நம் நாட்டில் நடக்கும் கல்யாணங்களை பற்றி எனக்கு நிறைய கேள்விகள் குழப்பங்கள் உண்டு. காதல்
கல்யாணம், நிச்சயிக்கப்படட திருமணம் அது தவிர சேர்ந்து வாழுதல் என்ற புதிதாக ஒன்றும் முளைத்துள்ளது.
காதல் கல்யாணம்: காதல் அழகியலையே பெரும்பாலும் இங்கு சார்ந்திருக்கிறது.காதலிக்கும்போது ஒப்பனைகளால் மறைக்கப்படும் பலவீனங்கள் கல்யாணத்திற்கு பிறகு வெளிப்பட்டு பெரும்பாலான வாழ்க்கை பிரச்சனைகளில் முடிகிறது.ஆதலால் காதலிக்கும்போதே பலத்தோடு பலவீனத்தையும் சேர்த்து காதலிப்பது அதை புரிந்துகொள்வது உத்தமம்.
நிச்சயிக்கப்படும் கல்யாணம்: ஆராய்ந்து நோக்கின் அபத்தத்தின் உச்ச கட்டங்களை இங்கு காணலாம்.
மங்களம் என்ற 25 வயது நிரம்பிய பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதாக வைத்துகொள்வோம்.
1) மதம்
2) ஜாதி
3) பிரிவு
4) உட்பிரிவு
5) ஜாதகம்(தோஷ பொருத்தம் வேறு இதில்!!!)
6) படிப்பு
7) அன்தஸ்து
8 ) குடும்பம்
9) குணம்
10) பணம்
11) அழகு
12) வேலை
இத்தனையும் தாண்டி ஒரு வரன் அமைவதுற்குள் அவள் பெற்றொர் வார்த்தயை வேத வாக்காய் பற்றி ஒரு சுபயோக சுப தினத்தில் முன்பின் பார்த்திராத எவனோ ஒருவனை திடிரென காதலிக்க தொடங்குகிறாள். இது அத்தனையும் சரியாக வரும் பட்சத்தில்.
இல்லையென்றால் அவளுக்கு கன்வுகள் மட்டுமே தினம் வழங்கப்படும். அம்மி அகற்றி மிக்ஸி கொடுத்த ச்மூகம் கல்யாண சடங்குகளை எளிமைபடுத்த முன் வர வேண்டும்.
வணக்கம்
என் பார்வையும் அதேதான்
நிச்சயம் , நிச்சயிக்கப்படும் கல்யாணம் அபத்தத்தின் உச்ச கட்டம்தான்
இவ்வகை திருமணங்கள்தான் பெண்களை முழுக்க அடிமைகளாக வார்த்தெடுக்க பயன்படுகிறது
மற்றொருபக்கம் ஆண்கள் பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கவும் பயன்படுகிறது
கொஞ்சம் யோசித்தால் இது மிகவும் இயல்பு மீரிய செயல் என்பது புரியும்
நன்றி