நம் இருவருக்குமொரு அறிமுகம்
தேவைப்பட்டது.
அறிமுகமான நாளில் சம்பிரதாய
கைக்குலுக்கல்போல் ஒரு பார்வையோடு
புறக்கணித்தாய் என்னை.
என்ன செய்வது நீ விரும்பும் வாசமும்
கதகதப்பும் என்னால் தரமுடியாதபோது!
இரு தோழர்களுக்கிடையே நடைபெறும்
உரையாடல்களை வழிப்போக்கனாய்
பார்த்து சென்ற என் தகப்பனின் வழியிலேதான்
இன்று நானும் பயணிக்கிறேன்.
நீ
உலகம் பார்த்த நாளில்
உறவுகளை பொருட்படுத்தா
ஞானியின் மன நிலையிலிருந்தாய்
நானோ
நீ அறியா உன் சுகத்திற்காய்
மாய கரங்களால் இழுக்கப்பட்டு
குழந்தையாய் தேம்பியழுது சென்றேன்
கவனிக்கப்படாத என் கண்ணீர் துளிகளில்
காலம் கரைந்து விட்டது
உன் கடிதங்களும் முடமாகி விட்டன
அல்லது நானறியா கணிப்பொறியில்
சிக்கி விட்டன
இன்றும் நீ
ஞானியாய்தானிருக்கிறாய்
நானும்
குழந்தையாய்தானிருக்கிறேன்
Miga arumaiyaana kavithai….
yenoo palamurai padithu vittean…
keep writing.
Anbudan,
shan
nandri