அம்மா வேலைபார்க்கும் வீட்டில்
இந்த தீபாவளிக்கு
வாங்கி வந்த
அந்துருண்டை வாசம் வீசும்
பழைய கிழியாத
பட்டு பாவாடையும் சட்டையுமணிந்து
பள்ளியில் முதல் ஆளாய் நுழைந்து
சிட்டு குருவியாய் சுற்றி திரிகையில்
தலை நிறைய மல்லிகையுடன்
நறுமணம் வீசும் புத்தாடையுடன்
வகுப்பு தோழிகள் வர
கூனிக் குறுகி
நீள மைதானத்தின் ஓரத்தில்
உறைந்து நின்றது அந்த
ஒற்றை செடி!
சட்டென கண்ணீர் விளைவித்த கவிதை
>>>சட்டென கண்ணீர் விளைவித்த கவிதை
nandri xavier