமெரிக்கர்காவில் டாலர் சம்பாரிக்க செல்லும் நாம் அவர்களிடமிருக்கும் நல்ல பழக்கங்களை இந்தியா வந்தால் கடை பிடிக்கிறோமா? உதாரணம் வழிப்போக்கர்களாக இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்னகை.
5)மனைவி மக்கள் கூட இருக்கிறார்கள் வேறு என்ன வேண்டும் என்பவர்களுக்கு மனைவி மக்கள் என்ற சிறு வட்டத்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்டதா?
//எனக்கு சில கேள்விகள் எழுகிறது. யாரேனும் அமெரிக்க இந்தியர்கள் பதில் தாருங்கள்//
சுருக்கமாக பதில் சொல்லவேண்டும் என்றால், சில/பல ஆயிரம் ரூபாய் அதிக சம்பளத்திற்காக இங்கே வருவதை விட இந்தியாவில் இருப்பதே மேல். ஆனால் இதை யாரும் இந்தியாவில் இருக்கும் போது புரிந்துகொள்ளமாட்டார்கள். அமெரிக்கா வந்து 3 மாதம் கழித்துத்தான் புரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை….அவ்வளவுதான்.
People who like America doensn’t stay here only for money. There is more which money can’t buy.
1. The quality of life which attracts people.
2. Pound, Kuwaith Currency are def. higher but the freedom in america, like you can own a house, car, treated well (ofcourse there minor exceptions) in organizations
3. People do practice those good manners everywhere. But Indiavula vandha seiya mudiyarathu illae, because aduthavan udanae muraipan, ivan edhukuda nammalai parthu sirikaranu..
4. Lot of cultural activities takes place in US, which gives more exposure than back home. How many times people would have attended a tamil related dance / drama / music programme @ chennai.
Ingae vara mudiyamal, or vandhalum 3 maasam, 6 maasathula thirumbi pogarama madiri irukaravangaluku than kashtam and they spread the news as US life is horrible.
Kids are also well brought up, (that depends on parents).
//ஒரு உறவினர் திருமண பத்திரிகையில் தங்கள் நல் வ்ரவை விரும்பும் என்று குழந்தை பெயர் போட்டு அடைப்பு குறிக்குள் அமெரிக்கன் என்று குறிப்பு வேறு.//
கேவலமா இருக்கு. ஆர்வக்கோளாறுன்னு நெனக்கிறேன்.
//
எனக்கு சில கேள்விகள் எழுகிறது. யாரேனும் அமெரிக்க இந்தியர்கள் பதில் தாருங்கள்
1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?
//
No my dear. ஒரு துவக்க நிலை பொறியாளர் இந்தியாவில் சேமிப்பதைவிட 3 மடங்காவது அதிகம் சேமிக்கலாம்; சரியான சம்பள பேக்கேஜுடன், மணமாகாமல் இருக்கும்போது, 2/3 பேர் வீடு எடுத்து தங்கும்போது.
திருமணமாகி, ஒரு 10 வருஷம் அனுபவம் உள்ளவர்கள் வாங்கும் ஊதியத்தில்;சேமிப்பில் அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் அதிக வேறுபாடில்லை.
// 2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?
//
Social security, less US educational expenses in future.
//
3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?
//
Cost of living, condition of living is much better in US.
//
4)அமெரிக்கர்காவில் டாலர் சம்பாரிக்க செல்லும் நாம் அவர்களிடமிருக்கும் நல்ல பழக்கங்களை இந்தியா வந்தால் கடை பிடிக்கிறோமா? உதாரணம் வழிப்போக்கர்களாக இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்னகை.
//
எதிர்வீட்டு இளம்பெண்ணைப் பார்த்துப் புன்னகையுங்கள். தேரியும் சேதி!
எதெது நடைமுறைக்குச் சாத்தியமோ, அதைப் பின்பற்ற வேண்டும். காட்டாக, குப்பையை குப்பைத்தொட்டியில் போடுதல், சாலை விதிகளை மதித்தல் போன்றவை.
//
5)மனைவி மக்கள் கூட இருக்கிறார்கள் வேறு என்ன வேண்டும் என்பவர்களுக்கு மனைவி மக்கள் என்ற சிறு வட்டத்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்டதா?
//
இது, உறவினர்களை விட்டும் பிரிந்திருக்கும் எந்தக் குடும்பத்துக்கும் பொருந்தும். தொலைவு அதிகரிக்க இடைவெளியும் அதிகரிக்கும்.
//1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?//
15 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கை. ஆதலினால் சில ஆயிரம் வித்தியாசம் அல்ல. பல ஆயிரங்கள். இழந்ததும் ஏராளம்! பெற்றதும் ஏராளம்!!
//2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?//
கேள்வியே தவறு. குழந்தை பெற்ற பின்பு நாடு திரும்புவோர் நிறைய! மேலும் எங்கும் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை பெறுவதில் போராட்டம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
//3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?//
அமெரிக்கர்களே மெனக்கெட்டு மேற்கூறிய நாடுகளில் இருந்து பராரிகளாய் குடியேறியவர்கள் என்பது வரலாறு. நம்மவர்கள் குடியேறுவது கல்வியின் பயனாய் நண்பரே! குவைத்தே அமெரிக்காவின் புறக்கொல்லை தானே!
//4)அமெரிக்கர்காவில் டாலர் சம்பாரிக்க செல்லும் நாம் அவர்களிடமிருக்கும் நல்ல பழக்கங்களை இந்தியா வந்தால் கடை பிடிக்கிறோமா? உதாரணம் வழிப்போக்கர்களாக இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்னகை.//
தமிழ்ப் பண்பாடு முதலில் காப்போம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதும் தமிழ்ப் பண்பாடு தானே?!
//5)மனைவி மக்கள் கூட இருக்கிறார்கள் வேறு என்ன வேண்டும் என்பவர்களுக்கு மனைவி மக்கள் என்ற சிறு வட்டத்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்டதா?//
புலம் பெயர்ந்தும் தாய் மண்ணை நேசிப்பது தமிழனின் சிறப்பு. தாய் மண்ணில் தமிழை, தமிழ் பண்பாட்டை குலைப்பது தமிழனின் இகழ்வு நண்பா. யூதனாய் இருக்கப்பார். நீ முன்னேறுவாய். உன் இனம் முன்னேரும்.
>>People who like America doensn’t stay here only for >>money. There is more which money can’t buy.
Thanx for sharing your thoughts.
I don’ t agree with you 100%.. May be some of what you say could be true.. but every indivual will have different opinion and i respect yours…
There are lots of good things which you have here . I guess you missed to observe it…. I don’t know where you are right now.. try to look at things without pre-judgement… that is just look at thing as is… you will see lots of good things… Ofcourse you will see lot of bad things as well… My sincere advise is (it hold true for any place you are in) .. just follow the supermarket approach.. you need not buy everything in supermarket… just pick up things you want/like.. leave the rest.. may be somebody else likes that which you didn’t like… after all people are different…
One thing ppl talk always when ever they leave the country.. they are missing there family…. do they really mean it… How many of IT people have their parent with them in chennai/banglore (here i am asking abt ppl who are from other cities not natives of chennai/bangalore) … How many times they visit there home (after marrige..) or talk to thier parent on daily basis… Do you really work 40 hours a week in india?? You need not answer any of these question.. just ask yourself and be honest…
What i said above are just my point of view.. most ppl may / may not agree… after all people are different ….
anyways.. good luck to you all…
>>>There are lots of good things hich you have here . I guess you missed to observe it
This is my experience ….ofcourse i agree there are lot good things in america. am not saying america is bad. i just want to convey the generic perception
வருகை தந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ள அனைவருக்கும் நன்றி
1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?
Pollution, Traffic, Number of hours spent in office
Based on my experience, in a good development project, you need to be at office till 9PM atleast.
No quality life for S/W engineers.
2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?
We have dual citizenship. We get best of both worlds.
3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?
Value of American dollars will go up in two or three years. What they need is a good leadership.
VV
பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?
This is a wrong concept. In kuwait and all other countries, even though you are earning double or triple in america, u can’t own a land or house. u can’t practice ur belife freely.you have to earn and go back to ur motherland. but in america the situation is not like that. and for your information even lot of americans, british nurses, doctors, militry personals are staying in arab countries. Even british styed in India for a long time before freedom to mearly occure wealth and loot indians.
>>>> இக்கரைக்கு அக்கரை பச்சை….அவ்வளவுதான்
நன்றி ராஜா….சரியா சொன்னீங்க
>>No my dear. ஒரு துவக்க நிலை பொறியாளர் >>இந்தியாவில் சேமிப்பதைவிட 3 மடங்காவது >>அதிகம் சேமிக்கலாம்
துவக்க நிலையிலேயே எல்லோருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைத்து விடுவதில்லையே….எனினும் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி
>>தமிழ்ப் பண்பாடு முதலில் காப்போம். திரைகடல் >>ஓடியும் திரவியம் தேடு என்பதும் தமிழ்ப் பண்பாடு >>தானே
திரவியம் தேடி பின் திரும்பி விடு என்று சொல்லவில்லையோ -:)
>>We have dual citizenship. We get best of both worlds
காற்றுள்ள பக்கம் சேர்ந்துக்கலாம்…….வருகைக்கு மிக்க நன்றி
>>> u can’t practice ur belife freely.you have to earn and go back to ur motherland. but in america the situation is not like that
u meant to say not money quality of life.that makes america a dream world.anyways thanx for your input
மேலோட்டமாக ஓரிரு வரிகளில் விடை காணக்கூடிய கேள்விகளல்ல இவை. எனினும்… என் அனுபவத்தில்…
//1) சில ஆயிர சம்பள வித்தியாசங்களுக்காக நீங்கள் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை?//
பணத்துக்காக மட்டும் வெளிநாடு செல்வதாக இருந்தால் அதற்கு வளைகுடா நாடுகள்தான் சரி. இங்கே வருபவர்கள் பணத்திற்காக மட்டும் வருவதில்லை.
// 2) இந்திய சூழலில் கற்ற இந்தியர்கள் அமெரிக்காவின் பெரும் வேலைகளை செய்யும் திறம் மிக்கவர்களாக இருக்கும்போது குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வாங்க ஏன் இந்த போராட்டம்?//
எனக்கு இதில் அனுபவமில்லையாதலால் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போட்டு இங்கே வந்து பெற்றுக்கொள்ளவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் இரண்டு பெற்றும், இங்கே மூன்றாவதைப் பெற்றுக்கொண்ட நபர்களையும் சந்தித்திருக்கிறேன்.
//3) பவுண்டு டாலரை விட இரு மடங்கு மதிப்பு மிக்கது,குவைத் பணம் டாலரை விட ஐந்து மடங்கு மதிப்பு மிக்கது. இதையெல்லாம் சம்பாரிக்க அமெரிக்கர்கள் நம்மை போல மெனக்கிடுகிறார்களா?//
Of course, they do. தோலுரியும் வெயிலையும் பொருட்படுத்தாது, பணத்திற்காக வளைகுடா நாடுகளில் வந்து குடும்பத்துடன் தங்கி பணிபுரியும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இலட்சக்கணக்கில்!
//4)அமெரிக்கர்காவில் டாலர் சம்பாரிக்க செல்லும் நாம் அவர்களிடமிருக்கும் நல்ல பழக்கங்களை இந்தியா வந்தால் கடை பிடிக்கிறோமா? உதாரணம் வழிப்போக்கர்களாக இருந்தாலும் செய்யும் ஒரு சிறு புன்னகை.//
என்னைப் பொருத்தவரை கட்டாயம் கடைபிடிக்கிறேன். சாலையில் துப்பாமல், குப்பை கொட்டாமல் – எல்லாவற்றுக்கும் மேலாக, முன்பெல்லாம் taken for granted ஆக எடுத்துக்கொண்ட பல விஷயங்களையெல்லாம் இப்போது மதித்துச் சரியாகக் கையாளத் தெரிகிறது என்று கடைபிடிக்க முடிகிறது!
//5)மனைவி மக்கள் கூட இருக்கிறார்கள் வேறு என்ன வேண்டும் என்பவர்களுக்கு மனைவி மக்கள் என்ற சிறு வட்டத்துக்குள் வாழ்க்கை சுருண்டு விட்டதா?//
இல்லவே இல்லை!
இந்தியாவிலிருந்து நேரடியாக இங்கு (முதன் முதலாக வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு) வரும் இந்தியர்களின் பழக்கவழக்கங்களுக்கும், பல வெளிநாடுகளில் ஏற்கெனவே வேலைசெய்துவிட்டு பின்பு இங்கு வந்து பணிபுரியும் இந்தியர்களுக்கும், இங்கே பத்து பதினைந்து வருடங்கள் இருந்துவிட்டு இந்தியா திரும்பிச் செட்டிலாகும் இந்தியர்களின் பழக்கவழக்கங்களையும், அனுபவங்களையும் வைத்து பெரிய நாவலே எழுத முடியும்! அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன!
சிந்தனையைத் தூண்டும் பதிவு – நன்றி.
>>. இங்கே வருபவர்கள் பணத்திற்காக மட்டும்
வருவதில்லை
வருகைக்கு நன்றி சுந்தர். பணத்திற்கு மேலாக வேறு இங்கு கிடைக்கிதென்றால் அதையும் ஆராய்வோம்
America is best….. we want best life and calm and rich life..that s all.. yes india spend money for our studies..we can give it back now…bce education is just business in india…don’t compare america with UK or kuwait or gulf…uk is ok….but gulf is waste fellows country.
>>>> we want best life and calm and rich life
oh…best life is calm and rich life. good to know about your perception.thanx for coming and give your feedback
வளைகுடா நாடுகள் வேஸ்ட்டுன்னு எழுதியிருக்கீங்க.எங்க பிள்ளைகள் மென்பொருள் பொறியாளர் இல்லிங்க. வளைகுடா நாடுகள் நல்ல சம்பளம் எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து சென்னையில் நல்ல வீடு எதிர்காலத்துல வாங்குற பொருளாதாரத்தைக் கொடுத்திருக்குங்க.அடிக்கடி எங்களை வந்து பார்க்கிறாங்க. அமெரிக்கா சொர்க்கமாக இருக்கலாம் ஆனால் வளைகுடா நடுகளின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் தவறாகக் கணக்குப் போடாதீங்க.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வழி முறை இருக்கு ,அதை ஏற்றுக்கொள்ளுவதே புத்திசாலித்தனம்!
அன்புடன்
கமலா
>>>வளைகுடா நாடுகள் வேஸ்ட்டுன்னு >>>எழுதியிருக்கீங்க.எங்க பிள்ளைகள் மென்பொருள் >>>பொறியாளர் இல்லிங்க. வளைகுடா நாடுகள் நல்ல >>>சம்பளம் எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து சென்னையில் நல்ல வீடு எதிர்காலத்துல வாங்குற >>>>பொருளாதாரத்தைக் கொடுத்திருக்குங்க
நான் அப்படி எழுதலிங்க…. நீங்க வேற யார் கருத்துக்கோ பதில் சொல்லியிருக்கீங்கனு நம்பறேன்.
சென்னையில நல்ல வீடு வாங்கற லட்சியம் மட்டும்தான் வாழ்க்கையா…..அதற்கு எத்தனை காலம் பிடிக்கும். அந்த போராட்டத்தில் இழப்பது என்னென்ன என்பது மட்டுமே என் பதிவின் நோக்கம்
மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாக, நண்பர் புடை சூழ வாழ்ந்தவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை போரடிக்கக் கூடும். மற்றபடி அமெரிக்காவில் வாழ்வதொன்றும் சாவான பாவமில்லை என்பது என் கணிப்பு.
( அமெரிக்காவுக்கு வந்த மூன்று – முதல் ஆறு மாதங்கள் இந்தியா தான் மேல், அமெரிக்கா போர் என சொல்லும் மக்களில் 99.9 விழுக்காடு பேஎர் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க வாழ்க்கை மேல் என ஐக்கியமாகி விடுவது தான் நடை முறை உண்மை. அதற்குக் காரணம் பணம் அல்ல !!! )
>>>அமெரிக்காவில் வாழ்வதொன்றும் சாவான >>>பாவமில்லை என்பது என் கணிப்பு.
>>>>அதற்குக் காரணம் பணம் அல்ல !!! )
ஆரம்ப கட்ட அமெரிக்க முயற்சிகளுக்கும் பணம் காரணமில்லை என்று சொல்கிறீர்களா?
பணத்தை தவிர வேறு என்ன கிடைக்கிறது என்று தெரிந்து மீண்டுமொரு பதிப்பில் சொல்கிறேன்
சென்னையில நல்ல வீடு வாங்கற லட்சியம் மட்டும்தான் வாழ்க்கையா…..அதற்கு எத்தனை காலம் பிடிக்கும். அந்த போராட்டத்தில் இழப்பது என்னென்ன என்பது மட்டுமே என் பதிவின் நோக்கம்
i have visited so many countries and mooved with people thr. they defly miss chennai. as somebody said as the persons who got good education in india are able to get good job in (according to u )the best country,do u mean to say they dont have any regrets ?
kamala
ஒரு கட்டத்திற்கு மேல் வெளிநாட்டில் வாழ்பவர்கள், தங்கள் பழைய இளமைக்கால இந்தியவாழ்க்கையை நினைவு கூறும் போது, நாம் இழந்தவைகள் காட்சிகளாக கண்முன் விரியும். அப்போது தெரியும் நாம் என்னென்வெல்லாம் பெற்றிருக்கிறோம், நம் சந்ததி என்னென்னவெல்லாம் இழக்கப்போகிறெதென்று.