தடங்கள்

ப‌ண‌ம்…ப‌ண‌ம் ஏப்ரல் 23, 2008

கோப்பு வகை: Uncategorized — bashakavithaigal @ 8:20 மு.பகல்

ச‌மீபத்தில் ம‌ருத்துவ‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ கிராம‌ சேவையை எதிர்த்து போராட்ட‌ம் ந‌ட‌த்தியிருக்கிறார்க‌ள்.ம‌ருத்துவ‌ மாண‌வ‌ர்க‌ள் உட‌னே காசு பார்க்க‌ துடிக்கிறார்க‌ள் என்ற‌ குற்றச்சாட்டு ஒரு புற‌மும்,ம‌ருத்துவ‌ர்க‌ளை நிய‌ம‌ன‌ம் செய்யாம‌ல் அர‌சு செய்யும் த‌ந்திர‌ம் என்றும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் இருபுற‌மும் குற்ற‌ச்சாட்டுக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. உண்மையான‌ கார‌ண‌ங்க‌ளை மாண‌வ‌ர்க‌ளின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.

காசு சம்பாரிக்க‌ நினைப்ப‌து த‌வ‌றா? க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்து 99+ % வாங்கி 5 வ‌ருட‌ங்க‌ள் வாழ்க்கையை அட‌கு வைத்து பின் அத‌ன் பிர‌திப‌ல‌னை ப‌ண‌ வ‌டிவில் அனுப‌விக்க‌ நினைப்ப‌து த‌வ‌றா? 21 வய‌தில் மென்பொறியாள‌ர்க‌ள் இல‌ட்ச‌ங்க‌ளில் புர‌ளும்போது 24 வயதாகியும் அர‌சாங்க‌ம் ச‌ம்பாதிக்க‌ விடாம‌ல் முட்டு க‌ட்டை போடுவ‌து ச‌ரியா? 25 இல‌ட்ச‌ம் குடுத்து சீட் வாங்கி அத‌ன் பிற‌கு ப‌ல‌ இல‌ட்ச‌ங்க‌ளை வாரி இறைத்து  ச‌ம்பாதிக்கும் வேளையில் த‌டை போடுவ‌து ச‌ரியா?
கேள்விக‌ள் ……….
கேள்விக‌ள்

இப்ப‌டி கேள்விக‌ள் உண்டென்றால் உங்க‌ளிட‌ம்அடிப்ப‌டையிலேயே த‌வ‌று இருக்கிற‌து. எத‌ற்காக‌ ப‌ல‌ இல‌ட்ச‌ங்க‌ளை வாரி இறைத்தீர்க‌ள்.ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ வெறியில்தானே…..
ச‌ம்பாதிக்க‌ நினைப்ப‌து த‌வ‌ற‌ல்ல‌. நியாய‌மே! அத‌ற்காக‌ தேர்ந்தெடுத்த‌ துறைதான் த‌வ‌று.இந்நாட்டில் ச‌ம்பாதிக்க‌ ஆயிர‌ம் தொழில்க‌ள் இருக்கிற‌து.
சில‌ வேலைக‌ளுக்கு ச‌ம்பாதிப்ப‌தை விட‌ சேவை போன்ற‌ சில‌ கார‌ண‌ங்க‌ள் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌வை . ஆகையால் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளாய் இருக்கும்போதே தீர்மானியுங்க‌ள். சம்பாதிப்ப‌தே பிரதானமென்றால் ஆசிரிய‌ர் பயிற்சி பள்ளி,ம‌ருத்துவ கல்லூரிக‌ளில் சேராதீர்க‌ள்.அத‌ற்கு ப‌திலாக‌ அந்த‌ காசை க‌ந்துவ‌ட்டிக்கு விட்டு கோடீஸ்வ‌ரானவ‌து எவ்வ‌ள‌வோ மேல்.
கொடுக்கிற‌ சொற்ப‌ காசுக்கு ப‌னியிலே நாள் முழுவ‌தும் நிற்க‌ முடியாது என்று எல்லையில் நிற்கும் இராணுவ‌ வீரர்க‌ள் திரும்ப‌ வ‌ந்து விட்டால் உங்க‌ளால் நிம்ம‌தியாக‌ வீட்டில் தூங்க‌ முடியுமா?? வாங்குற‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு கூட்ட‌த்துல‌ நெரிப்ப‌ட்டு இவ்வ‌ளவு தூர‌ம் ஊர்வ‌ல‌த்துல‌ நட‌க்க‌ முடியுமா என்று போலீஸ்கார‌ர்க‌ள் நினைத்தால் உங்க‌ளால் உருப்ப‌டியாக‌ ஒரு போராட்ட‌ம்தான் ந‌ட‌த்த‌ முடியுமா????

                “காதற்ற‌ ஊசியும் வாராதுகாண் க‌டை வ‌ழிக்கே”

 

One Response to “ப‌ண‌ம்…ப‌ண‌ம்”

  1. scssundar Says:

    மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.

    நன்றி


Leave a Reply